Saturday, July 25, 2015

உடல் எடையை குறைக்க ....


   டைட்டில   படிச்சுட்டு இது எதோ உடல் எடை குறைக்க டிப்ஸ்  பத்தினது அப்டினுநெனச்சு ஏமாந்துட்டீங்களா ?அது சரி . டிப்ஸ் குடுக்குற நெலைமைல  நான் இல்ல. ரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல எழுதறேன்வழக்கம்போல ரொம்ப சுத்தாம நேரா  விஷயத்துக்கு  வரேன். ஜூன் 30 2014     தீசிஸ் சப்மிட் பண்ணதுல இருந்தே கொஞ்சம் வெட்டியாதான் இருக்கேன்பி ஹெச் டி முடிச்சதும் ரெண்டு முக்கியமனா வேலைய தொடங்கனும்னு இருந்தேன். ஒன்னு வேல தேடுறது. இன்னொன்னு  எப்டியாச்சும்  உடல் எடைய குறைப்பதுகடந்த ஒரு வருஷமா இந்த ரெண்டு விஷயம்தான் என்ன செம்ம  சுத்தல்ல விட்ருச்சு . வேல தேடுனது பத்தி  இன்னொரு பதிவுல எழுதறேன். இப்போதைக்கு  உடல் எடை  குறைப்பு  முயர்ச்சிய பத்தி எழுதறேன். எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணாம நம்மளால  இருக்க முடியாது . ஒரு வேலைய ஒழுங்கா பண்றோமோ இல்லையோ  ப்ளான்  மட்டும் பக்காவா போடுவோம்எந்த ஒரு பிளானும் எங்க லாப்டாப்ல எனக்குரிய போல்டர்   ஒரு  பைல்  க்ரியேட்  பண்றது வழக்கம்.

ஓப்பநிங் படு பயங்கரமா இருந்தாலும்  பினிஷிங் எப்பவுமே நமக்கு கொஞ்சம் கஷ்டம். இந்த மாதிரி  பைல்  க்ரியேட் பண்ணி சேவ்  பண்ணி வச்சா ஒரு லாபம். லாபம் நமக்கு இல்ல நம்ம வீட்ல இருக்குறவங்களுக்கு. பெருசா என்னென்னமோ ப்ளான் மட்டும் பண்றது ஆனா ஒண்ணுத்துக்கும் பிரோஜனம் இல்ல அப்டின்னு அவங்க பேசுறதுக்கு நாமளே ஒரு வழிய  தரோம்ல அத சொன்னேன். ஆனா அதுக்கெல்லாம் பெருசா எப்பவும் பீல் பண்றதே இல்ல. எவ்ளோ   சொன்னாலும் பீல் பண்ண மாட்டேங்குறோமே அப்டினு  அவங்கள பீல் பண்ண வச்சாத்தான் நமக்கு அன்னிக்கு தூக்கம் வரும்நேரா விஷயத்துக்கு வேறேன்னு சொல்லிட்டு இன்னும் நீ எங்கள சுத்தல்ல  விட்ரமானு  நீங்க யோசிக்கறது எனக்கு புரியுது. அதனால நேரா நான் இப்போதைக்கு விஷயத்துக்கு வரேன்.

ஜூன் -ஜூலை என்னோட ப்ளான், வீட்டு   வேலை அனைத்தையும்  செய்வது. துணி துவைத்தல்,  வீட்டை மாப் கொண்டு துடைக்காமல் துணியால் துடைத்தல் மேலும் ஒன் அவர் வாகிங் செய்தல் அப்டின்னு ஒரு பிரம்மாண்டமான ப்ளான் போட்டேன். பெருசா ஒன்னும்  ரிசல்ட்  இல்லாததால செல்வா இது வேலைக்கு ஆவாது நீ  ஒரு ஜிம்ல சேருன்னாரு. எங்க அபாட்மேன்ட்லயே ஒரு ஜிம் இருக்கு, அதுக்கு பஸ்டு  போறேன்னு சொன்னேன். செல்வா  அதெல்லாம் வேலைக்கு ஆவது நீ கண்டிப்பா ரெகுலரா போமாட்ட அப்டின்னு சொன்னாரு. நாம கேப்போமா?  இல்ல அதெல்லாம் நான் போவேன்னு அடம்புடுச்சேன். ஒரு நாள் ட்ரேட் மில்ல ஒரேடியா ஓடறது அப்றோம் ஒரு நாள் போறது இல்ல. இதனால மசில் ஸ்ட்ரெயின் ஆயுடுச்சு. டாக்டர் கொஞ்ச நாளைக்கு ஏதும் பண்ண வேணாம்  அப்டின்னு சொல்லிட்டாரு . நான் ரொம்ப நாள் ஏதும் பண்ணமா விட்டுட்டேன். அப்றோம் நெறைய வேலைகள் வந்துருச்சு. சோ ஆகஸ்ட் - ஜனவரி ல எந்த எபர்ட்டும் போடல. இது சரியா வராதுன்னு செல்வாவே எங்க ஏரியால  ஒரு  ஜிம்ம கண்டுபுடுச்சு சேத்து  விட்டாரு. நானும் கொஞ்ச நாள் ரெகுலரா  போயிட்டு இருந்தேன். நம்ம எத ஆராம்பிச்சாலும் ஏதாது ஒரு தடங்கள் வரது சகஜம். குடும்ப பொறுப்புகள் காரணமா ஜிம்முக்கும் ரெகுலரா போக முடியல. ஆனா எப்டியோ மூணு மாசம் போயிட்டேன் . அப்றோம் வேல தேடுற டென்ஷன். மார்ச்லதான்  காலேஜுக்கு  அப்பலை பண்ணனும். சப்பா..... படிக்குறத விட கஷ்டம் படிச்ச படிப்புக்கு ஒரு வேலைய தேடுறது.   இந்த மூணு மாசம் ஜிம் போனதுல பெருசா ஒன்னும் எடை குறையல . ஏன்னா நாமதான் ரெகுலரா போகவே இல்லையே. இதுக்கு நடுவுல ஜி.எம்   டயட் பண்ணுங்க அப்டின்னு பிரண்ட்ஸ் சொன்னாங்க. அது ஏழு நாள் டயட். அஞ்சாவது நாள் செல்வா பாட்டி இறந்துட்டாங்க.  அதனால  அதையும் கம்ப்ளீட் பண்ண முடியல. அப்றோம் எங்க அபார்ட்மெண்ட் நண்பர்கள் மூணு பேர் சேர்ந்து யோகா பண்ண ஆம்பிச்சோம் . அதுவும் ரெகுலரா பண்ண முடியல.இப்டியே நாள  கடத்தியாச்சு. இப்போ வேலையும் கெடச்சாச்சு. இனிமே எங்க.   எதாச்சும் உருப்பிடியான ப்ளான் பண்ண வேண்டியதான். பாப்போம்.


ஆனா எனக்கு என்ன தோணுதுன்னா  ஒரு விஷயம் பண்ணும்னு உண்மையாவே அக்கறை   இருந்தா என்ன எடஞ்சல் வந்தாலும்  நாம பண்ணுவோம். அந்த அக்கறைதான் மிஸ்  ஆயுடுச்சு. அந்த அக்கறைய மட்டும் இந்த விஷயத்துல  உருவாக்கிகனும்னு நெனைக்குறேன். கரெக்டுதான?  படித்தமைக்கு மிக்க நன்றி.  சந்திப்போம்.

Wednesday, July 2, 2014

யூ. கே அனுபவங்கள் /சொதப்பல்கள் /பல்புகள்




அப்பாடா ஒரு வழியா தீசிஸ் சப்மிட்  பண்ணியாச்சு . இன்னும் கொஞ்ச மாசத்துக்கு வெட்டி தான்ஒரு வழியா  எழுத நேரமும் கெடச்சாச்சு. என்ன எழுதலாம்னு யோசிச்சப்ப எப்பவும் போல நாம சொதப்புனதையே எழுதலாம்னு  இருக்கேன். என்னன  சொதப்பி இருக்கோம்ணு  யோசிச்சா ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. அதுல ரொம்ப பழைய அனுபவத்த தூசு தட்டலாம்னு தோனுச்சு. சொதப்றது மட்டும் இல்ல பல்புகள் வாங்குறதும் நமக்கு ரொம்ப சகஜம்பின்ன நம்ம தலைவர் வடிவேலு சொல்லி இருக்கார்ல ," வெற்றியும் தோல்வியும்  வீரனுக்கு  ஜகஜம் " . அவர் இத சொல்ற ஸ்டைலே தனி தான் .

சரி நேரா விஷயத்துக்கு வருவோம். நானும் செல்வாவும்  2010  யு.கே  போயிருந்தப்ப  நடந்த அனுபவத்த தான் எழுதப்போறேன்நாங்க ஜூலைல போனோம் . அக்டோபர்ல செல்வாவுக்கு பிறந்த நாள். எதாச்சும் கிப்ட் கொடுக்கணுமேன்னு தோனுச்சு. ஆனா நாம தான் வெட்டி ஆபிசராச்சே . நோ  நயா  பைசா. நாங்க இருந்த அபார்ட்மெண்ட் கிரவுண்ட் ப்லோர் சைன்ஸ்பாரீஸ்  அப்டின்னு ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்துச்சு. அங்க போகும்போதெல்லாம்  கொஞ்சம் சில்லறை மீறும். அதெல்லாம் சேத்து வைக்கலாம்னு யோசிச்சேன். ஆனா ஒரு பென்ஸ் ரெண்டு பென்ஸ் வச்சு என்ன பண்றதுன்னு ஒரே கவலை . எப்டியோ பனிரெண்டு பவுண்ட்ஸ்  சேத்துட்டேன்

ஆனா ரெண்டு கை    நெறைய சில்லரைஉண்மையாதான் . நூறு பென்ஸ் ஒரு பவுண்டு . அப்பன்னா பாத்துகோங்க எவ்ளோ சில்லரை இருக்கும்னு. அத பத்திலாம் கவலை படல. ஒன்போது பவுண்டுக்கு  டி சர்ட்   மூணு  பவுண்டுக்கு கேக் மெழுகுவர்த்தி வாங்கிட்டேன். அந்த சில்லரை கொண்டுட்டு பில் கவுண்ட்டர் போனேன் . அவர் தமிழர்னு நான் கெஸ்  பன்னல . பண்ற யோசனை இல்ல . ஆனா அவர் என்ன தமிழர்னு கெஸ்  பண்ணிட்டாரு. நீங்க தமிழரா னு  அவரு கேட்ட தமிழ்லயே அவரு இலங்கை  தமிழர்னு  புரிஞ்சது . அவ்ளோ சில்லரை  கொடுத்தது அவருக்கு சிரிப்பா இருந்திருக்கும் போல . நாம என்னிக்கும் இதபத்தி பீல் பண்ணதே இல்ல . தப்பு செஞ்சா தான் பீல் பண்ணனும். ஆனா கொஞ்சம் நேரத்துக்கு ஒரு மாதிரி இருக்கும் அப்றோம் மறந்துடும். அவருக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு அங்க இருந்து கெளம்பிட்டேன்.


சர்ப்ரைசா கிப்ட் கொடுக்கணும்னு நெனச்சேன் . ஆனா வழக்கம் போல சொதப்பிருச்சு. சீக்ரெட் மைண்டேயின் பண்றதுல நம்ம கொஞ்சம் வீக்கு . இதப் படிக்குற நண்பர்களுக்கு அவங்க பட்ட  அவஸ்தை கண்டிப்பா நெனவுக்கு வரும். மெழுகு வர்த்தி வாங்க தெரிஞ்ச எனக்கு அத ஏத்த தீப்பெட்டி வாங்க தோனல. இந்தியால அவசரத்துக்கு அடுப்புல பத்த வச்சு குற நெனைப்புல மறந்துட்டேன். அங்க எலெக்ட்ரிக் அடுப்பு . பிறந்த நாள் அன்னிக்கு தான் இந்த பல்ப் எரிஞ்சுச்சு. பின்ன செல்வாதான் தீப் பெட்டி வாங்கிட்டு வந்தாரு . செல்வாக்கு ஒரே ஷாக்கு . எப்டி கிப்ட் வாங்குனேன்னு. நடந்தத சொன்னேன் . எப்டி இப்டி கூச்சமே இல்லாம அவ்ளோ சில்லரை எடுத்துட்டு போக முடிஞ்சது உன்னாலனு  கேட்டாரு. அப்பத்தான் தோனுச்சு அந்த இலங்கை தமிழர   மட்டும் இனிமே சந்திக்க கூடாதுன்னு .

அங்கதான் ஒரு ட்விஸ்ட். நான் திடீர்னு தனியா இந்தியா திரும்ப வேண்டி இருந்துச்சு. செல்வா காலைல நாலு மணிக்கு ஏர்போர்ட் போறதுக்கு கேப் புக் பண்ணாரு. நாங்க இருந்தது மில்டன் கீன்ஸ் . அங்க இருந்து லண்டன் ஏர்போர்ட் ஒரு மணி நேரம் . இறங்கும் போதுதான் அந்த கேப் டிரைவர் என்ன பாத்தாரு . ஒங்கள எங்கயோ பாதுருக்கனேனு கேட்டாரு . அப்டியானு கேட்டுட்டு விட்டுடோம் . ஆனா எனக்கு தெரியும் அவர் யாருன்னு . அவர்தான் அந்த பில் கவுண்டர்ல இருந்த இலங்கை தமிழர்நெறைய பார்ட் டைம் வேல செய்றதா பேசிட்டு வந்தாரு . அனேகமா அவருக்கும் தெரிஞ்சுருக்கும்னு  நெனைக்குறேன் . ஜென்டில்மேன். சில்லர விஷயத்த பத்தி ஏதும் சொல்லல. இதெல்லாம் சகஜமப்பா .

ஒரு வழியா தனியா ப்ளைட் ஏறிட்டேன். பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ். ஒரே ப்லைட்டா புக் பண்ணி இருந்தாரு செல்வா . அவருக்கு ஒரே டென்ஷன் . இந்த பொண்ணு எப்டி தனியா போக போகுதுன்னு . செல்வா இந்த மாதிரி விஷயத்துல என்ன சாமணியத்துல நம்ப மாட்டாரு . வேற வழியில்லாம போச்சு. கடைசி வரைக்கும்  அவருக்கு  டென்ஷன்  கொடுத்துட்டேன். கெளம்புற நேரத்துல செல் போன மறந்துட்டேன்ஒரு  வழியா பெர்மிசன்  வாங்கி உள்ள வந்து குடுத்தாரு . நான் என்னமோ சென்னை ஏர்போர்ட் மாதிரி ஈசியா இருக்கும்னு  நெனச்சென் . ஒரு ஊரு  மாதிரி இருந்துச்சு . ரெண்டு பில்டிங் தாண்டி அப்றோம் ஒரு சின்ன ட்ரைன்  புடிச்சு ப்ளைட் நிக்கற எடத்துக்கு போக வேண்டி இருந்தது. ஏர்போர்ட் குள்ள ட்ரைன் இருக்கும்னு நான் நெனைக்கவே இல்ல .
ஒரு வழியா பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் கேட்வேக்கு  போயிட்டேன்என் பக்கத்துல ஒரு ஆண்டி . 50-60  வயது இருக்கும். அவங்க மகளோட டெலிவெரிக்கு வந்திருந்தாங்க போல. ஆங்கிலம் தெரியாததால கொஞ்சம் கஷ்டப் பட்டாங்க. யு. கே  பத்தி ஒரே பொலம்பல். என்ன ஊரு இது. துணி காய போட கூட எடம் இல்ல. இனிமே இங்க வர மாட்டேன்னு  பேசிட்டே வந்தாங்க. நாமதான் ஊம் கொட்றதுல பேரு போனவங்க. நல்லாத்தான் போயிட்டு  இருந்தது. கடசில இறங்கும்  போது   ஒரு பார்ம்  கொடுத்து பில் பண்ணச் சொன்னாங்க. அந்த ஆண்டி நீயே  பில் பண்ணேன்னு கேட்டாங்க. நானும் பில் ண்ணேன். பில் பண்ணி முடிச்ச ஒடன பின்னாடி இலங்கை  தமிழர்கள் உக்காந்து இருந்தாங்க. அந்த ஆண்டி அந்த பார்ம  அவங்க கிட்ட குடுத்து , எம்பா இந்த பொண்ணு இத ஒழுங்கா பில் பண்ணி இருக்கானு பாருனு  சொன்னாங்கஒரு ஆயிரம் பல்பாது என்னோட மொகத்துல எரிஞ்சிருக்கும். இதெல்லாம் எப்டி நடக்குது . நம்ம மொக ராசின்னு நெனைக்குறேன்.

இறங்கின பிறகும் அவங்க என்ன விடல. நள்ளிரவு ஒரு மணிக்கு வந்தோம். அவங்க மகன் வந்து கூட்டிட்டு போற வரைக்கும் கூட தான் இருந்தாங்க. எல்லாம் சரி ஏன்  அந்த அம்மா அப்டி சொன்னாங்கன்னு  தெரியல . இத்தனைக்கும், என்ன பண்ற பாப்பான்னு கேட்டப்போ, பி.ஹெச். டி பண்றேன்னு சொன்னேன். ஒரு வேல அதான் நம்பலையோ  என்னமோ. போகட்டும் போகட்டும். வீரர் வாழ்கைல இதெல்லாம் ஜகஜம்

எனக்கு எப்பவும் ஒரு சந்தேகம் இருக்கும் . நம்ம பதிவ  படிக்குறவங்க கடைசி வரைக்கும் படிப்பாங்களா இல்ல  நடுவுலே போர் அடிச்சு க்ளோஸ் பண்ணுவாங்களான்னு. நீங்க இறுதி வரைக்கும் படிச்சி இருக்கீங்க . நன்றி .அடுத்த பதிவுல சந்திப்போம் .

Sunday, April 13, 2014

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு  வாழ்த்துக்கள் 

Tuesday, December 31, 2013

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு  உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். 

Monday, October 28, 2013

ரயில் பயணங்களில்- part 1

 இந்த பதிவ கிட்டதட்டடைப் பண்ணி முடிக்கும்போது இந்த யாகூ தட்டச்சு சொதப்பிருச்சு. கூகுள் தட்டசுக்கு என்ன ஆச்சுன்னு தெறியல.  அதுல டைப் பண்ண முடியல. பாப்போம் இந்த வாட்டி சொதப்பாம முடிக்குரனானு. இப்படி இன்னைக்கு எழுதியே  தீரணும்னு ு நான் நெனைக்குறதுக்கு காரணம் இன்னைக்கு காலைல ரயில்வே ஸ்டேஷன்ல பாத்த சம்பவம். 



காலைல தாம்பரம் ஸ்டேஷன்ல எட்டு முப்பது ட்ரைன எப்பவும் போல மிஸ் பண்ணிட்டேன் . அப்போ என்னாச்சு ஒரு அம்மா தன்னோட பத்து வயசு கொழந்தய முதல்ல ரயில்ல ஏத்திட்டு அவங்க ஏற முயற்சி பண்ணாங்க ஆனா முடியல. அதுக்குள்ள ரயில் வேகமா கெளம்பிருச்சு. கொழந்த அழ ஆரம்பிச்சுருச்சு. அந்த அம்மா அதிர்ச்சில அப்டியே நின்னுட்டாங்க. அப்போ அந்த ட்ரைன மிஸ் பண்ண ஒருத்தர் வேகமா ஓடி ட்ரைன்ல ஏறி அலேக்கா கொழந்தய தூக்கி பின்ன சூப்பரா ஜம்ப் பண்ணி கொழந்தய அவங்க அம்மாட்ட குடுத்தாரு. சூப்பர்ல. வேகமா போற ரயில்ல ஏறக்கூடாதுன்னு மிஸ் பண்ண ஒருத்தர் ஒரு கொழந்தைக்காக ஏறி  அந்த ரயில மறுபடியும் மிஸ் பண்ணி......ச  சூப்பர்.  அந்த கொழந்த அழூம்போது எல்லாருமே ஒரு நிமிஷம்  ஸ்தம்பிச்சு நின்னப்ப டக்குனு களத்துல எறங்குற தைரியம்  அவர் ஒருத்தற்குத்தான் இருந்தது. இப்பிடி மனுஷங்களாலதான் மழ பெய்யுது போல. படிச்சதுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம். 

Sunday, June 16, 2013

என் இனிய சொதப்பல்கள் - பகுதி- ?

அதென்ன பகுதி -? அப்டின்னு நெனைக்குறீங்களா ? எதோ கொஞ்சம் சொதப்பி இருந்த கவுண்ட் கரெக்டா தெரியும் .ஏக போகமா சொதப்பி இருகோமா . அதான் அந்த கேள்வி குறி . சரி ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வருவோம். இந்த ஆண்டின் முதல் பதிவு (கொஞ்சம் லேட் தான் இல்ல ?). ரொம்ப வருஷமா எழுதனும்னு நெனச்சுட்டு இருந்த ஒரு பதிவு. கடந்த காலத்த அப்பிடியே மனக்கண்  முன்னால கொண்டுவந்தா சட்டுன்னு
செம்ம பிக்சர் க்லாரிட்டியோட ஞாபகத்துக்கு முந்திட்டு வரது பள்ளி நாட்கள்தான்.  இந்த பதிவும் பள்ளி நாட்கள்ல நடந்த ஒரு சின்ன நிகழ்வப்பத்திதான்.

அப்போ நான் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். ஒரு நாள் என்னோட வகுப்பறைக்கு ஒரு சர்குலர் வந்துச்சு . அதுல இந்த தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்குற ஒரு மாணவி பள்ளி தலைமை ஆயசிரியையை  சந்திக்கணும் அப்பிடினு இருந்துச்சு. அப்போ  லஞ்சு டைம்னு நெனைக்குறேன். சரி ஏதாது  வம்பான வெவகாரமா இருக்கும்னு  அப்போதைய வகுப்பு மாணவர்   தலைவி செல்வி சுமித்ரா  என்ன விஷயம்னு கூட சொல்லாம ஹெச் எம் ஒன்ன கூப்டாங்கன்னு சொன்னா .  சுமித்ராக்கு என் மேல என்ன காண்டோ தெரியல. சரி நானும் ஹெச் எம்ம  போய் பாத்தேன் . அங்க என்ன மாதிரியே நெறைய பேர் ஆல்ரெடி இருந்தாங்க. விஷயம் என்னன்னு அவங்ககிட்ட கேட்டுப்பாத்தேன். அங்கயும் வொய் ப்ளட் சேம்   ப்ளட்  கதைதான். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு எங்க எல்லாரையும் கெடா வேட்டபோற மாதிரி இன்னொரு பில்டிங்குக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கப் போனா நெறைய அங்கிள்ஸ் காதுல ஹெட் செட்டோட ஒக்கந்துருந்தாக . இதென்னடா  வம்பா போச்சுன்னு மனசுக்குள்ள பீதி கெளம்ப  முழிச்ச எங்க எல்லாரையும் பாத்து, அங்க இருந்த ஒரு அங்கிள் , "நாங்க வானொலி நிலையத்ல இருந்து வரோம் . நீங்க எல்லாம் ஒரு சின்ன பேட்டி குடுக்கணும்னு சொன்னாரு". அப்போ என் மனசு பூரா நெறஞ்சு இருந்தது என் சக மாணவி சுமித்ரா தான். இப்பிடி நம்மள கோர்த்து விட்டுட்டாளேன்னு ஒரு அங்கலாய்ப்பு . ஏற்கனவே பீதில இருந்த எனக்கு இன்னொரு பெரிய பீதி காத்துட்டு இருந்தது . அந்த ரேடியோ அங்கிள் ,"நீங்க எல்லாரும் உங்க பள்ளி நூலகத்த பத்திதான் எனக்கு பேட்டி கொடுக்கப்போறீ ங்கன்னு சொன்னாரு". என்னது நம்ம பள்ளிகூடத்துல நூலகமா ? அது எங்க இருக்குனு யோசிச்சிட்டு இருந்தப்ப தான் யாரோ பக்கத்துல்ல இருந்தப் பொண்ணு சொல்லிச்சி நம்ம இப்போ ஒக்காந்துட்டு இருக்குற எடம்தான் நம்ம ஸ்கூல் லை ப்ரேரின்னு . லைப்ரேரியாஅப்போ புக்ஸ் எங்க? எனக்கு ஒரே கொழப்பமா இருந்துச்சு .அப்போ அந்த அங்கிள் எல்லாருக்கும் ஆல் தி பெஸ்ட் நல்லா பேசுங்கன்னு சொன்னது எனக்கு மட்டும் நல்லா சொதப்புங்கன்னு சொன்ன மாதிறியே கேட்டுச்சு. எனக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா ? நீங்க எந்த மாதிரி புக்ஸ் லைப்ரரில படிப்பீங்க ?. லைப்ரரி எங்க இருக்குன்னே இன்னைக்குதான் கண்டு புடுச்சிருக்கோம் .அதுக்குள்ல எங்க படிக்குறது?கொஞ்சம் எங்களுக்கும் டைம் கொடுக்கணும்ல . நான் கொஞ்சம் தயங்கினது அந்த அங்கிளுக்கு புருஞ்சிருக்கும் போல .சும்மா எதாச்சும் சொல்லுமா . நல்ல மனுஷன் . நானும்,  எனக்கு கவிதைலாம் புடிக்கும்னு சொன்னேன். உடனே அவரு புது கவிதையா இல்ல மரபுக் கவிதையானு கேட்டாரு . இப்பதான இவர நல்லவர் னு நெனச்சோம் .அதுக்குள்ள ஏன் இவரு பேர கேடுதுக்குறார்னு நெனசுக்குட்டேன் .உடனே நானு ,"ரெண்டும் படிப்பேன்னு  "ஒரு பொதுவான பொய்ய சொல்லி சமாளிச்சேன். ஆனா அந்த அங்கிள் நேஜாமாலுமே நல்லவர்தான். அந்த ஒரு கேள்வி தான் கேட்டாரு. இந்த மாதிரி எல்லார்ட்டயும் ஒரு கேள்வி கேட்டு முடிச்சு நாங்க அங்க இருந்து கெளம்பிட்டோம். அப்புறம் அந்த பேட் டி ரெண்டு நாள் கழிச்சு ஒலிபரப்பு ஆகும்னு  ஹெச் எம் மைக்குல அனௌன்ஸ் பண்ணாங்க . கிளாஸ்ல எல்லாருக்கும் ஒரே குஷி . கொஞ்சம் சந்தோஷமா இருந்தாலும் உள்ளுக்குள்ள என்னமோ ஒரு டென்ஷன் இருந்துச்சு. வீட்டுக்கு வந்து சொன்னப்போ அப்பா அம்மா தம்பிங்க எல்லாரும் சந்தொஷப்பட்டாங்க .அன்னிக்கு ராத்திரி ரொம்ப நேரம் வீட்ல எல்லாரும் ஒக்காந்து சந்தோஷமா பேசிட்டு இருந்தோம்

மறு நாள் காலைல அப்பா பாட்டி சீரியஸ்னு திருநெல்வேலிக்கு கெளம்பிட்டார் . நம்ம டைம் சூப்பரா வொர்க்கௌட் ஆக ஆரம்பிச்சுருச்சு .பாட்டி டென்ஷன் ஒரு பக்கம் ரேடியோல  பேட் டி கேக்கனும்ங்  டென்ஷன் இன்னொரு பக்கமா இருந்துச்சு. அப்போதான் பாட்டி இறந்த தகவல் வந்துச்சு. சரி ரேடியோ பேட்டி அம்பேல்னு அந்த பீலிங்க  மூட்ட கட்டிட்டு நானும் எங்க ஊருக்கு போய் ட்டேன் . இந்த ரேடியோ விஷயம் பத்தி என் பெரியம்மா பொண்ணு கிட்ட சொன்னேன். உடனே அவ  சொன்னா, "ஒன்னும் கவலைப்படாத . அந்த நிகழ்ச்சிய நீ இங்க கூட கேக்கலாம்னு என்ன சமாதானபப்டுத்துனா ". சென்னை ரேடியோ ஸ்டேஷன் வேற நெல்லை ஸ்டேஷன் வேறன்ற டெக்னாலஜி லாம் எங்க ரெண்டு பேருக்கும் தெரியல. எங்க ஊர் செம்ம கிராமம் . ரு  சில வீட்லதான் ரேடியோவே இருக்கும் . நானும் என் பெரியம்மா பொண்ணும் ரேடியோ இருக்குற வீட்ட கண்டு புடிச்சி ரேடியோ கேட்டோம் . ஒன்னும் நடந்த பாடு இல்ல . சரி நாளைக்கு ஒலிபரப்புவாங்கனு,  தொடர்ந்து ஒரு அஞ்சு நாளைக்கு அந்த வீட்டுக்கு நடையா நடந்தோம் . அப்புறம் என்ன ? மாத்தம்தான் மிச்சம். பெரியவங்ககிட்ட   ஒழுங்கா விஷயத்த சொல்லி இருந்தா அட்லீஸ்ட்டு   வெட்டியா நடந்ததாவது தவிர்த்து இருந்திருக்கலாம். நம்ம டைம் அப்டி


சரி  ஒரு வழியா சென்னை வந்து ஸ்கூலுக்கு போனேன் . அப்போ என் வகுப்பு ஆசிரியை திரு. வசந்தகுமாரி மேடம் என்ன கூப்ட்டு ,"நான் நீ ரேடியோல பேசினத கேட்டன்னு சொன்னாங்க ". வெந்த புண்ணுக்கு மருந்து போட்ட மாறி இருந்துச்சு . அப்புறமா நான் யோசிச்சப்பதான் எனக்கு ஒன்னு வெளங்குச்சு . மேடம் பேசுனத கேட்ட ன் னு சொன்னாங்க .நல்லா பெசுனனா இல்ல சொதப்புனானு சொல்லலையே . அவங்கள்ட்ட போய் கேக்கவும் பயம் . வேற யாரும் கேக்கவும் இல்ல . ஏன் நானே கேக்கல பின்ன எப்டி தெரிஞ்சுக்குறது . அது போகட்டும் அந்த லைப்ரேரில ஏன் புக்ஸ் இல்ல ?இன்னைக்கு வரைக்கும் அந்த கேள்விகள்  என் மனசுல ஒரு புதிராவே இருக்கு. பீலிங்க்ஸ் பீலிங்க்ஸ். நாங்களும் பீலிங்க்ஸ் எண்டிங் கொடுப்போம்ல . இன்னுமா படிக்குறீங்க . நீங்க நியாயத்துக்கு நல்லவங்க போங்க . இவ்ளோ தூரம் படிச்சு இருக்கீங்க . அதோட விடுவோமா . இன்னும்  இருக்கு . படிங்க . இந்த பதிவுல எவ்வளவோ எழுத்து  பிழை இருந்தும் கடைசி வரைக்கும் படிச்சீங்க பாருங்க . உங்க தமிழ் ஆர்வம் எனக்கு ரொம்ப புடுச்சி இருக்குங்க . சாரி லைட்டா கலாய்ச்சுட்டனா. ரொம்ப நன்றி இந்த பதிவ படிச்சதுக்கு (கலாய்ச்சாலும் நன்றி உணர்ச்சி உள்ளவங்க நாங்க ). அடுத்த பதிவில் சிந்திப்போம்

-