Friday, July 27, 2018

எஸ்.ஆர்.எம் அனுபவங்கள்




ஜூன் 29, 2015. நிஜமாலுமே  வாழ்க்கையில மறக்க முடியாத நாள். அன்னிக்குத்தான் நான் எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்துல துணை பேராசிரியரா வேலைக்கு சேர்ந்தேன். ஜூன் 2014 லயே  பி.ஹெச் .டி. தீசிஸ்  முடுச்சிட்டு கிட்டத்தட்ட ஒரு வருஷம் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு போட்டு அலுத்து போயிருந்தப்ப   ஒரு நிறுவனத்துல வேலை கெடச்சுது. அந்த வேலை எனக்கு பிடிக்காததால  அந்த வேலைய மிகுந்த மன வருத்தத்தோட விட்டென் . விட்ட அன்னிக்கு ஈவினிங் தான் எஸ். ஆர். எம் இருந்து இன்டெர்வியூ  கால் வந்துச்சு. எனக்கு வந்த ஒரே காலும்  அது தான் .அதுவும் அன்னிக்கு வந்தது ஒரு பெரிய மேஜிக்  மாதிரி இன்னிக்கும் தோணும்.  ஜூன் 8  இன்டெர்வியூ. ஒரு பதினைந்து நாட்கள் கழித்து ஒரு சனிக்கிழமை  காலை எஸ்.ஆர்.எம் இருந்து எனக்கு நீங்க செலக்டட்  னு கால் வந்துச்சு. அன்னிக்கு நானும் என் குடும்பத்தாரும் பட்ட சந்தோஷத்திற்கு அளவு இல்ல.  இந்த வாழ்க்கை என்னை எஸ். ஆர். எம் யே  இருக்க வைக்குதோ  இல்லையோ , எனக்கு எஸ். ஆர். எம் எப்பவுமே ஸ்பெஷல் தான்.

ஆசிரியர் ஆகணும்கிறது என் கனவு. அண்ணா பல்கலைக்கழத்துல வேலை செய்யும் பொழுது என்னோட பேராசிரியர்கள்  ரஞ்சனி மேம்  , கீதா மேம் எனக்கு பாடம் எடுத்திருக்காங்க.  நாம கூட பின்னால இந்த மாதிரி எடுக்கணும்னு அவங்க கிட்ட இருந்து சின்ன சின்ன நுணுக்கங்களை தெறிஞ்சு வச்சுப்பேன். இப்பவும் என்னோட பி.எச்.டி  ஸ்காலர்ஸ்க்கு மேம் என்ன எப்படி  கைடு பன்னாங்களோ  அதேயேதான் பாலோ பண்றேன் .அவங்கள மாதிரியே நானும் எனக்கான விதிமுறைகளை வச்சுருக்கேன் . இந்த பதிவுல என்னோட  ஆசிரியர்  அனுபவங்களை பதிவு செய்யறேன் .

அண்ணா பல்கலைக் கழகம் மாதிரியே தான் எஸ் ஆர் எம்மும் இருக்கும் அப்டினு ஜூன் 29, காலைல வேலைக்கு சேர போனேன் . உள்ள போகும்போதே ஒரு ய்யன் பயங்கரமா ஆரஞ்சு கலர்ல கூலிங் க்ளாஸ் போட்டுட்டு  பயங்கர ஸ்டைலா லைப்ரரிக்கு போயிட்டு இருந்தான் . எனக்கு  கொஞ்சம் பயமா இருந்துச்சு. அப்புறம் முதல் க்ளாஸ் நாச்சுரல் லாங்குவேஜ்  ப்ராசஸிங்  பி.   மூன்றாம் ஆண்டுக்கு எடுத்தேன் . அது எலெக்ட்டிவ்  பாடம். 20 பேர் தான் அந்த பாடத்தை தேர்வு செய்து இருந்தாங்க. கொஞ்ச நாள் ஆக ஆக பயம் தெளிஞ்சு  போச்சு. பசங்க பாக்கத்தான் ரொம்ப ஸ்டைலா  இருக்காங்க ஆனா அவங்களும்  குழந்தைகள் தான் அப்டிங்குறத நான் உணர்ந்துக்கிட்டேன்.

எஸ். ஆர்.எம் பல்கலைக்கழகம் ஒரு குட்டி இந்தியா மாதிரி இருக்கும். அங்க வேலை பாக்குறேன் அபிடுங்குறதிக்காக இல்ல . நிஜமாலுமே ஜம்மு முதல் குமரி வரை மாணவர்கள் இருப்பாங்க. வெளிநாட்டு மாணவர்கள் வேற.  நான் பெருசா தமிழ்நாட்டை விட்டு போனதில்லை.  ஒரே முறை  யூ .கே  அப்பறோம் அண்ணா பல்கழகம் மூலமா ..டி  பாம்பே , கோரக்பூர் , ...தி ஐதராபாத் போயிருக்கேன். ஆனா இங்க வந்து அத்தன  ஊர்ல இருந்து வந்து படிக்குற மாணவர்களை பத்தியும்  அவங்க ஊர  பத்தியும் தெருஞ்சுகிட்டேன். ஒரு விஷயம் எனக்கு புரிய ஆரம்பிச்சது. மொழி , கலாச்சார வேறுபாடுகள்  எதுக்குமே ஒரு தடையா இருக்க முடியாது.

நம்ம வேலைய ஒழுங்கா செஞ்சா  எல்லாரோட அன்பயும்  மரியாதையையும்  பெற முடுயும்னு இங்க வந்து தெரிஞ்சுகிட்டேன்.  எம்.   முடுச்ச உடனேயே 2006 சவீதா பொறியியல் கல்லூரில 9 மாதம் ஆசிரியரா வேலை செஞ்சேன். எனக்கு ரொம்ப புடுச்சு இருந்தது. பி.எச்.டி காக தான் அத விட்டுடு  அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தேன் . 2006 இருந்த மாணவர்களுக்கும் இப்போ 2018 இருக்குற மாணவர்களும் அசுர வித்தியாசத்தை உணர முடியுது . என்னோட சவீதா மாணவர்களை நான் கொறச்சு சொல்லல . சொல்லவும் முடியாது. அவங்க ரொம்ப அன்பானவங்க  திறமை சாலிங்க. அவங்கள பத்தி இந்த பதிவு பல வருடங்களுக்கு முன்னாடி எழுதி இருந்தேன்http://subalalitha.blogspot.com/2007/02/mini-achievement-mega-santhosham.htmlகிட்டத்தட்ட அங்க இருந்து அண்ணா பல்கலைக்கழகம்  வந்து  மூன்று வருடம் கழித்து எனக்கு திருமணம் ஆச்சு .இருந்தாலும் என்னோட மாணவர் சதீஷ் என் திருமணத்திற்கு வேலூர் வரை வந்தத என்னால இன்னுமும் மறக்க முடியாது. இன்னமும் அந்த மாணவர்கள் எனக்கு பிறந்தநாள் அன்னிக்கு வாழ்த்து  அனுப்புவாங்க . நான் சொல்ல வந்தது,  அப்போ மாணவர்களுக்கு  இருந்த  தொழில் நுட்ப   எக்ஸ்போஷர் வேற இப்போ உள்ள மாணவர்களுக்கு இருக்குற வசதிகள் வேற.
நான்  எஸ்.ஆர். எம்லவேலைக்கு சேர்ந்த முதல் ஆண்டு சி  ப்ரோக்ராம் சொல்லி குடுத்தேன் . அந்த வகுப்புல 70 மாணவர்கள். ஒரு 50 மாணவர்களுக்கு ஆல்ரெடி சி, சி++, ஜாவா தெறியும் . நான் ஆரம்பிக்குறதுக்குள்ள எல்லாத்தயும் சொல்லி முடிச்சுடுவாங்க.  ஆனா அந்த மிச்ச 20 மாணவர்களுக்கு நான் சொல்லி குடுத்தே ஆகணும். மனசுக்குள்ள அப்போ நெனச்சுப்பேன். "டேய் தம்பிகளா அக்கா சொல்லி  முடுச்சுறேன் டா  என்ன பேச உடுங்க டா" . இந்த பிரச்சனை  நாச்சுரல்  லாங்குவேஜ் ப்ராசஸிங் பாடத்துக்கு இல்ல. நான் தான் அந்த பாடத்துக்கு முதல் ஆசிரியை . அதுவும் 20 மாணவர்கள் . அது புதிய தொழில்நுட்பம் அப்டிங்குறதால  மாணவர்கள் ஆர்வமா கவனிச்சாங்க. போன வருடம் அந்த பாடத்தை 240 பேர் தேர்வு செஞ்சு இருந்தாங்க . இது எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை குடுத்தது .  சி ப்ரோக்கிராம் விஷயத்துக்கு வரேன். நம்ம டீசிங் ஸ்டைலை மாத்தி பாத்தா என்னனு யோசிச்சேன் . பசங்களுக்கு தெரியாத விஷயம் எதாவுது ஒண்ண நாம தெரிஞ்சு அதாவூது ரியல் வேர்ல்ட் அப்ளிகேஷனோட பாடம் எடுத்தா பசங்க கவனிப்பாங்க. நேத்து என்கிட்டே சி ப்ரோக்ராம்மிங்  படிச்ச பையன் ( இப்போ மூன்றாவது ஆண்டு ) என் கிட்ட மெஷின் லேர்னிங் மற்றும் நாச்சுரல்  லாங்குவேஜ் ப்ராசஸிங் ஒரு ப்ராஜெக்ட் செய்ய என்ன நியாபகம்  வச்சு வந்து இருந்தான் . ரொம்ப சந்தோஷமா இருந்தது

சமீப காலமா அதுவும் சுந்தர் பிச்சை அவர்கள்  இந்தியா  வந்து இருந்தப்ப மெஷின் லேர்னிங் முக்கியம்னு  மாணவர்கள் மத்தியில குடுத்த   பேட்டியில்  சொல்லியிருந்ததால  நிறைய மாணவர்கள் மெஷின் லேர்னிங் பாடத்தை தேர்வு செய்ய ஆரம்பிச்சாங்க. எனக்கு ஓரளவுக்கு அத பத்தி தெரியும் ஆனா  அத பத்தி அப்டேட்  செஞ்சே ஆகணும்னு தோணுச்சு . நானும் அந்த பாடத்தை எடுக்க  ஆரம்பிச்சேன் . இப்போ ரெண்டாவது முறை எடுக்குறேன் . இந்த சமயம் போன சமயத்தை விட இன்னும் ஆழமா மெஷின் லேர்னிங் பத்தி புரியற மாதிரி இருக்கு . முதல் நாள் மெஷின் லேர்னிங் வகுப்பு ஆரம்பிக்குறதுக்கு  முன்னாடி நாள் ஒரு மாணவன் என்கிட்டே வந்து சொன்னான், "நான் உங்கள தான்  மெஷின் லேர்னிங் படத்துக்கு தேர்வு செஞ்சிருக்கேன் . நான் ஆண்ட்ரு என்.ஜி. மெஷின் லேர்னிங் ஆன்லைன் கோர்ஸ்  முடிச்சிட்டேன் . தீப் லேர்னிங் கோர்ஸும் முடுச்சிட்டேன் . இன்னும் என்ன பண்ணனும் அப்டினு கேட்டான்  ". நான் மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன் , "இதுவரைக்கும் நீ பண்ணதே  போதும் தம்பி ". இப்ப இருக்குற மாணவர்கள் முன்னாடி போய்  நிக்குறதுக்கே நம்மல  நெறய அப்டேட்  பண்ண வேண்டி இருக்கு . இல்ல  க்ளாஸ கண்ட்ரோல்ல வச்சிருக்க முடியாது . நமக்கு சாடிஸ்பாக்ஷனும் கிடைக்காது .


 இங்க எஸ். ஆர். எம் மாணவர்கள் அவங்க பாடத்துக்கு அவங்க ஆசிரியரை தேர்வு செய்ற  ஆப்ஷன் இருக்கு. நமக்கான மக்சிமம் லிமிட் முடுஞ்சதும் அடுத்த ஆசிரியரை தேர்வு செய்யலாம். நமக்கு  மாக்ஸிமம் லிமிட் பசங்க அலாட்  அகலினா   நம்மள நெறய பசங்க தேர்வு செய்யலன்னு  அர்த்தம் . அதுவும் செமெஸ்டர் முடிவுல மாணவர்கள் நமக்கு ரேட்டிங்   கொடுக்குறாங்க  . அதுவும் நம்மள இம்ப்ரூவ்  பண்ணிக்க வழி வகுக்குது .


இன்னும் இந்த துறைல ஒரு இருபது வருஷம் இருக்கணும்னா நெறய  அப்டேட்  பண்ணியே  ஆகணும்னு நினைக்குறேன் .  பாப்போம் வாழ்க்கை எப்பிடி நம்மள  கொண்டு போகப் போகுதுன்னு .

இந்த பதிவை படிக்க ஒரு பதினைந்து நிமிடமாது ஆயிருக்கும் ஒங்களுக்கு . பொறுமையா படித்ததுக்கு  நன்றி. மீண்டும் சிந்திப்போம் .

சுபலலிதா