Tuesday, July 6, 2021

எனது பயணங்களில் ...

 

ஒரு வருடத்திற்கும் மேல ஆயிருக்கு தமிழ் வலைப்பூல பதிவு எழுத.என்ன காரணம் சொன்னாலும் அது பொருத்தமானதா இருக்காதுன்னு நினைக்குறேன். நேரா பதிவிற்கே போயிடுறேன்.இத பத்தி ரொம்ப நாளா எழுதணும்னு நெனச்சிட்டு  இருந்தேன் . என்னோட எஸ்.ஆர்.எம் ல கூட வேலைபார்க்குற தோழி ஹெலன் கூட நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள பத்தி தான். ஹெலனும் நானும் ஒரே அபார்ட்மெண்ட் கூட.

 என்ன மேலோட்டமா பார்க்குறவங்களுக்கு பழக ரொம்ப இனிமையா தோணலாம். (இது சத்தியமா என் கருத்து இல்ல :) மத்தவங்க சொன்னது ). ஆனா அது உண்மை இல்ல . என்கூட ரொம்ப தூரம் பயணிக்கிறது ரொம்ப கஷ்டம். . என்னோட  குடும்பத்தினர் முக்கியமா செல்வா மற்றும் என் மகள், டக்கோலா  (அண்ணா பல்கலைக்கழகம்) நண்பர்கள் ,கல்லூரி நண்பர்கள், மற்ற சில எஸ் ஆர் எம் நண்பர்கள் கிட்ட கேட்டா நெறய சொல்வாங்க. 

 

அந்த லிஸ்டுல ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி சேர்ந்தது ஹெலன் . ரெண்டு பேரும்  சேர்ந்துதான் காலேஜ் போவோம் . எங்க அபார்ட்மெண்ட்  மெயின் ரோட்டுல இருந்து கொஞ்சம் உள்ள இருக்கிறதால ஆட்டோல போய் அதுக்கப்புறம்  கல்லூரி பேருந்தை புடிப்போம். காலேஜ்ல இருந்து திரும்பி வரும்போது நடந்தே வீட்டுக்கு போவோம் .  வர வழில அஞ்சலி பேக்கரி போயி நடந்த கலோரீஸ பேலன்ஸ் பண்ணிடுவோம். அஞ்சலி பேக்கரில ஒரு தாத்தா இருப்பாரு. ஒரு வாட்டி  60 ரூபாய்க்கு பொருட்கள் வாங்குனோம் . 100 ரூபா குடுத்ததுக்கு அவரு 200  ரூபா திருப்பி குடுத்தாரு.  நாங்க ஸாக்  ஆயிட்டோம். ஒவ்வொரு வாட்டியும் இப்படித்தான் . ஓரளவுக்கு அந்த தாத்தா மாதிரிதான் நானும். இன்னமும் எனக்கு இந்த 100 ரூபா நோட்டும் 200 ரூபா ஒரே குழப்பமா இருக்கும் . கடையில பேலன்ஸ் குடுத்தா அத செக் பண்ண மாட்டேன் ஏனா கண்டிப்பா கன்ப்யூஸ் ஆவேன்.

 

நாங்க வழக்கமா போற சூப்பர் மார்க்கெட்ல வேல செயறவங்களுக்கு என்ன பத்தி தெரியும் .அவங்களே கரெக்டா பேலன்ஸ் செக் பண்ணி குடுப்பாங்க. ஒரு வாட்டி புது கடைக்கு போனோம் . அந்த கடையில இருந்த பொண்ணு பேலன்ஸ் செக் பண்ணுங்கக்கானு சொல்லுச்சு . நான், " நீங்களே கரெக்டாதான் குடுத்திருப்பீங்க .நான் செக் பண்ணாதான் பிரச்சனை ஆகும்" னு சொன்னேன் . அவங்களுக்கு புரியல . உங்கள பத்தி புரியிறத்துக்கு முன்னாடி இங்க இருந்து கெளம்பிடுவோம் வாங்கனு ஹெலன் சொன்னாங்க :)

 

ஆட்டோல போறோம்னா எப்பவுமே நான் கட்டணத்தை பத்தி பேச மாட்டேன் .ஆட்டோ காரர் என்கிட்டே எவ்ளோ குடுப்பீங்கன்னு கேப்பாரு . நான், இதோ இவங்க இதுக்கு பதில் சொல்வாங்கன்னு சொல்வேன். ஏனா நெறய முறை, ஆட்டோக்காரர்  மயிண்ட்லயே 60 ரூபா இருக்கும்  அதுதான்  யூசுவல் கட்டணமா இருக்கும்.ஆனா நான் 80 ரூபா ஓகே வானு கேப்பேன் . அதனால எப்பவுமே கட்டணம்லாம் டீல் பண்றது ஹெலன் தான். இதனால என்கிட்டே நெறய காசு இருக்குன்னு நெனைக்க வேணாம் :) :) அப்டி இல்ல . மணி ஹண்ட்லிங்ல  எப்பவுமே புவர் தான். இப்போதான் நெறய மாறி இருக்கேன் . பர்ஸ் தொலைக்கறதெல்லாம் ஒரு காலத்தில எனக்கு ரொம்ப சகஜமான ஒரு விஷயமா இருந்துச்சு .அது மாநகராட்சி பேருந்துல போன காலங்கள். ஒரு 6 வாட்டியாது ஏட்டி எம் கார்டு அப்ளை பண்ணி இருப்பேன்.

 

 

நானும் ஹெலெனும் நெறய ஷாப்பிங் பண்ணுவோம் .என்  மகளும் அவங்க மகளும் ஒரே ஸ்கூல் ஒரே வகுப்பு கூட . அவங்களையும் கூட்டிட்டு போவோம். சமீபத்தில ஒரு துணி கடைல நாங்க ரெண்டு பேரும்  ட்ரெஸ் எடுத்த விதத்த அந்த கடைல ரொம்ப பாராட்டினாங்க. வீட்ல போடறதுக்கு நயிட்டி வாங்குனோம் . அதுக்கு அந்த கடைல இருந்தவங்க என்ன மாதிரி டிசைன் வேணும்னு கேட்டாங்க. வீட்ல போடறதுக்கு எதுக்கு  டிசைனு? எதோ ஒரு டார்க் கலர் குடுங்கன்னு சொன்னோம் .அதுக்கு அவங்க. ப்ளீஸ் இன்னொரு வாட்டி அந்த வார்த்தையை திருப்பி சொல்லுங்களேன்னு சொன்னாங்க. ஏன் எதுக்குனு கேட்டோம் . அப்போதான் எங்களுக்கு தெரிஞ்சுது  நயிட்டி எடுக்க கூட பெண்கள் எவ்ளோ நேரம் செலவழிக்குறாங்கனு .சில பேரு  ஒரு மணி நேரம் பாத்துட்டு எதுவுமே வாங்காம கூட போவாங்களாம் . என்ன கொடும  இது.

 

எனக்கு ஒரு   சிலர்ட்ட மட்டுமே கம்பர்ட்டபிலா இருக்கும். நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுறது , உண்மையின்மை இதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாத விஷயங்கள் . ரொம்ப சென்சிடிவ்ங்கிறதாலயும்  அத காட்டிக்கவும் தெரியாததால நண்பர்கள் சூஸ் பண்றதுல ரொம்பவே கவனமா இருக்கேன் இப்போல்லாம். ஹெலன் அந்த வகைல நெஜமாவே எனக்கு மிகப் பெரிய பலம். அவங்க மூலமா சுப்ரஜா அப்படிங்கிற இன்னொரு தோழியும் கெடைச்சாங்க. என்கூட வேலை செய்றாங்க . ரொம்ப இன்டர்ஸ்டிரிங் கேரக்டர்.  ஆனா அவங்க ஹெலெனலாம் வேற டிபார்ட்மென்ட் . வாழ்க்கையில ஒரு குறிக்கோள நோக்கி போறவங்கள எனக்கு ரொம்ப புடிக்கும். குறிப்பா பெண்கள் :)  அதே சமயம் நேர் வழில மத்தவங்களுக்கு எந்த பாதகமும் இல்லாம இருக்கிறவங்க எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்.

 

இப்போ நான் எழுதப்போற லைனுக்கு  கண்டிப்பா ஹெலன் டென்ஷன் ஆவாங்க . நெறய சாரி தேங்க்யூ சொல்வேன் .எப்பவுமே என்ன கிண்டல்  பண்ணுவாங்க  ஆனா இத சொல்லியே ஆகணும் .என்ன மாதிரி ஒரு கேரக்டரோட பயணிக்குறது எவ்ளோ கஷ்டம்னு எனக்கு நல்லா தெரியும் . இருந்தும் இன்னமும் கூட  பயணிப்பதற்கு மிக்க நன்றி  ஹெலன் :) :) :)

 

படித்த உங்களுக்கும் மிக்க நன்றி :)

சுபலலிதா

Friday, March 20, 2020

கவிதை முயற்சி



இது என்ன டிசைன்னு புரியல. இல்ல ட்ரஸ் டிசைன் இல்ல :) வாழ்க்கையோட டிசைனை  சொன்னேன் .  2015 வெள்ளம் வந்த சமயத்துல வீட்டுக்குள்ள இருந்தப்போ நெலம வேற. வெளிய போகமுடியாம இருந்துச்சு. இப்போ எல்லாம் முடியும் ஆனா போக பயமா இருக்கு . எனக்கென்னமோ கொரோனவால  பாதிக்கப்பட்டவங்கள விட  இந்த சூழ்நிலையை சரியா கையாளாதவங்க தான் அதிகமா இருப்போம்னு நினைக்குறேன். என்னையும் சேத்துதான் சொல்றேன். வீட்லயே எப்பவுமே இருக்கும் இல்லத்தரசிகள் , ரிட்டயர்ட் ஆன  முதியோர் இவங்களுக்கு பெருசா ஏதும் தோணாது ஏன்னா ஆல்ரெடி  அவங்க இத ஹாண்டில்  பண்ணிட்டாங்க . வெளிய நாலு பேரோட பேசி பழகுனவங்களுக்கு  நிச்சயமா கஷ்டமா இருக்கும் . எடுத்துக்காட்டுக்கு என்னைய  எடுத்துக்கிட்டா ஒரு நாளைக்கு கொறஞ்சது 50 பேர்ட்டயாது பேசுவேன் . 50  பேரும்  நெருக்கமானவங்க இல்லனாலும் தொழில் ரீதியா மாணவர்கள் ஆசிரியர்கள் கிட்ட பேசும்போது நம்ம கொஞ்சம் டைவர்ட்  ஆவோம் . வீட்டுக்கு வரும்போது மாறுபட்ட சூழ்நிலையை   பாக்ரதால கொஞ்சம் லைப்  வேற மாதிரி இருந்துச்சு . வீட்ல குடும்பத்தோட இருக்கிறது மகிழ்ச்சியான விஷயமானாலும் சில சமயங்கள்ல குழந்தைகளை  விளையாட விடாம இருக்கோமா . அவங்ககிட்ட இருந்து நமக்கு வர பிரஷர்ல நம்ம தடுமாற்றங்களை சந்திக்க வேண்டி இருக்கு. நேத்து தான் நானும்  என் பொண்ணும்  டைம்  டேபிள் போட்டு ஆக்ட்டிவிட்டி  செய்யலாம்னு முடிவு  பண்ணோம் .செல்வா ஒர்க் பிரேம் ஹோம் . நானும் மாணவர்களுக்கு  வீடியோ மூலம் சொல்லித்தறணும் . ஆனா குழந்தைகளால அப்பா அம்மா ரெண்டு பேரும்  வீட்ல எப்பயும் வேல பாக்றதா ஏத்துக்க முடியல . என் பொண்ணு கூட இருக்கும்போது லேப்டாப் கைல வச்சுக்க மாட்டேன் . மொபைல் கூட அவ வேற வேலைல பிசியா இருந்தாதான்  என்ன யூஸ் பண்ண விடுவா . இல்லனா அவ பக்கத்தில எப்பவும் நான் இருக்கணும் . சொன்னா  புரிஞ்சிப்பா  . ஆனா சில நேரங்கள்ல மக்கர் பண்ணுவா .


இதெல்லாம் நான் சரி பண்ண நான் சரியா இருக்கணும்ல . எப்பவாச்சும் கோவம் வர எனக்கு நேத்து பழைய படி ரொம்ப கோவம் வந்துருச்சு . அப்பத்தான் யோசிச்சேன் . நாம இந்த சூழ்நிலையை சரியா  கையாளணும்னு .எனக்கு புடுச்ச விஷயத்தை நான் பண்ணாலே  சீக்கிரமா சரியாயிடுவேன் . நீங்களும் என்ன  பன்னலாம்னு யோசிங்க.  எனக்கு புடுச்ச  விஷயங்கள்ல ஒண்ணு  எழுதறது .  ரொம்ப நாளா பாட்டர்ன்  பேஸ்ட்  கவிதை எழுதணும்னு யோசிச்சேன் . கவிதைங்கறது பெரிய வார்த்தையா இருக்கும் . கொஞ்ச மாதங்கள் முன்ன இன்கிரீசிங் வார்ட்  ஆர்டார்ல எழுதினேன் . அதாவது முதல் வரில  ஒரு வார்த்தை . இரண்டாம் வரில ரெண்டு வார்த்தை அப்டி. 10 வரி வரைக்கும் ட்ரை பண்ணேன். 
https://subalalithaintamil.blogspot.com/2019/07/blog-post.html
அதே மாறி வேற  பேட்டன்ல  யோசிப்போம்னு தோணிச்சு . அதான் இந்த பதிவு .   சப்பாடா  !!!! ஒரு வழியா சொல்ல வந்ததை சொல்லிட்டேன். இந்த கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேஷன்ல டைப் பண்றது நாக்கு  தள்ளுது :)


அந்த பேட்டன் இது தான் .






இந்த பே ட்டேன்ல இந்த கவிதையை பிட்  பண்ண ட்ரை பண்ணேன் . முடிஞ்சா படிங்க :) டைப் பண்ண ட்ரை பண்ணேன் முடியல . சோ எழுதி போட்டோ எடுத்தேன் . கையெழுத்து மற்றும்  எழுத்து பிழைகளை மன்னிக்கவும் :) போட்டோவை க்ளிக் பண்ணி படிங்க  :)






படித்தமைக்கு நன்றி :)

சுபலலிதா

         
                  


Monday, December 30, 2019

ஜோஷ் கல்ச்சுரல்ஸ் அனுபவங்கள்


வருஷத்தோட கடைசி நாள் . கல்லூரிக்கு  லீவு போட்டாச்சு ! சரி காலையில எழுதணும்னு தோணுச்சு. ரொம்ப நாளா எழுத யோசிச்சு வச்ச விஷயம்தான் . நேரம் இன்மையினால முடியல. எப்பவும் போல ஆங்கிலத்துல எழுத ஆரம்பிச்சேன். அப்போதான் தோணிச்சு , தமிழ்ல எழுதி ரொம்ப நாள் ஆச்சு .எனக்கு ரொம்ப போர்  அடிச்சா சில நேரங்கள்ல என் பிளாக்க  நானே படிப்பேன். அப்டி படிக்கும்போது எனக்கு என் ஆங்கில வலைப்பூவை விட தமிழ் வலைப்பூ தான் பிடிக்கும். ஆனா தமிழ்ல எழுத யோசிக்குறோமேன்னு கில்டியா இருந்துச்சு . சரி தலைப்புக்கு வருவோம் . சில நாள் முன்ன எங்க கல்லூரில ஜோஷ்  அப்டினு ஒரு கலை விழா நடந்துச்சு . அது ஆசிரியர்கள் மட்டுமே பங்கு கொள்கிற  விழா . பல போட்டிகள் நடக்கும் .வருடா  வருடம் நடக்கும் . பாட்டு  போட்டி, சமையல், மெஹந்தி , பெயின்டிங் , கவிதை, பேச்சு  போட்டி, ராம்ப்  வாக் அப்டினு நெறய போட்டிகள் இருக்கும் . இந்த மாதிரி எந்த நான் - டெக்கினிக்கல்   விஷயங்கள்லயும் நான் கலந்துக்கறது  இல்ல. அது ஏன் அப்டினு எனக்கே தெரியல . இந்த வருஷம், என் கூட வேலை செய்ற தோழி ஹெலன் , (என் பிளாட் நண்பரும் கூட )அவங்க சொல்லி நான் ரெண்டு போட்டில பேர் குடுத்தேன் . கவிதை மற்றும் பாடல் போட்டி. வெற்றி  பெறலனாலும் எனக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு . அந்த  அனுபவத்தை பத்தினதுதான் இந்த பதிவு !

ரெண்டு போட்டிக்கும் கூகுள் பாம்ல பில் பண்ணிட்டேன்னே  ஒழிய போட்டில கலந்துக்கணும் அப்டிங்குற எண்ணம் பெருசா இல்ல. அன்னிக்கு என்ன தோணுதோ பாத்துக்கலாம்னு இருந்தேன் . முதல கவிதை போட்டிதான் நடந்துச்சு . அரை மணி நேரம் குடுத்தாங்க . தலைப்பை போட்டி ஆரம்பிக்கும் முன்ன தான் குடுத்தாங்க . டான் டு டஸ்க் ( காலை முதல் மாலை வரை ). ஆங்கில கவிதை போட்டிக்கும் தமிழுக்கும் ஒரே தலைப்பு. கவிதை அப்டினாலே எனக்கு உலகத்தின் இரு மாபெரும் கவிதைகள் நினைவுக்கு வரும் .

"ஒரு சுவீட் ஸ்டாலு பணியாரம் சாப்பிடுகிறது . ஆச்சரியக்குறி :) " அப்பறோம் "மரத்திலிருக்குது காய் , மரத்திலிருக்குது காய்...." . இது உங்களுக்கு புரியலைனா மன்னிக்கவும் . நீங்க ஆதித்யா டி.வி பாக்கறது இல்லனு நினைக்குறேன் . இந்த கவிதை மாதிரி நாமளும்  எழுதிரப்போறோம்னு  ஒரே பயம். போட்டி அன்னிக்கு காலையில் "விடியல் " அப்டிங்குற தலைப்புல ஒரு  கவிதை எழுதி பிராக்டீஸ் பண்ணேன்.  அந்த வர்க் அவுட் ரொம்ப உதவியா இருந்துச்சு 

போட்டி ஆரம்புச்சு பெருசா ஏதும் தோணல . அப்புறம் எப்டியோ எழுதிட்டேன் . அந்த கவிதை கீழே .

கலையும் கனவுகளின் தொடக்கமாய் 
விடிகிறதே  ஒவ்வொரு நாளும் !

சலிப்புடன் சில நாள் ...
சிலிர்ப்புடன்  சில நாள் ...
அலுப்புடன் சில நாள்..
இதயக் களிப்புடன் சில நாள்... 
விடிகிறதே  ஒவ்வொரு நாளும் ...

அமைதி நிலவும்  அதிகாலையிலே  ...
மனமது தேடும் எதையோ !
எனையே  முதலாய் என்றெனை  அழைக்கும் கொட்டைவடிநீர் !
சிற்றுண்டி  முதல் சமைத்து மதிய உணவு பிறகு முடித்து முடிகிறது என் முதல் பரிமாணம்!

கல்லூரி பேருந்து ஏறும் அக்கணம் எடுக்கும் மறு  பரிமாணம் !
கல்விதனை கற்பித்து ஆய்வுகள் சில செய்து
கழிகிறது என் பிற மணித்துளிகள் ...
வீடடையும்  போதினிலே மாறுகிறதே பரிமாணமதுவும் !

பூங்காவில் குழந்தையுடன்  குழந்தையாய்  மனமெடுக்கும் மறு  பரிமாணம் !
விட்டு வைத்த  வீட்டு வேலைகள் வீட்டு பாடமென
கழிகிறது என் நாளின் கடை பொழுதுகள் ...
பரிமாணங்கள் பலவெனினும்  கோணங்கள்
புதிதெனினும் சிரிப்பொன்றை நான் உதிர்க்க
மகிழ்வதனை  மனமேற்க
முடிகிறதே என் நாளும்
விடை காண்கிறதே கலைந்திட்ட  என் காலைக்  கனாவும் !


கவிதையை படித்தமைக்கு நன்றி.

அடுத்த நாள் பாட்டு போட்டி . கலந்துக்க போறது இல்லனு முடிவு செஞ்சுட்டேன் . ஆடிட்டோரியம்ல எல்லார் முன்னாடி பாட பயமா இருந்துச்சு . இதுக்கு முன்னாடி மினி ஹால் எங்க துறை  கான்பெரன்ஸ்  கல்ச்சுரல்ஸ்ல  பாடி இருக்கேன். ஆனா இது ஒட்டு மொத்த எஸ். ஆர். எம். இன்ஜினியரிங் , மெடிக்கல், டென்டல், ஆர்ட்ஸ்  , லா அப்டினு  எல்லாருக்குமே சேத்து நடக்குற போட்டி, எப்டினு யோசிச்சு போட்டிக்கு போல . ஹெலன் கால் பண்ணிட்டே இருந்தாங்க . போட்டி ஆரம்பிக்க போகுது வாங்கனு சொன்னாங்க . நான் கேக்கல . அப்போ ரெண்டு சக ஆசிரியைகள் ஐடா மற்றும் சவுமியா  என் ரூமுக்கு வந்தாங்க .ஏன் போலன்னு கேட்டாங்க . பயமா இருக்குன்னு சொன்னேன் . பாடி காமிக்க சொன்னாங்க . பாடுனேன். என்ன வலு கட்டாயமா ஆடிட்டோரியம்ல கூட்டிட்டு போனாங்க . ஹெலனுக்கும் போன் பண்ணி சொல்லிட்டேன் .
அவங்களுக்கும்  சந்தோஷம் . ஓரளவுக்கு பாடிட்டேன் . வீட்டுல கிச்சன்ல பாடுவேன். செல்வா கேட்டா  அவருக்கு புடிச்ச  இளையராஜா பாட்டு பாடுவேன் . பிளாட்ல நடக்குற விழால சும்மா பாடுவேன் . ஆனா அவ்ளோ பெரிய அரங்கத்துல பாடுற அளவுக்கு சிங்கர் இல்ல அதுவும் மைக்ல பாடி பழக்கம் இல்ல . ஆனா அன்னிக்கு நண்பர்கள் கட்டாயப்படுத்தி பாடுனேன் . ஆனா ரொம்ப காண்பிடண்ட்டா   இருந்துச்சு . சூப்பரா பாடலை . ஆனா புடுச்சு இருந்துச்சு . நெறய பேர்  குட்ஜாப்னு சொன்னாங்க . சில நேரங்கள்ல நம்மள உற்சாகப்படுத்துற ஊக்குவிக்குற நண்பர்கள் இருப்பது முக்கியமா ஆகுது . அவங்க அப்போ இழுத்துட்டு போலனா எனக்கு இந்த அனுபவம் கெடச்சுருக்காது . ஹெலன் அவங்க ப்ரண்ட்ஸ்கிட்டலாம் வீடியோவை போட்டு காட்டுனாங்களாம்.



ஒண்ணு  மட்டும் தெரிஞ்சுகிட்டேன் . பாசிட்டிவான நண்பர்கள் , மனிதர்கள் எவ்ளோ பேர்  நம்மள சுத்தி இருக்காங்களோ அவ்ளோ நல்லது . இப்போல்லாம் நெகடிவான மனிதர்களை நெறய தவிர்க்குறேன் . யாரையும் உதாசீன படுத்துறது இல்ல . காயப்படுத்துறதும் இல்ல .அது நம்ம வேலையும் இல்ல . ஆனா பாசிட்டிவ் மனிதர்கள கண்டரியிற அறிவை நெறய வளத்துக்க  ட்ரை பண்ணிட்டு இருக்கேன் . (செல்வா மயிண்டு வாய்ஸ் :"கிழிச்ச! ஒனக்கு ஒண்ணும் தெரியாது ..:) ) அவரை பொறுத்தவரை  என்னால மனிதர்களை கணிக்க முடியாது எல்லாரும் என்ன ஈஸியா  ஏமாத்திடுவாங்க . ஓரளவுக்கு உண்மையினாலும் இப்போ நெறய மாறி இருக்கேன் . சரி பாப்போம் .

படித்தமைக்கு மிக்க நன்றி . தங்களுக்கும்  தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள் :)

சுபலலிதா

Saturday, September 14, 2019

குழந்தைகள் - பார்ட் 2


தமிழ் ல எழுதி ரொம்ப நாளாச்சு . இங்க்லீஷ்லயே  மொஸ்டலி  எழுதறதுக்கு காரணம் இந்த டைப்பிங் ல இருக்க கஷ்டம் தான் . நம்ம எண்ணங்களை  எழுத்தா  மாத்துறப்ப தட்டச்சு  செய்ற வேகம் ரொம்ப முக்கியம். இல்ல எண்ணங்களுக்கும் எழுத்துக்கும் ஒரு சிங்க்  இருக்காது .  அதும் தமிழ கூகுள்  ட்ரான்ஸிடெரேஷன்  மூலம் டைப் பண்றது கொடும. மொதல்ல  இதுக்கு ஒரு தீர்வு கண்டு பிடிக்கணும் . அப்பவும் ஹிந்தி  தான் ரெண்டாவது மொழியா லேப்  டாப்ல  இருக்கணும்னு சொல்வாங்க . அட போங்கப்பா . இன்னிக்கி ஒரு  ப்ராஜெக்ட் ப்ரோபோசல் டைப் பண்ணனும்   ஆனா  எனக்கென்னமோ  எழுதுனா  பரவால்லன்னு தோணுச்சு .

ரொம்ப நாளா  இந்த குழந்தைங்க பத்தி எழுதணும்னு தோணுச்சு . முன்னாடி கூட எழுதி இருக்கேன் . காலேஜ்ல மொஸ்டலி  ஸ்டூடென்ஸ்  கூட  பேசுறேன்   வீட்டுக்கு வந்தா  என்னோட பொண்ணும்  அவளோட நண்பர்கள் கிட்ட  பேசுறேன் . அதனால அவங்க என்ன நம்ம பத்தி என்ன  நெனைக்குறாங்கனு  எழுதலாம்னு நெனச்சேன் .

குழந்தைங்க உங்க கிட்ட எப்படி பேசுறாங்களோ அத வச்ச நாம எப்படினு  புரிஞ்சிக்கலாம் .  ரொம்ப ஜாலியா பேசுனா நீங்க ரொம்ப ஜாலியான பெர்சன் இல்ல கிட்ட வரவே யோசிச்சாங்கன்னா  நீங்க டெர்ரர் பீஸுனு அர்த்தம். இந்த ஆராய்ச்சில நான் தெருஞ்சுக்கிட்டது நா ரொம்ப காமடி பீசுன்னு .

முதல்ல  நான் வீட்ல இருந்து ஆரம்பிக்குறேன் . கொஞ்ச நாள் முன்னாடி என்னோட  மாமியார் வீட்டுக்கு சம்மர் வகேஷுன்னுக்கு என் பொண்ணையும்  செல்வாவின்   தங்கை பொண்ணுங்களையும் கூட்டிட்டு  போனேன் . செல்வாவும் சரி அவர் தங்கையும் சரி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் . நான் அப்டி இல்ல . இருந்தாத்தான்   ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே. அதும் என்  பொண்ணு இருக்கே . நான் கோவமா இருந்தா கூட காமெடி பண்ணாதமான்னு சொல்லும் .. வகேஷுன் விஷயத்துக்கு  வருவோம் . போன ரொம்ப யூஸ் பண்ணகூடாதுன்னு  செல்வாவும்  அவர் தங்கையும் சொல்வாங்க . ஆனா அவங்க அப்போ எங்க கூட ஊருக்கு வரல  . நான் மட்டும் தான் இருந்தேன் . என்ன ஏமாத்தி எப்பவும் போன் ல கேம் வெளயாடுவாங்க . எனக்கென்னமோ ரொம்ப ரெஸ்ட்ரிக்ட்  பண்றதுல நம்பிக்கை இல்ல . என் போன  என் பொன்னும்   யூஸ் பண்ணுவா . டீ.வி ல கன்னெக்ட்  பண்ணி நெறய டிராயிங்  வரைவா . தேவையில்லாத விஷயங்கள் வந்தா கிளோஸ் பண்ணனும்னு சொல்லி இருக்கேன் . அவளும் அப்டி பண்ராளானு மானிடர் பண்ணி இருக்கேன் . கரெக்டா தான் இருக்கா . அதே மாதிரி தான் வேலூர்லயும்  சம்மர் வெகேஷன்ல நடந்துச்சு . ஒரு வாரம் கழிச்சு செல்வாவோட தங்கை  வேலூருக்கு வந்தாங்க . இந்த மூணு பசங்களும் வால  சுருட்டிட்டு பயங்கரமா மாஞ்சு மாஞ்சு பெயின்டிங்  பண்ணாங்க . அத கூட  நான் தாங்கிக்குவேன் . செல்வாவின் தங்கையின் முதல் பொண்ணு என்கிட்டே கேட்டுச்சு , "அத்தை நான் அன்னை தெரசா வரையட்டும்மான்னு "  . நான் சொன்னேன் , "என்ன நீ ரொம்ப கடுப்பேத்தற  இவ்ளோ நாள் இந்த பெயின்டிங் தெறமை எங்க போச்சு ?"  நான் எவ்ளோ சொல்லியும் வரையாதவங்க கிட்டத்தட்ட மூனு மணி நேரம் போன் யூஸ் பண்ணாம  வரைஞ்சாங்க . நல்ல விஷயந்தான் . நமக்கு தான் லைட்டா  கண்ணு வேர்த்துச்சு

இந்த சம்பவத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி அதான் அவங்க அம்மா இல்லாதப்ப என் பொண்ணும் அந்த பொண்ணுங்களும் பயங்கரமா சண்டை போட்டுச்சுங்க . நான் பக்கத்திலதான்  இருந்தேன். குழந்தைங்க சண்டைல நாம தலையிட கூடாது . அவங்களே பேசி சமாதானம் ஆயிடுவாங்க . சரின்னு நான் வேடிக்கை பாத்தேன் . என் சிஸ்டர்  இன்  லா பொண்ணு என் பொண்ணு கிட்ட  சொல்லுது , "இரு மாமா (செல்வா) வரட்டும் ஒண்ண பத்தி கம்பளைண்ட் பண்றேன் " அதுக்கு என் பொண்ணு , " இரு அத்தை (சிஸ்டர் இன்  லா) வரட்டும் ஒங்கள பத்தி சொல்றேன் அப்டின்னுச்சு . நான் சொன்னேன் ,"நான் ஒருத்தி இங்க பெரிய மனுஷி இருக்கிறத மறந்துடீங்களானு  கேட்டேன் " அதுக்கு அதுங்க பயங்கரமா சிரிச்சுட்டு "சாரி அத்தை ஒங்கள மறந்துட்டோம்னு சொல்லுச்சுங்க ". இட்ஸ் ஆல் இந்த கேம் .

இது பத்தாதுன்னு எங்க பிளாட்ல  வேற சிமிளர் சம்பவம் நடந்துச்சு .  எப்பவுமே சுதந்திர தினத்தன்னைக்கு எங்க பிளாட்ல கொடி  ஏத்தி கொண்டாடுவோம் . போன சுதந்திர தினத்தப்ப சில குழந்தைகளை வச்சு நான் ஒரு சின்ன நாடகம் சொல்லி குடுத்தேன் . வெளி நாட் டு பொருட்களை வாங்கக்கூடாது அப்டிங்கிறதுதான் தீம் . இந்த தடவ எனக்கு நெறய வேலைகள் இருந்ததால ஏதும் பண்ண முடியல . என் பொண்ணுக்கு அன்னிக்கு ஸ்போர்ட்ஸ்  டே . அதனால என்னால கலந்துக்கமுடியாதுன்னு தோணிச்சு . அன்னிக்கு முன்னாடி நாள்  காலேஜுல இருந்து என் வீட்டுக்கு போயிட்டுருந்தேன் . அப்போ போன வருஷம் நான் டிராமாக்கு ட்ரெயின்  பண்ண பசங்க ஓடி  வந்து, "ஏன்  ஆன்டி இந்த வாட் டி ஏதும் நாடகம் இல்லையானு கேட்டாங்க . நான் சொன்னேன் . இல்லபா  வேணும்னா  இப்ப எதாச்சும்  ரெடி பண்லாமானு  கேட்டேன் ". அதுக்கு அவனுங்க  "அய்யய்யயோ வேணவே வேணாம்   ஆன்டி னு  சொல்லிட்டு ஓடிட்டானுங்க ". நான் பாட்டுக்கு போயிட்ருந்தேன் . அவனுங்க   கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தானுங்க . திடீர்னு அந்த விளையாட்ட விட்டு என்ன டேமேஜ்  பண்றதுல என்ன சந்தோசம் ? தெரியல .

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் . குழந்தைங்களுக்கு நம்மளோட மனச ஈஸியா கணிக்குற சக்தி உண்டு . சோ நெஸ்ட் டைம்  நீங்க எப்படி பட்டவங்கன்னு ஒரு குழந்தைக்கிட்ட பேசி தெரிஞ்சுக்கோங்க. டேமேஜ் பண்ணா நான் பொறுப்பில்லை ஆனா நீங்க அத கண்டிப்பா பெருமையா நெனச்சுக்கலாம் .

படித்தமைக்கு நன்றி

சுபலலிதா

Friday, July 19, 2019

விடை காணவே!

திடீர்னு அசெண்டிங்   வர்ட் ஆடர்ல ஒரு கவிதை எழுதணும்னு தோணுச்சு (கவிதைனு சொல்ல முடியாது ) . முதல் வரில  ஒரு வார்த்தை ரெண்டாவது வரில ரெண்டு வார்த்தை அப்டி !

படிச்சு பாருங்க

in search க்கான பட முடிவு




வானம் (1 )

பூமி கடல் (2 )

வியப்பை  ஊட்டும் என்றென்றும்! (3 )

மனம் அது விரிய விழைகிறேன்  (4)

இவை யாவும் விட பெரிதாய்! முயல்கிறேன் (5)

தோற்கிறேன்! ஏனோ மீண்டும் முயல்கிறேன் !   விடை தெரிந்தும்! (6)

எண்ணமது  விரிய காண்கிறேன் முயலும் பொழுது  சிற்சில  இன்பமும்! (7)

இன்பங்கள் பல கோடி  சில மட்டும்  நிலையாகக் காண்கிறேன் என்றென்றும் ! (8)

அவை மட்டும் தேடி செல்ல துடிக்கிறேன்! முயல்கிறேன் அதை மட்டுமே நாடி!(9)

பின் இழுக்கும் பல இன்னல்கள் களைகிறேன் முன்  செல்கிறேன்  விடை காணவே! (10)


படித்தமைக்கு நன்றி!

சுபலலிதா