Saturday, September 14, 2019

குழந்தைகள் - பார்ட் 2


தமிழ் ல எழுதி ரொம்ப நாளாச்சு . இங்க்லீஷ்லயே  மொஸ்டலி  எழுதறதுக்கு காரணம் இந்த டைப்பிங் ல இருக்க கஷ்டம் தான் . நம்ம எண்ணங்களை  எழுத்தா  மாத்துறப்ப தட்டச்சு  செய்ற வேகம் ரொம்ப முக்கியம். இல்ல எண்ணங்களுக்கும் எழுத்துக்கும் ஒரு சிங்க்  இருக்காது .  அதும் தமிழ கூகுள்  ட்ரான்ஸிடெரேஷன்  மூலம் டைப் பண்றது கொடும. மொதல்ல  இதுக்கு ஒரு தீர்வு கண்டு பிடிக்கணும் . அப்பவும் ஹிந்தி  தான் ரெண்டாவது மொழியா லேப்  டாப்ல  இருக்கணும்னு சொல்வாங்க . அட போங்கப்பா . இன்னிக்கி ஒரு  ப்ராஜெக்ட் ப்ரோபோசல் டைப் பண்ணனும்   ஆனா  எனக்கென்னமோ  எழுதுனா  பரவால்லன்னு தோணுச்சு .

ரொம்ப நாளா  இந்த குழந்தைங்க பத்தி எழுதணும்னு தோணுச்சு . முன்னாடி கூட எழுதி இருக்கேன் . காலேஜ்ல மொஸ்டலி  ஸ்டூடென்ஸ்  கூட  பேசுறேன்   வீட்டுக்கு வந்தா  என்னோட பொண்ணும்  அவளோட நண்பர்கள் கிட்ட  பேசுறேன் . அதனால அவங்க என்ன நம்ம பத்தி என்ன  நெனைக்குறாங்கனு  எழுதலாம்னு நெனச்சேன் .

குழந்தைங்க உங்க கிட்ட எப்படி பேசுறாங்களோ அத வச்ச நாம எப்படினு  புரிஞ்சிக்கலாம் .  ரொம்ப ஜாலியா பேசுனா நீங்க ரொம்ப ஜாலியான பெர்சன் இல்ல கிட்ட வரவே யோசிச்சாங்கன்னா  நீங்க டெர்ரர் பீஸுனு அர்த்தம். இந்த ஆராய்ச்சில நான் தெருஞ்சுக்கிட்டது நா ரொம்ப காமடி பீசுன்னு .

முதல்ல  நான் வீட்ல இருந்து ஆரம்பிக்குறேன் . கொஞ்ச நாள் முன்னாடி என்னோட  மாமியார் வீட்டுக்கு சம்மர் வகேஷுன்னுக்கு என் பொண்ணையும்  செல்வாவின்   தங்கை பொண்ணுங்களையும் கூட்டிட்டு  போனேன் . செல்வாவும் சரி அவர் தங்கையும் சரி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் . நான் அப்டி இல்ல . இருந்தாத்தான்   ஒத்துக்க மாட்டேங்கிறாங்களே. அதும் என்  பொண்ணு இருக்கே . நான் கோவமா இருந்தா கூட காமெடி பண்ணாதமான்னு சொல்லும் .. வகேஷுன் விஷயத்துக்கு  வருவோம் . போன ரொம்ப யூஸ் பண்ணகூடாதுன்னு  செல்வாவும்  அவர் தங்கையும் சொல்வாங்க . ஆனா அவங்க அப்போ எங்க கூட ஊருக்கு வரல  . நான் மட்டும் தான் இருந்தேன் . என்ன ஏமாத்தி எப்பவும் போன் ல கேம் வெளயாடுவாங்க . எனக்கென்னமோ ரொம்ப ரெஸ்ட்ரிக்ட்  பண்றதுல நம்பிக்கை இல்ல . என் போன  என் பொன்னும்   யூஸ் பண்ணுவா . டீ.வி ல கன்னெக்ட்  பண்ணி நெறய டிராயிங்  வரைவா . தேவையில்லாத விஷயங்கள் வந்தா கிளோஸ் பண்ணனும்னு சொல்லி இருக்கேன் . அவளும் அப்டி பண்ராளானு மானிடர் பண்ணி இருக்கேன் . கரெக்டா தான் இருக்கா . அதே மாதிரி தான் வேலூர்லயும்  சம்மர் வெகேஷன்ல நடந்துச்சு . ஒரு வாரம் கழிச்சு செல்வாவோட தங்கை  வேலூருக்கு வந்தாங்க . இந்த மூணு பசங்களும் வால  சுருட்டிட்டு பயங்கரமா மாஞ்சு மாஞ்சு பெயின்டிங்  பண்ணாங்க . அத கூட  நான் தாங்கிக்குவேன் . செல்வாவின் தங்கையின் முதல் பொண்ணு என்கிட்டே கேட்டுச்சு , "அத்தை நான் அன்னை தெரசா வரையட்டும்மான்னு "  . நான் சொன்னேன் , "என்ன நீ ரொம்ப கடுப்பேத்தற  இவ்ளோ நாள் இந்த பெயின்டிங் தெறமை எங்க போச்சு ?"  நான் எவ்ளோ சொல்லியும் வரையாதவங்க கிட்டத்தட்ட மூனு மணி நேரம் போன் யூஸ் பண்ணாம  வரைஞ்சாங்க . நல்ல விஷயந்தான் . நமக்கு தான் லைட்டா  கண்ணு வேர்த்துச்சு

இந்த சம்பவத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடி அதான் அவங்க அம்மா இல்லாதப்ப என் பொண்ணும் அந்த பொண்ணுங்களும் பயங்கரமா சண்டை போட்டுச்சுங்க . நான் பக்கத்திலதான்  இருந்தேன். குழந்தைங்க சண்டைல நாம தலையிட கூடாது . அவங்களே பேசி சமாதானம் ஆயிடுவாங்க . சரின்னு நான் வேடிக்கை பாத்தேன் . என் சிஸ்டர்  இன்  லா பொண்ணு என் பொண்ணு கிட்ட  சொல்லுது , "இரு மாமா (செல்வா) வரட்டும் ஒண்ண பத்தி கம்பளைண்ட் பண்றேன் " அதுக்கு என் பொண்ணு , " இரு அத்தை (சிஸ்டர் இன்  லா) வரட்டும் ஒங்கள பத்தி சொல்றேன் அப்டின்னுச்சு . நான் சொன்னேன் ,"நான் ஒருத்தி இங்க பெரிய மனுஷி இருக்கிறத மறந்துடீங்களானு  கேட்டேன் " அதுக்கு அதுங்க பயங்கரமா சிரிச்சுட்டு "சாரி அத்தை ஒங்கள மறந்துட்டோம்னு சொல்லுச்சுங்க ". இட்ஸ் ஆல் இந்த கேம் .

இது பத்தாதுன்னு எங்க பிளாட்ல  வேற சிமிளர் சம்பவம் நடந்துச்சு .  எப்பவுமே சுதந்திர தினத்தன்னைக்கு எங்க பிளாட்ல கொடி  ஏத்தி கொண்டாடுவோம் . போன சுதந்திர தினத்தப்ப சில குழந்தைகளை வச்சு நான் ஒரு சின்ன நாடகம் சொல்லி குடுத்தேன் . வெளி நாட் டு பொருட்களை வாங்கக்கூடாது அப்டிங்கிறதுதான் தீம் . இந்த தடவ எனக்கு நெறய வேலைகள் இருந்ததால ஏதும் பண்ண முடியல . என் பொண்ணுக்கு அன்னிக்கு ஸ்போர்ட்ஸ்  டே . அதனால என்னால கலந்துக்கமுடியாதுன்னு தோணிச்சு . அன்னிக்கு முன்னாடி நாள்  காலேஜுல இருந்து என் வீட்டுக்கு போயிட்டுருந்தேன் . அப்போ போன வருஷம் நான் டிராமாக்கு ட்ரெயின்  பண்ண பசங்க ஓடி  வந்து, "ஏன்  ஆன்டி இந்த வாட் டி ஏதும் நாடகம் இல்லையானு கேட்டாங்க . நான் சொன்னேன் . இல்லபா  வேணும்னா  இப்ப எதாச்சும்  ரெடி பண்லாமானு  கேட்டேன் ". அதுக்கு அவனுங்க  "அய்யய்யயோ வேணவே வேணாம்   ஆன்டி னு  சொல்லிட்டு ஓடிட்டானுங்க ". நான் பாட்டுக்கு போயிட்ருந்தேன் . அவனுங்க   கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தானுங்க . திடீர்னு அந்த விளையாட்ட விட்டு என்ன டேமேஜ்  பண்றதுல என்ன சந்தோசம் ? தெரியல .

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் . குழந்தைங்களுக்கு நம்மளோட மனச ஈஸியா கணிக்குற சக்தி உண்டு . சோ நெஸ்ட் டைம்  நீங்க எப்படி பட்டவங்கன்னு ஒரு குழந்தைக்கிட்ட பேசி தெரிஞ்சுக்கோங்க. டேமேஜ் பண்ணா நான் பொறுப்பில்லை ஆனா நீங்க அத கண்டிப்பா பெருமையா நெனச்சுக்கலாம் .

படித்தமைக்கு நன்றி

சுபலலிதா

No comments:

Post a Comment