Wednesday, July 2, 2014

யூ. கே அனுபவங்கள் /சொதப்பல்கள் /பல்புகள்
அப்பாடா ஒரு வழியா தீசிஸ் சப்மிட்  பண்ணியாச்சு . இன்னும் கொஞ்ச மாசத்துக்கு வெட்டி தான்ஒரு வழியா  எழுத நேரமும் கெடச்சாச்சு. என்ன எழுதலாம்னு யோசிச்சப்ப எப்பவும் போல நாம சொதப்புனதையே எழுதலாம்னு  இருக்கேன். என்னன  சொதப்பி இருக்கோம்ணு  யோசிச்சா ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. அதுல ரொம்ப பழைய அனுபவத்த தூசு தட்டலாம்னு தோனுச்சு. சொதப்றது மட்டும் இல்ல பல்புகள் வாங்குறதும் நமக்கு ரொம்ப சகஜம்பின்ன நம்ம தலைவர் வடிவேலு சொல்லி இருக்கார்ல ," வெற்றியும் தோல்வியும்  வீரனுக்கு  ஜகஜம் " . அவர் இத சொல்ற ஸ்டைலே தனி தான் .

சரி நேரா விஷயத்துக்கு வருவோம். நானும் செல்வாவும்  2010  யு.கே  போயிருந்தப்ப  நடந்த அனுபவத்த தான் எழுதப்போறேன்நாங்க ஜூலைல போனோம் . அக்டோபர்ல செல்வாவுக்கு பிறந்த நாள். எதாச்சும் கிப்ட் கொடுக்கணுமேன்னு தோனுச்சு. ஆனா நாம தான் வெட்டி ஆபிசராச்சே . நோ  நயா  பைசா. நாங்க இருந்த அபார்ட்மெண்ட் கிரவுண்ட் ப்லோர் சைன்ஸ்பாரீஸ்  அப்டின்னு ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்துச்சு. அங்க போகும்போதெல்லாம்  கொஞ்சம் சில்லறை மீறும். அதெல்லாம் சேத்து வைக்கலாம்னு யோசிச்சேன். ஆனா ஒரு பென்ஸ் ரெண்டு பென்ஸ் வச்சு என்ன பண்றதுன்னு ஒரே கவலை . எப்டியோ பனிரெண்டு பவுண்ட்ஸ்  சேத்துட்டேன்

ஆனா ரெண்டு கை    நெறைய சில்லரைஉண்மையாதான் . நூறு பென்ஸ் ஒரு பவுண்டு . அப்பன்னா பாத்துகோங்க எவ்ளோ சில்லரை இருக்கும்னு. அத பத்திலாம் கவலை படல. ஒன்போது பவுண்டுக்கு  டி சர்ட்   மூணு  பவுண்டுக்கு கேக் மெழுகுவர்த்தி வாங்கிட்டேன். அந்த சில்லரை கொண்டுட்டு பில் கவுண்ட்டர் போனேன் . அவர் தமிழர்னு நான் கெஸ்  பன்னல . பண்ற யோசனை இல்ல . ஆனா அவர் என்ன தமிழர்னு கெஸ்  பண்ணிட்டாரு. நீங்க தமிழரா னு  அவரு கேட்ட தமிழ்லயே அவரு இலங்கை  தமிழர்னு  புரிஞ்சது . அவ்ளோ சில்லரை  கொடுத்தது அவருக்கு சிரிப்பா இருந்திருக்கும் போல . நாம என்னிக்கும் இதபத்தி பீல் பண்ணதே இல்ல . தப்பு செஞ்சா தான் பீல் பண்ணனும். ஆனா கொஞ்சம் நேரத்துக்கு ஒரு மாதிரி இருக்கும் அப்றோம் மறந்துடும். அவருக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு அங்க இருந்து கெளம்பிட்டேன்.


சர்ப்ரைசா கிப்ட் கொடுக்கணும்னு நெனச்சேன் . ஆனா வழக்கம் போல சொதப்பிருச்சு. சீக்ரெட் மைண்டேயின் பண்றதுல நம்ம கொஞ்சம் வீக்கு . இதப் படிக்குற நண்பர்களுக்கு அவங்க பட்ட  அவஸ்தை கண்டிப்பா நெனவுக்கு வரும். மெழுகு வர்த்தி வாங்க தெரிஞ்ச எனக்கு அத ஏத்த தீப்பெட்டி வாங்க தோனல. இந்தியால அவசரத்துக்கு அடுப்புல பத்த வச்சு குற நெனைப்புல மறந்துட்டேன். அங்க எலெக்ட்ரிக் அடுப்பு . பிறந்த நாள் அன்னிக்கு தான் இந்த பல்ப் எரிஞ்சுச்சு. பின்ன செல்வாதான் தீப் பெட்டி வாங்கிட்டு வந்தாரு . செல்வாக்கு ஒரே ஷாக்கு . எப்டி கிப்ட் வாங்குனேன்னு. நடந்தத சொன்னேன் . எப்டி இப்டி கூச்சமே இல்லாம அவ்ளோ சில்லரை எடுத்துட்டு போக முடிஞ்சது உன்னாலனு  கேட்டாரு. அப்பத்தான் தோனுச்சு அந்த இலங்கை தமிழர   மட்டும் இனிமே சந்திக்க கூடாதுன்னு .

அங்கதான் ஒரு ட்விஸ்ட். நான் திடீர்னு தனியா இந்தியா திரும்ப வேண்டி இருந்துச்சு. செல்வா காலைல நாலு மணிக்கு ஏர்போர்ட் போறதுக்கு கேப் புக் பண்ணாரு. நாங்க இருந்தது மில்டன் கீன்ஸ் . அங்க இருந்து லண்டன் ஏர்போர்ட் ஒரு மணி நேரம் . இறங்கும் போதுதான் அந்த கேப் டிரைவர் என்ன பாத்தாரு . ஒங்கள எங்கயோ பாதுருக்கனேனு கேட்டாரு . அப்டியானு கேட்டுட்டு விட்டுடோம் . ஆனா எனக்கு தெரியும் அவர் யாருன்னு . அவர்தான் அந்த பில் கவுண்டர்ல இருந்த இலங்கை தமிழர்நெறைய பார்ட் டைம் வேல செய்றதா பேசிட்டு வந்தாரு . அனேகமா அவருக்கும் தெரிஞ்சுருக்கும்னு  நெனைக்குறேன் . ஜென்டில்மேன். சில்லர விஷயத்த பத்தி ஏதும் சொல்லல. இதெல்லாம் சகஜமப்பா .

ஒரு வழியா தனியா ப்ளைட் ஏறிட்டேன். பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ். ஒரே ப்லைட்டா புக் பண்ணி இருந்தாரு செல்வா . அவருக்கு ஒரே டென்ஷன் . இந்த பொண்ணு எப்டி தனியா போக போகுதுன்னு . செல்வா இந்த மாதிரி விஷயத்துல என்ன சாமணியத்துல நம்ப மாட்டாரு . வேற வழியில்லாம போச்சு. கடைசி வரைக்கும்  அவருக்கு  டென்ஷன்  கொடுத்துட்டேன். கெளம்புற நேரத்துல செல் போன மறந்துட்டேன்ஒரு  வழியா பெர்மிசன்  வாங்கி உள்ள வந்து குடுத்தாரு . நான் என்னமோ சென்னை ஏர்போர்ட் மாதிரி ஈசியா இருக்கும்னு  நெனச்சென் . ஒரு ஊரு  மாதிரி இருந்துச்சு . ரெண்டு பில்டிங் தாண்டி அப்றோம் ஒரு சின்ன ட்ரைன்  புடிச்சு ப்ளைட் நிக்கற எடத்துக்கு போக வேண்டி இருந்தது. ஏர்போர்ட் குள்ள ட்ரைன் இருக்கும்னு நான் நெனைக்கவே இல்ல .
ஒரு வழியா பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் கேட்வேக்கு  போயிட்டேன்என் பக்கத்துல ஒரு ஆண்டி . 50-60  வயது இருக்கும். அவங்க மகளோட டெலிவெரிக்கு வந்திருந்தாங்க போல. ஆங்கிலம் தெரியாததால கொஞ்சம் கஷ்டப் பட்டாங்க. யு. கே  பத்தி ஒரே பொலம்பல். என்ன ஊரு இது. துணி காய போட கூட எடம் இல்ல. இனிமே இங்க வர மாட்டேன்னு  பேசிட்டே வந்தாங்க. நாமதான் ஊம் கொட்றதுல பேரு போனவங்க. நல்லாத்தான் போயிட்டு  இருந்தது. கடசில இறங்கும்  போது   ஒரு பார்ம்  கொடுத்து பில் பண்ணச் சொன்னாங்க. அந்த ஆண்டி நீயே  பில் பண்ணேன்னு கேட்டாங்க. நானும் பில் ண்ணேன். பில் பண்ணி முடிச்ச ஒடன பின்னாடி இலங்கை  தமிழர்கள் உக்காந்து இருந்தாங்க. அந்த ஆண்டி அந்த பார்ம  அவங்க கிட்ட குடுத்து , எம்பா இந்த பொண்ணு இத ஒழுங்கா பில் பண்ணி இருக்கானு பாருனு  சொன்னாங்கஒரு ஆயிரம் பல்பாது என்னோட மொகத்துல எரிஞ்சிருக்கும். இதெல்லாம் எப்டி நடக்குது . நம்ம மொக ராசின்னு நெனைக்குறேன்.

இறங்கின பிறகும் அவங்க என்ன விடல. நள்ளிரவு ஒரு மணிக்கு வந்தோம். அவங்க மகன் வந்து கூட்டிட்டு போற வரைக்கும் கூட தான் இருந்தாங்க. எல்லாம் சரி ஏன்  அந்த அம்மா அப்டி சொன்னாங்கன்னு  தெரியல . இத்தனைக்கும், என்ன பண்ற பாப்பான்னு கேட்டப்போ, பி.ஹெச். டி பண்றேன்னு சொன்னேன். ஒரு வேல அதான் நம்பலையோ  என்னமோ. போகட்டும் போகட்டும். வீரர் வாழ்கைல இதெல்லாம் ஜகஜம்

எனக்கு எப்பவும் ஒரு சந்தேகம் இருக்கும் . நம்ம பதிவ  படிக்குறவங்க கடைசி வரைக்கும் படிப்பாங்களா இல்ல  நடுவுலே போர் அடிச்சு க்ளோஸ் பண்ணுவாங்களான்னு. நீங்க இறுதி வரைக்கும் படிச்சி இருக்கீங்க . நன்றி .அடுத்த பதிவுல சந்திப்போம் .

13 comments:

பால கணேஷ் said...

• அந்த இலங்கைத் தமிழர் உங்களை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு கண்டுக்கலையா இல்ல நெஜமாவே அடையாளம் தெரியலையா... எப்படி இருந்தாலும் சுவாரஸ்ய அனுபவம்.
• அந்த அம்மா பாரம் சரியா பில்லப் பண்ணிருக்கான்னு செக் பண்ணச் சொல்லி உங்களுக்கு பல்பு கொடுத்த அனுபவம் ஹா.. ஹா... சரியான முன்ஜாக்கிரதை முத்தம்மா போல...
•உங்க பதிவை கடைசிவரைக்கும் எல்லாரும் படிக்கறாங்களான்னு தெரிஞ்சுக்க ஒரு சுலப வழி : பதிவின் கடைசியில மூணு கேள்விகள் குடுங்க. பதிவிலருந்து எடுத்து கேக்கறதால முழுசாப் படிச்சவங்கதான் பதில் சொல்ல முடியும். எப்பூடி? (என்னய்யா இந்தப் பொண்ணு கேள்வில்லாம் கேக்குதுன்னு படிக்கறவங்க எஸ்ஸாயிட்டா அதுக்கு கம்பெனி பொறுப்பில்ல... ஹி,.. ஹி... ஹி...)

துளசி கோபால் said...

ரொம்பச் சரி. கடைசி வரைக்கும் படிச்சேன்!!!!

நல்லாத்தான் எழுதறீங்க. கீப் ரைட்டிங் :-)

Avargal Unmaigal said...

உங்கள் சொதப்பல் பதிவை இறுதிவரை கண்ணில் இரத்தம் வரும் வரை படித்துவிட்டேன் ஆணால் என்ன அதிசயம் நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன்... சும்மா சொல்லக் கூடாதுங்க அவ்வளவு சில்லரையை எடுத்து போக மிக துணிச்சல் வேணுமுங்க...

Avargal Unmaigal said...

படிக்க சுவையாக இருந்தன. பகிர்வுக்கு நன்றி

Ponchandar said...

சத்தியமா கடைசி வரி வரை படிச்சேன்.....இன்னும் நிறைய ‘பல்ப்’ உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன்

சுபலலிதா said...

@ பால கணேஷ் அவர்களுக்கு : உங்க ஐடியா விற்கு நன்றி . நல்ல ஐடியா. என்னோட பதிவில் பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி.

@ துளசி கோபால் அவர்களுக்கு : கடைசி வரை படித்து பின்னூட்டம் கொடுத்து உக்கமளித்ததற்கு மிக்க நன்றி

@அவர்கள் உண்மைகள் அவர்களுக்கு: :) :) :). ரத்தம் சொட்ட சொட்ட படித்தமைக்கு மிக்க நன்றி.

@பொன்சந்தர் அவர்களுக்கு : கண்டிப்பாக . ஊக்கத்திற்கு நன்றி

HajasreeN said...

NAANGALUM PADICCHOM SEMAYAI IRUKKU INNUM ELUTHUNGA

Unknown said...

I read it till the end. good bulbs !!! keep writing subha

Unknown said...

வெளி நாடு என்பதால் சரியாப் போச்சு ,இப்படி சில்லறையை கொண்டு போனா நம்ம ஊர்லே 'ஏதாவது உண்டியலை உடைச்சு கொண்டு வந்தீயா 'ன்னு கேட்டு இருப்பாங்க !

சுபலலிதா said...

@HajasreeN அவர்களுக்கு, மிக்க நன்றி :)

@jayshree: thanks for visiting my blog , reading till the end and commenting :)
Bagawanjee KA அவர்களுக்கு , கண்டிப்பா நடந்திருக்க வாய்ப்புண்டு. வருகைக்கு மிக்க நன்றி


யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இங்கே(ஐரோப்பா) சில்லறைப் பணவிடயத்தில் நாம் கூச்சப்படத்தேவையில்லை. அதை அவர்கள் வாங்கியே ஆகவேண்டும்.ஆனால் கூட்டம் அதிகமிருந்தால் உதவியாளரை அழைத்து சரிபார்ப்பார்கள்.
இதைவிட வங்கியில் இந்தக் குற்றி நாணயங்களைச் சுற்றிக்கணக்கெடுப்பதற்கென வேறுபட்ட நிறங்களில்
குற்றியின் பெறுமதி விபரமடங்கிய காகிதம் கிடைக்கும் அதில் அடுக்கிக் சுற்றிக்கொண்டு செல்லலாம்.பல்பொருள் அங்காடிகளிலும் அதை எடுப்பார்கள்.
இப்போ இங்கே பணத்தை காசாளர் கைபடாமல் பரிமாறும் பொறிகள் வந்து விட்டன. கொட்டிவிட வேண்டியது தான் அது எண்ணி எடுத்துவிட்டுக் அதிகமெனில் துப்பி விடும்.
ஆனாலும் உங்கள் அனுபத்தை சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்.
வடிவேலுவின் ஜகஜம் , தங்கள் கூர்ந்த அவதானிப்பு கலக்கல்.
ஆனாலும் அந்த அம்மா! நீங்கள் நிரப்பியதைச் சரி பார்க்க அடுத்தவரிடம் கேட்டது, கஸ்டம் தான்!விட்டுத் தள்ளுங்க!- ," வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம் " .
நானும் இலங்கைத் தமிழனே, லண்டனில் சொந்த வண்டிவைத்துள்ள என் உறவுகள், நண்பர்கள் இந்த Mini Cab - மேலதிக தொழிலாகவும், நிரந்தர தொழிலாகவும் ஓட்டுகிறார்கள். சற்று சுதந்திரமான தொழிலென்பார்கள்.

அமர பாரதி said...

Nice writeup.

சுபலலிதா said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) அவர்களுக்கு, தாங்கள் சரியாகச் சொன்னீர்கள். தங்களுடைய பின்னூட்டம் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது. இலங்கைத் தமிழர்கள் ஏர்போர்டில் எனக்கு மிக்க உதவியாக இருந்தனர். வருகைக்கு மிக்க நன்றி

அமர பாரதி அவர்களுக்கு, மிக்க நன்றி :)

Post a Comment