Friday, July 19, 2019

விடை காணவே!

திடீர்னு அசெண்டிங்   வர்ட் ஆடர்ல ஒரு கவிதை எழுதணும்னு தோணுச்சு (கவிதைனு சொல்ல முடியாது ) . முதல் வரில  ஒரு வார்த்தை ரெண்டாவது வரில ரெண்டு வார்த்தை அப்டி !

படிச்சு பாருங்க

in search க்கான பட முடிவு




வானம் (1 )

பூமி கடல் (2 )

வியப்பை  ஊட்டும் என்றென்றும்! (3 )

மனம் அது விரிய விழைகிறேன்  (4)

இவை யாவும் விட பெரிதாய்! முயல்கிறேன் (5)

தோற்கிறேன்! ஏனோ மீண்டும் முயல்கிறேன் !   விடை தெரிந்தும்! (6)

எண்ணமது  விரிய காண்கிறேன் முயலும் பொழுது  சிற்சில  இன்பமும்! (7)

இன்பங்கள் பல கோடி  சில மட்டும்  நிலையாகக் காண்கிறேன் என்றென்றும் ! (8)

அவை மட்டும் தேடி செல்ல துடிக்கிறேன்! முயல்கிறேன் அதை மட்டுமே நாடி!(9)

பின் இழுக்கும் பல இன்னல்கள் களைகிறேன் முன்  செல்கிறேன்  விடை காணவே! (10)


படித்தமைக்கு நன்றி!

சுபலலிதா


Friday, May 24, 2019

சில சில்லி அனுபவங்கள்


 



ரொம்பவே மனசு குழப்பமா இருக்கும்போது ரெண்டு விஷயம் பண்ணனும். ஒண்ணு  நல்ல காமடி பாக்கணும் . இல்ல எழுதனும் .  இன்னிக்கி செகண்ட் ஆப்ஷன்  சூஸ் பண்ணி இருக்கேன்   . சில நேரங்கள்ல எவ்ளோ நேர்மையா   கடுமையா உழைத்தாலும் அதற்கான பலன் நமக்கு அவ்ளோ ஈஸியா கெடைக்குறது இல்ல . பல நேரங்கள்ல வாய்ப்புகள  நாமே தவற விட்டுடறோம் .  எல்லாத்துக்குமே ஒரு காரணம் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை . வாய்ப்புகள தவறவிடறது  கூட நமக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்குதுன்னு  நினைக்குறேன் . வேற வழி நமக்கு இல்லையே. நம்மள மீறி நடக்குற விஷயங்களை யோசிச்சூ   மன அமைதிய இழக்கிறது  எனக்கு பிடிக்காது. இந்த பதிவும் என் மணக் குழப்பத்தை பத்தினது இல்ல .


நம்ம வாழ்க்கையில எத பண்றோமோ இல்லையோ சந்தோஷமா இருக்குற பாசிட்டிவ் ப்ரண்ட்ஸ் நெறய வச்சுக்கணும் . எனக்கு எங்க ப்லாட்ஸ்ல நெறய நண்பர்கள் உண்டு .   பெண்கள் சேர்ந்தாலே  காசிப்  தான் பேசுவாங்கன்னு இந்த உலகம் தப்பா நெனைக்குது . பெண்கள் எப்பவுமே  ஜாலியா இருக்கணும்னு நினைப்பாங்க. என்னோட நண்பர்கள் கிட்ட இருந்து நான் நெறய கத்து இருக்கேன்.  சேவிங்ஸ்  எவ்ளோ முக்கியம்னு  என்னோட தோழி சாவித்ரி ரொம்ப எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க . அதோட மட்டும் இல்லாமே அதுக்கு  ரெகுலரா உதவியும் செய்வாங்க. அதுல ஹெலன்  அப்டிங்குறவங்க   என்னோட வேலையும்  பாக்குறாங்க  . நாங்க ரெண்டும் பேரும்  பயங்கரமா யோசிப்போம் . பாதி வொர்க் அவுட் ஆகும். பாதி வொர்க் அவுட் ஆகாது. அவங்க பொண்ணும்  என் பொண்ணும்  வேற ப்ரண்ட்ஸ் . அதனால நெறய ஷாப்பிங் போவோம் . அப்பா ஒரு வாட்டி ஒரு கடையில என் பேரும்  போன் நம்பரும் எழுத சொன்னாங்க . கார்டு மூலம் பே  பண்ணதால இத சொன்னாங்க . அன்னிக்கு  காலையில நான் எக்ஸாம்  டூட்டி  பாத்து இருந்தேன். எல்லா ஸ்டுடண்ட்ஸ்  பேப்பர்லயும் என் பெறும்  கையெழுத்தும்  போட்டேன். அதே ஞாபகத்துல  அந்த கடையிலயும்  என் பேரும்  கையெழுத்தும் போட்டுட்டுட்டேன் . உடனே ஹெலன் சொன்னாங்க, "அப்டியே  வெறி குட்  கீப் இட் அப் " அப்டினும்  எழுதுங்க அப்டினாங்க . அந்த கடைக்காரங்க  வேற பயங்கரமா சிரிச்சாங்க . எங்க ப்லாட்ஸ் நண்பர்கள் இப்படித்தான் . பெண்கள் பொறாமை குணம்  உள்ளவங்கன்னு  சொல்வாங்க. ஆனா அப்டி இல்ல . எங்க பிளாட்ல  நெறய பேரு  வேலைக்கு போகல . ஆனா  வேலைக்கு போற பெண்களுக்கு அவங்க எப்படி உதவலாம்னு யோசிப்பாங்க .

ஹெலனுக்கு என்கிட்டே பிடிக்காத விஷயம் நான் நெறய சாரி  தேங்க்யூ  சொல்லுவேன் . அதனால என்ன ரொம்ப ஓட்டுவாங்க , ஆனாலும் என்னால அத மாத்திக்க முடியல . யாரவது சின்ன ஹெல்ப் பண்ணாலும்  எனக்கு தேங்க்ஸ் சொல்லணும் அதே மாதிரி சின்ன தப்பு பண்ணாலும் சாரி கேக்கணும் அது சின்ன பசங்களா இருந்தாலும் சரி .  இல்ல என் தல வெடிச்சுடும்.

நானும் ஹெலனும் ஒன்னாதான் காலேஜ்  போவோம் . ஒரு வாட்டி  காலேஜ் பஸ்  வரல . ஓலா  ஆட்டோ புக்  பண்ணோம்  . கேப் கிடைக்கல . அதனால தாம்பரம்  பஸ்  ஸ்டான்ட்  போய் அங்கிருந்து பஸ் புடுச்சுக்கலாம்னு இருந்தோம். கொஞ்சம் நேரம் ஆனதால  ஆட்டோவுலயே போகலாமான்னு  ஹெலன்  கேட்டாங்க . இதுவரைக்கும் ஆட்டோவுலயே அவ்ளோ தூரம் போனதில்ல . எனக்கென்னமோ பஸ்ஸே  வேகமா போகும் ம்னு தோணிச்சு . தாம்பரத்தில் இருந்து நெறய  அரசு பேருந்து  உண்டு. அதுலயும் எனக்கு குமரன் டிராவல்ஸ் ல  போக புடிக்கும். எஸ். ஏ  ராஜ்குமார் பாட்டெல்லாம் போட்டு செம்மயா  இருக்கும் .  எஸ். ஏ  ராஜ்குமார் பேன் லாம் இல்ல . இருந்தாலும் அது வித்தியாசமா இருக்கும். அதனால அந்த ஓலா ஆட்டோ ட்ரைவர் கிட்ட கேட்டேன் . "தம்பி  பஸ்  அளவுக்கு வேகமா போகாதுல்லப்பா ?".  அதுக்கு அந்த ட்ரைவர் , "அதெப்பிடிக்கா போகும் ?வேணும்னா   ஓனர்கிட்ட கேட்டு ஏதாது ஸ்பெஷல் இன்ஜின்   மாத்த  சொல்றேங்கா " அப்டினு  சொன்னார் .  ஏ ன் அப்படி  கேட்டேன் னு எனக்கே தெரியாது. பல நேரம் எதோ யோசனையில் இப்டி சில்லி கேள்விகளை கேப்பேன் . மோசட் லி  என்ன  சுத்தி இருக்கவங்க அத புரிஞ்சிப்பாங்க . அத கரெக்ட்டா ட்ரான்ஸ்லேட்டும் பண்ணுவாங்க . ஹெலனுக்கு ஒரே சிரிப்பு. அவங்க அதோட விட மாட்டாங்க . பிளாட்ல வந்து எல்லார்ட்டையும் சொல்லி  டேமேஜ்  பண்ணுவாங்க . சரி . வீரர்கள் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் .

இன்னும் நெறய விஷயங்கள் இருக்கு . இப்போ ஞாபகம் இல்ல . இது ரெண்டு மட்டும் தான்  ஞாபகம் வந்துச்சு. வயசு ஆக ஆக  நெறய ஞாபகம் வச்சுக்க முடியல . நோ நோ . நம்ம மனசு எப்பவுமே யங்  தான் . அதுக்கு வயசு ஆகவே ஆகாது. ஆகக் கூடாதுன்னு நினைக்குறேன். பாப்போம். மணக் குழப்பமும் கொஞ்சம் கொறஞ்சது ..

படித்தமைக்கு நன்றி !
சுபலலிதா


Thursday, February 14, 2019

சந்தோஷம்!







இன்னிக்கு லீவு போட்டாச்சு . டெய்லி 4.3.0 க்கு எழுந்து சமைச்சு காலேஜூ போறது புடிக்குனாலும்
 ஒரு நாள் பிரேக்  சில நேரம் தேவைப்படுது. அன்னிக்கும்  நமக்கு வீட்ல மொளகா காயவைக்கறது , இட்லி மாவு அரைக்குறதுன்னு ஏதாவது  இருக்கும் பட்  காலை வேலைய  எனக்கு புடுச்சதா ஆக்கிக்கணும்னு  நெனச்சேன் . தட் இஸ்  வை  .   இந்த டயலாக்  வடிவேலு  சொல்லும்போது ரொம்ப சிறப்பா  இருக்கும் . எனக்கு மிகவும் பிடித்த   நடிகர் அவர் தான். படத்துல என்னமோ அவர்தான் எனக்கு ஹீரோ வா  தெரிவாரு . ஹீரோ தான் எதோ சைடு ரோல்  காமெடியனா  தெரிவாரு .

எனக்கு தெருஞ்சு நம்மள சிரிக்க வைக்குறவங்க  தான் கடவுள். நான் என்னிக்கது வீட்ல ரொம்ப கோவப்  படுவேன் .   என் பொண்ணு ம் செல்வாவும் என்ன சிரிக்க வைப்பாங்க . ஆனா எப்பவுமே செல்வாதான் ஷாட் டெம்பெர்ட் . ஒரு நாளுக்கு நூறு வாட்டியது அவர் கிட்ட திட்டு வாங்குவேன் . எனக்கு என்னமோ அவர் கிட்ட திட்டு வாங்குனாதான் அன்னிக்கு திருப்தியா  இருக்கும் . நம்ம எது சொன்னாலும் திருந்த மாட்டேங்குறாளேன்னு அவருக்கு இன்னும் கோபம் வரும் . காலையில எழுந்து உடனே ஏதாது நான் சொதப்பி இருப்பேன் . அதுக்கு திட்டு விழும் . ஒரு வே ள அவர் திட்டலைனா  என்னமோ எனக்கு அவருக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லயோன்னு  ஒரே படப்பிடிப்பா  இருக்கும் . இதெல்லாம் யார் எனக்கு சொல்லி குடுத்தா. என்னோட ஹீரோ வடிவேலுதான் .எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான் காமெடிய நெனச்சு பாருங்க . சிரிக்காதவங்க இருக்கு முடியாது.


இந்த மாதிரி நம்மள சந்தோஷமா வசிக்கிற விஷயங்கள் என்னென்ன அப்டினு யோசிச்சேன். அதான் இங்க பதிவு பண்ணிருக்கேன் .

எல்லாருக்கும் பிடிச்ச விஷயம் சந்தோஷம் . ஆனா அது எதுல இரு க்குனு தான் நம்மள்ல பாதி பேருக்கு தெரியறது இல்ல . எனக்கென்னமோ நமக்கு புடிச்ச விஷயத்தை பன்னாலே சந்தாஷம் கெடைக்கும்னு  தோணுது. அந்த லிஸ்ட் கீழே

1. என்னதான் சம்பாதிச்சாலும்  செல்வா பாக்கெட்ல இருந்து பணம் சுடுறது எனக்கு பிடிக்கும். அதுக்கு திட்டு வாங்குறது புடிக்கும் .

2. நானும் என் பொண்ணு ம்  சேர்ந்து பக்கத்து தெருல இருக்குற சூப்பர்  மார்க்கெட்டுக்கு போய்  அருண் ஐஸ்கிரீம்  செல்வாக்கு தெரியாம சாப்பிட பிடிக்கும் .

3. நானும் என் பொண்ணு ம் வெள்ளிகிழைமை இரவு யூடூப்பில எங்க ரெண்டு பேருக்கு பிடிச்ச சாங்ஸ் , சானெல்ஸ்  டிவி ல கன்னெக்ட் பண்ணி பாக்க புடிக்கும் .

4. நான் செய் றதுலயே  என்னக்கு பிடிச்சது மீன் குழம்பு தான் . பிரியாணி போர்  அடிச்சுருச்சு .

5.இருட்டா  இருக்குற அதிகாலைல  ஜன்னல் பாத்துட்டே சமைக்க புடிக்கும் .

6. காலேஜ் பஸ்ல போகும்போது  ஹெட்போன்ல எனக்கு புடிச்ச சாங்ஸ் கேக்க புடிக்கும்.


7. காலைல என்னோட காலேஜ் பஸ் காலேஜுக்குள்ள  போகும்போது புடிக்கும்.

8.  கிளாஸ் எடுக்க  புடிக்கும் .

9. ஸ்டுடண்ட்ஸ் கிட்ட ப்ராஜெக்ட் டிஸ்கஷன் எனக்கு ரொம்ப புடிக்கும்


10. நண்பர்களுடன் சேர்ந்து சாப்புட்ர  லன்ச்  ஹவர்  புடிக்கும். அதுல எப்பவுமே ஸ்போர்ட்டிவா  இருக்குற எங்க குரூப்லயே சீனியர் 50 வயது உள்ள விசா மாம் எனக்கு ரொம்ப புடிக்கும் .



11.. பழைய நண்பர்கள்  கிட்ட பேச புடிக்கும் . பிரவீனா , வாணி அனிதா , கவிதா மாம் அப்பறோம்  யு.எஸ். ல இருந்து எப்ப வந்தாலும் கால் பண்ற ஸ்ரீவி , வித்யா  காயத்ரி புடிக்கும் . என்னோட அண்ணா பல்கலைக்கழக  நண்பர்களுக்கு ஒரு குரூப் இருக்கு . அதுல மெசேஜ் பாத்தா புடிக்கும் . அவங்ககிட்ட பேசுனா ரொம்ப  லைட்டா  இருக்கும். ஆனா  டைம் தான் இப்போ கெடைக்குறது இல்ல .


12. என் அப்பார்ட்மெண்ட் நண்பர்களுடன்  அரட்டை அடிச்சு சிரிச்சு சிரிச்ச வர வயிறு வலி புடிக்கும் .


இப்படி எத்தனையோ சின்ன சின்ன விஷயங்கள் நெறய  புடிக்கும் .  நீங்களும் உங்களுக்கு என்ன புடிக்கும்னு யோசிச்சு  சந்தோஷமா இருங்க


படித்தமைக்கு நன்றி .


சுபலலிதா







Friday, December 14, 2018

பரீட்சை அட்ராஸிடீஸ்




டைட்டில பாத்தா எங்கயோ கேள்வி பட்டா மாதிரி இருக்குல்ல. எஸ் நக்கலைட்ஸ்  யு  டியூப்  சேனல்  பாக்றவங்க கேள்வி பட்டுருப்பீங்க .  சேனல் ப்ரோமோஷன் லாம் இல்ல . அதுல நம்பிக்கையும் இல்ல . சரி விஷயத்துக்கு வருவோம். சமீப காலமா என் மனச ரொம்ப பாதிச்ச சம்பவத்தை பத்தி தான் இங்க சொல்லப்போறேன் .  இதயம் பலகீனமானவங்க, 18 வயதுக்கு கீழே உள்ளவங்க மற்றும் ப்ரெக்னன்ட்  லேடீஸ் இந்த பதிவை படிக்க வேணாம் . ! அந்த அளவுக்கு பயங்கரமான விஷயம் இல்ல!  ஒரு வேல என் மனசு அந்த அளவுக்கு பாதிக்க பட்டதால அப்டி எழுதிட்டேன் . சரி இப்பவாது விஷயத்துக்கு வருவோம் .

இந்த காலத்து பசங்க கிட்ட இருக்கிற பிளஸ் என்னனா நம்மள விட அவங்க புத்திசாலி எல்லாரும் நல்லா படிப்பாங்க . அவங்ககிட்ட இருக்குற மைனஸ் என்னனா நம்மள விட அவங்க புத்திசாலி எல்லாரும் நல்லா படிப்பாங்க. என்ன  டைப்பிங் மிஸ்டேக்குனு பாக்குறீங்களா இல்ல அவங்க ப்ளஸ்தான் அவங்க மைனஸும். கொஞ்சம் மந்தமா படிக்குறவங்க  கடுமையா உழைப்பாங்க . நம்ம நல்ல மார்க் எடுக்கணுமேன்னு ஒரு பயம் அவங்க கிட்ட இருக்கும். (எல்லாம் சொந்த அனுபவம் தான் :)) ஆனா இந்த புத்திசாலிங்களுக்கு ஒரு மெதப்பு . இதால  படிப்பு பத்தின ஸீரியஸ்னஸ் அவங்களுக்கு இல்ல .
பத்தாததுக்கு ஏகப்பட்ட டீவியேஷன்ஸ்  சுத்தி சுத்தி . டீ.வி , மொபைல்  அது இதுனு .  இதுல இவங்க படிக்குற பார் ஆப்பிள்  பி பார்  பால் கு 1 லட்சம் பீஸ் வேற . சரி ஓகே  படிச்சா போதும்.  என்னதான் கல்வி வியாபாரமா ஆயிட்டாலும் எனக்கு எப்பவுமே கல்வி மேல ஒரு நம்பிக்கை உண்டு. அதும் பெண் குழந்தைகளுக்கு குடுக்கப்படற கல்வி அவங்கள  கண்டிப்பா இந்த சமுதாயத்துல நல்ல மரியாதையான ஒரு வேலை  பாக்கவும் அவங்க குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கவும் உதவும் . இப்பதான் இந்த பதிவுக்கான மெயின் பாயிண்ட் ஞாபகம் வருது .

என் பொண்ணுக்கு பரீட்சை வருதுன்னா அதுக்கு ஒரு வாரம் முன்னாடில இருந்தே  எனக்கு மனசு பீதி அடைய ஆரம்பிக்கும் .  அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணின்னுடுவா என்ன .   இந்த விஷயத்துல என் அபார்ட்மெண்ட்   ப்ரண்ட்ஸ் எல்லார்க்கும்  சேம்  ப்ளட்டுதான் ! .

பரீட்சை அன்னிக்கு காலேஜ் பஸ்ல வந்தா அஞ்சு மணி ஆயிடும் னு  கேப்  புக் பண்ணி  நாலு மணிக்கு வருவேன். வந்த உடனே  சரி ஏதாச்சும் ஸ்நாக்ஸ் சாப்பிட வச்சுட்டு படிக்க வெப்போம்னு நெனப்போம். அப்பத்தான் அவங்க அம்மா எனக்கு ரொம்ப பசிக்குதுன்னு சொல்லுவாங்க. உலக அம்மாக்களை ஏமாற்றும் ஒரே டைலாக் இது தான் . சரி என்ன வேணும் னு கேட்டா தோசை வேணும் சொல்லுவாங்க . பொதுவா அவங்க மத்த நாள்ல ஸ்நாக்ஸ் தான் சாப்பிடுவாங்க  ஆனா பரீட்சை னா  மட்டும் இப்படி ! சரி ஒரு தோசை சாப்புடுவாங்கனு  பாத்தா எனக்கு நெய் போட்டு வேணும்பாங்க . சரி ரெண்டு சாப்புடுவாங்கனு  நெனச்சா அப்பத்தான் உலக அம்மாக்களை ஏமாத்தும் செகண்ட் லைலாக் சொல்லுவாங்க . உன் சட் னி  சூப்பர்  இன்னொன்னு  வேணும் ! அடிப்பாவி இதே சட்னி  தான அன்னிக்கு குடுத்தேன் நல்லா இல்லேனு சொன்னியேனு  கேட்டா  சரி போ  நான் பசியை தாங்கிக்குறேன் அப்டிங்குற மூணாவது டைலாக் அடிப்பாங்க. போய்  தொலை னு மூணு தோசை குடுப்பேன் . சரி இப்பாவது படிக்கலாமா னு கேட்டா  எப்படி சாப்பிட்ட உடனே படிக்கிறது .கொஞ்சம் நேரம் டோரே மான்  பாக்குறேன் அப்பிடின்னு சொல்லுவாங்க . சரி அதுக்குள்ளே வீட்டுல இருக்குற ம த்த  வேலைய  முடிச்சுடுலாம்னு போனா மணி ஆறு ! 


இப்ப படிச்சு தான ஆகணும் . எப்பவும் அந்த பாடத்தை எந்த அளவுக்கு அவ புரிஞ்சுருக்கானு தெறிஞ்சுட்டு தான் அடுத்து  கேள்வி பதிலுக்கு போவேன் . இல்லனா ஒரு வாட்டி  அத சொல்லி குடுத்துட்டு  அப்பறோம் படிக்க வைப்பேன் . படிச்சதுக்கு அப்புறம் அவங்களுக்கு கேள்வி  எழுதி குடுக்கணும் அவங்க பதில் எழுதுவாங்க . அது என்னமோ கேள்விதான் பெருசா இருக்கு பதில் சின்னதா இருக்கு. நம்ம கை வலிக்க கேள்வி எழுதறபாத்து அவங்களுக்கு ஒரே குஷி வேற. செம்ம கடுப்புல இருக்கும் போது  சொல்லுவாங்க .இன்னொரு வாட்டி  படிச்சுக்குறேனு. சரி னு சொல்லுவோம் . ரொம்ப நேரம் சும்மாவே படிக்குற மாதிரி இருக்கும் . நமக்கு செம்ம டென்சன் ஆகும் . அப்பத்தான் இவ்ளோ நேரம் சுவீட் மம்மி யா இருந்த நாம ஆங்கிரி மம்மியா மாறுவோம்அதே நேரத்தில  தான் அவங்க அப்பா என்ட்ரி கொடுப்பாரு . உடனே ஸீன்  சேஞ்சு  இவ்ளோ நேரம் நம்மல  நக்கல் பண்ணிட்டு இருந்தவங்க அழ ஆரம்பிப்பாங்க . படிக்கலைனா வுடு  அப்டினு அவங்கப்பா சொல்லுவார் . சரி படிக்க வேணாம். ஒனக்கு தெரிஞ்சதை எழுதுனு சொல்லுவேன் . அதையும் பண்ண மாட்டாங்க . மிஸ் திட்டுவாங்க  . நான் நல்ல  மார்க் எடுக்கணும் அப்டி இப்டினு ஏக போக டைலாக் அடிப்பாங்க . . காலேஜ்ல 70 பசங்களுக்கு சந்தோசமா பாடம்  எடுக்க முடிஞ்ச எனக்கு ஒரே ஒரு பொண்ண வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே. சப்பா  முடியலப்பா .
அப்பறோம் ஒரு நாள் மார்க் வரும் அதலாம் நல்ல மார்க் எடுப்பாங்க எப்பவுமே 25 கு 20 க்கு மேல எடுத்துடுவாங்க . அப்போ அவங்க அப்பா சொல்லுவார் சூப்பர் குட்டி நீ என் பொண்ணுடா குட்டி !

நாம அப்பவும் இதையெல்லாம் மனசுல ஏத்திகாம காது கேக்காத மாதிரி கிச்சன்ல தோசை சுட்டுகிட்டு  இருப்போம். எதோ நல்லா இருந்த சரி !நம்மளால முடிஞ்சது அவ்ளோதான் !


ஆனா நம்ம மனசோட ரியாக்ஷன்தான் இது ! 

உங்க டைம ரொம்ப வேஸ்ட்டு பண்ணிடனோ ?

படித்தமைக்கு நன்றி

சுபலலிதா



Friday, July 27, 2018

எஸ்.ஆர்.எம் அனுபவங்கள்




ஜூன் 29, 2015. நிஜமாலுமே  வாழ்க்கையில மறக்க முடியாத நாள். அன்னிக்குத்தான் நான் எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்துல துணை பேராசிரியரா வேலைக்கு சேர்ந்தேன். ஜூன் 2014 லயே  பி.ஹெச் .டி. தீசிஸ்  முடுச்சிட்டு கிட்டத்தட்ட ஒரு வருஷம் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு போட்டு அலுத்து போயிருந்தப்ப   ஒரு நிறுவனத்துல வேலை கெடச்சுது. அந்த வேலை எனக்கு பிடிக்காததால  அந்த வேலைய மிகுந்த மன வருத்தத்தோட விட்டென் . விட்ட அன்னிக்கு ஈவினிங் தான் எஸ். ஆர். எம் இருந்து இன்டெர்வியூ  கால் வந்துச்சு. எனக்கு வந்த ஒரே காலும்  அது தான் .அதுவும் அன்னிக்கு வந்தது ஒரு பெரிய மேஜிக்  மாதிரி இன்னிக்கும் தோணும்.  ஜூன் 8  இன்டெர்வியூ. ஒரு பதினைந்து நாட்கள் கழித்து ஒரு சனிக்கிழமை  காலை எஸ்.ஆர்.எம் இருந்து எனக்கு நீங்க செலக்டட்  னு கால் வந்துச்சு. அன்னிக்கு நானும் என் குடும்பத்தாரும் பட்ட சந்தோஷத்திற்கு அளவு இல்ல.  இந்த வாழ்க்கை என்னை எஸ். ஆர். எம் யே  இருக்க வைக்குதோ  இல்லையோ , எனக்கு எஸ். ஆர். எம் எப்பவுமே ஸ்பெஷல் தான்.

ஆசிரியர் ஆகணும்கிறது என் கனவு. அண்ணா பல்கலைக்கழத்துல வேலை செய்யும் பொழுது என்னோட பேராசிரியர்கள்  ரஞ்சனி மேம்  , கீதா மேம் எனக்கு பாடம் எடுத்திருக்காங்க.  நாம கூட பின்னால இந்த மாதிரி எடுக்கணும்னு அவங்க கிட்ட இருந்து சின்ன சின்ன நுணுக்கங்களை தெறிஞ்சு வச்சுப்பேன். இப்பவும் என்னோட பி.எச்.டி  ஸ்காலர்ஸ்க்கு மேம் என்ன எப்படி  கைடு பன்னாங்களோ  அதேயேதான் பாலோ பண்றேன் .அவங்கள மாதிரியே நானும் எனக்கான விதிமுறைகளை வச்சுருக்கேன் . இந்த பதிவுல என்னோட  ஆசிரியர்  அனுபவங்களை பதிவு செய்யறேன் .

அண்ணா பல்கலைக் கழகம் மாதிரியே தான் எஸ் ஆர் எம்மும் இருக்கும் அப்டினு ஜூன் 29, காலைல வேலைக்கு சேர போனேன் . உள்ள போகும்போதே ஒரு ய்யன் பயங்கரமா ஆரஞ்சு கலர்ல கூலிங் க்ளாஸ் போட்டுட்டு  பயங்கர ஸ்டைலா லைப்ரரிக்கு போயிட்டு இருந்தான் . எனக்கு  கொஞ்சம் பயமா இருந்துச்சு. அப்புறம் முதல் க்ளாஸ் நாச்சுரல் லாங்குவேஜ்  ப்ராசஸிங்  பி.   மூன்றாம் ஆண்டுக்கு எடுத்தேன் . அது எலெக்ட்டிவ்  பாடம். 20 பேர் தான் அந்த பாடத்தை தேர்வு செய்து இருந்தாங்க. கொஞ்ச நாள் ஆக ஆக பயம் தெளிஞ்சு  போச்சு. பசங்க பாக்கத்தான் ரொம்ப ஸ்டைலா  இருக்காங்க ஆனா அவங்களும்  குழந்தைகள் தான் அப்டிங்குறத நான் உணர்ந்துக்கிட்டேன்.

எஸ். ஆர்.எம் பல்கலைக்கழகம் ஒரு குட்டி இந்தியா மாதிரி இருக்கும். அங்க வேலை பாக்குறேன் அபிடுங்குறதிக்காக இல்ல . நிஜமாலுமே ஜம்மு முதல் குமரி வரை மாணவர்கள் இருப்பாங்க. வெளிநாட்டு மாணவர்கள் வேற.  நான் பெருசா தமிழ்நாட்டை விட்டு போனதில்லை.  ஒரே முறை  யூ .கே  அப்பறோம் அண்ணா பல்கழகம் மூலமா ..டி  பாம்பே , கோரக்பூர் , ...தி ஐதராபாத் போயிருக்கேன். ஆனா இங்க வந்து அத்தன  ஊர்ல இருந்து வந்து படிக்குற மாணவர்களை பத்தியும்  அவங்க ஊர  பத்தியும் தெருஞ்சுகிட்டேன். ஒரு விஷயம் எனக்கு புரிய ஆரம்பிச்சது. மொழி , கலாச்சார வேறுபாடுகள்  எதுக்குமே ஒரு தடையா இருக்க முடியாது.

நம்ம வேலைய ஒழுங்கா செஞ்சா  எல்லாரோட அன்பயும்  மரியாதையையும்  பெற முடுயும்னு இங்க வந்து தெரிஞ்சுகிட்டேன்.  எம்.   முடுச்ச உடனேயே 2006 சவீதா பொறியியல் கல்லூரில 9 மாதம் ஆசிரியரா வேலை செஞ்சேன். எனக்கு ரொம்ப புடுச்சு இருந்தது. பி.எச்.டி காக தான் அத விட்டுடு  அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தேன் . 2006 இருந்த மாணவர்களுக்கும் இப்போ 2018 இருக்குற மாணவர்களும் அசுர வித்தியாசத்தை உணர முடியுது . என்னோட சவீதா மாணவர்களை நான் கொறச்சு சொல்லல . சொல்லவும் முடியாது. அவங்க ரொம்ப அன்பானவங்க  திறமை சாலிங்க. அவங்கள பத்தி இந்த பதிவு பல வருடங்களுக்கு முன்னாடி எழுதி இருந்தேன்http://subalalitha.blogspot.com/2007/02/mini-achievement-mega-santhosham.htmlகிட்டத்தட்ட அங்க இருந்து அண்ணா பல்கலைக்கழகம்  வந்து  மூன்று வருடம் கழித்து எனக்கு திருமணம் ஆச்சு .இருந்தாலும் என்னோட மாணவர் சதீஷ் என் திருமணத்திற்கு வேலூர் வரை வந்தத என்னால இன்னுமும் மறக்க முடியாது. இன்னமும் அந்த மாணவர்கள் எனக்கு பிறந்தநாள் அன்னிக்கு வாழ்த்து  அனுப்புவாங்க . நான் சொல்ல வந்தது,  அப்போ மாணவர்களுக்கு  இருந்த  தொழில் நுட்ப   எக்ஸ்போஷர் வேற இப்போ உள்ள மாணவர்களுக்கு இருக்குற வசதிகள் வேற.
நான்  எஸ்.ஆர். எம்லவேலைக்கு சேர்ந்த முதல் ஆண்டு சி  ப்ரோக்ராம் சொல்லி குடுத்தேன் . அந்த வகுப்புல 70 மாணவர்கள். ஒரு 50 மாணவர்களுக்கு ஆல்ரெடி சி, சி++, ஜாவா தெறியும் . நான் ஆரம்பிக்குறதுக்குள்ள எல்லாத்தயும் சொல்லி முடிச்சுடுவாங்க.  ஆனா அந்த மிச்ச 20 மாணவர்களுக்கு நான் சொல்லி குடுத்தே ஆகணும். மனசுக்குள்ள அப்போ நெனச்சுப்பேன். "டேய் தம்பிகளா அக்கா சொல்லி  முடுச்சுறேன் டா  என்ன பேச உடுங்க டா" . இந்த பிரச்சனை  நாச்சுரல்  லாங்குவேஜ் ப்ராசஸிங் பாடத்துக்கு இல்ல. நான் தான் அந்த பாடத்துக்கு முதல் ஆசிரியை . அதுவும் 20 மாணவர்கள் . அது புதிய தொழில்நுட்பம் அப்டிங்குறதால  மாணவர்கள் ஆர்வமா கவனிச்சாங்க. போன வருடம் அந்த பாடத்தை 240 பேர் தேர்வு செஞ்சு இருந்தாங்க . இது எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை குடுத்தது .  சி ப்ரோக்கிராம் விஷயத்துக்கு வரேன். நம்ம டீசிங் ஸ்டைலை மாத்தி பாத்தா என்னனு யோசிச்சேன் . பசங்களுக்கு தெரியாத விஷயம் எதாவுது ஒண்ண நாம தெரிஞ்சு அதாவூது ரியல் வேர்ல்ட் அப்ளிகேஷனோட பாடம் எடுத்தா பசங்க கவனிப்பாங்க. நேத்து என்கிட்டே சி ப்ரோக்ராம்மிங்  படிச்ச பையன் ( இப்போ மூன்றாவது ஆண்டு ) என் கிட்ட மெஷின் லேர்னிங் மற்றும் நாச்சுரல்  லாங்குவேஜ் ப்ராசஸிங் ஒரு ப்ராஜெக்ட் செய்ய என்ன நியாபகம்  வச்சு வந்து இருந்தான் . ரொம்ப சந்தோஷமா இருந்தது

சமீப காலமா அதுவும் சுந்தர் பிச்சை அவர்கள்  இந்தியா  வந்து இருந்தப்ப மெஷின் லேர்னிங் முக்கியம்னு  மாணவர்கள் மத்தியில குடுத்த   பேட்டியில்  சொல்லியிருந்ததால  நிறைய மாணவர்கள் மெஷின் லேர்னிங் பாடத்தை தேர்வு செய்ய ஆரம்பிச்சாங்க. எனக்கு ஓரளவுக்கு அத பத்தி தெரியும் ஆனா  அத பத்தி அப்டேட்  செஞ்சே ஆகணும்னு தோணுச்சு . நானும் அந்த பாடத்தை எடுக்க  ஆரம்பிச்சேன் . இப்போ ரெண்டாவது முறை எடுக்குறேன் . இந்த சமயம் போன சமயத்தை விட இன்னும் ஆழமா மெஷின் லேர்னிங் பத்தி புரியற மாதிரி இருக்கு . முதல் நாள் மெஷின் லேர்னிங் வகுப்பு ஆரம்பிக்குறதுக்கு  முன்னாடி நாள் ஒரு மாணவன் என்கிட்டே வந்து சொன்னான், "நான் உங்கள தான்  மெஷின் லேர்னிங் படத்துக்கு தேர்வு செஞ்சிருக்கேன் . நான் ஆண்ட்ரு என்.ஜி. மெஷின் லேர்னிங் ஆன்லைன் கோர்ஸ்  முடிச்சிட்டேன் . தீப் லேர்னிங் கோர்ஸும் முடுச்சிட்டேன் . இன்னும் என்ன பண்ணனும் அப்டினு கேட்டான்  ". நான் மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன் , "இதுவரைக்கும் நீ பண்ணதே  போதும் தம்பி ". இப்ப இருக்குற மாணவர்கள் முன்னாடி போய்  நிக்குறதுக்கே நம்மல  நெறய அப்டேட்  பண்ண வேண்டி இருக்கு . இல்ல  க்ளாஸ கண்ட்ரோல்ல வச்சிருக்க முடியாது . நமக்கு சாடிஸ்பாக்ஷனும் கிடைக்காது .


 இங்க எஸ். ஆர். எம் மாணவர்கள் அவங்க பாடத்துக்கு அவங்க ஆசிரியரை தேர்வு செய்ற  ஆப்ஷன் இருக்கு. நமக்கான மக்சிமம் லிமிட் முடுஞ்சதும் அடுத்த ஆசிரியரை தேர்வு செய்யலாம். நமக்கு  மாக்ஸிமம் லிமிட் பசங்க அலாட்  அகலினா   நம்மள நெறய பசங்க தேர்வு செய்யலன்னு  அர்த்தம் . அதுவும் செமெஸ்டர் முடிவுல மாணவர்கள் நமக்கு ரேட்டிங்   கொடுக்குறாங்க  . அதுவும் நம்மள இம்ப்ரூவ்  பண்ணிக்க வழி வகுக்குது .


இன்னும் இந்த துறைல ஒரு இருபது வருஷம் இருக்கணும்னா நெறய  அப்டேட்  பண்ணியே  ஆகணும்னு நினைக்குறேன் .  பாப்போம் வாழ்க்கை எப்பிடி நம்மள  கொண்டு போகப் போகுதுன்னு .

இந்த பதிவை படிக்க ஒரு பதினைந்து நிமிடமாது ஆயிருக்கும் ஒங்களுக்கு . பொறுமையா படித்ததுக்கு  நன்றி. மீண்டும் சிந்திப்போம் .

சுபலலிதா