Thursday, February 14, 2019

சந்தோஷம்!இன்னிக்கு லீவு போட்டாச்சு . டெய்லி 4.3.0 க்கு எழுந்து சமைச்சு காலேஜூ போறது புடிக்குனாலும்
 ஒரு நாள் பிரேக்  சில நேரம் தேவைப்படுது. அன்னிக்கும்  நமக்கு வீட்ல மொளகா காயவைக்கறது , இட்லி மாவு அரைக்குறதுன்னு ஏதாவது  இருக்கும் பட்  காலை வேலைய  எனக்கு புடுச்சதா ஆக்கிக்கணும்னு  நெனச்சேன் . தட் இஸ்  வை  .   இந்த டயலாக்  வடிவேலு  சொல்லும்போது ரொம்ப சிறப்பா  இருக்கும் . எனக்கு மிகவும் பிடித்த   நடிகர் அவர் தான். படத்துல என்னமோ அவர்தான் எனக்கு ஹீரோ வா  தெரிவாரு . ஹீரோ தான் எதோ சைடு ரோல்  காமெடியனா  தெரிவாரு .

எனக்கு தெருஞ்சு நம்மள சிரிக்க வைக்குறவங்க  தான் கடவுள். நான் என்னிக்கது வீட்ல ரொம்ப கோவப்  படுவேன் .   என் பொண்ணு ம் செல்வாவும் என்ன சிரிக்க வைப்பாங்க . ஆனா எப்பவுமே செல்வாதான் ஷாட் டெம்பெர்ட் . ஒரு நாளுக்கு நூறு வாட்டியது அவர் கிட்ட திட்டு வாங்குவேன் . எனக்கு என்னமோ அவர் கிட்ட திட்டு வாங்குனாதான் அன்னிக்கு திருப்தியா  இருக்கும் . நம்ம எது சொன்னாலும் திருந்த மாட்டேங்குறாளேன்னு அவருக்கு இன்னும் கோபம் வரும் . காலையில எழுந்து உடனே ஏதாது நான் சொதப்பி இருப்பேன் . அதுக்கு திட்டு விழும் . ஒரு வே ள அவர் திட்டலைனா  என்னமோ எனக்கு அவருக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லயோன்னு  ஒரே படப்பிடிப்பா  இருக்கும் . இதெல்லாம் யார் எனக்கு சொல்லி குடுத்தா. என்னோட ஹீரோ வடிவேலுதான் .எவ்ளோ அடிச்சாலும் தாங்குறான் காமெடிய நெனச்சு பாருங்க . சிரிக்காதவங்க இருக்கு முடியாது.


இந்த மாதிரி நம்மள சந்தோஷமா வசிக்கிற விஷயங்கள் என்னென்ன அப்டினு யோசிச்சேன். அதான் இங்க பதிவு பண்ணிருக்கேன் .

எல்லாருக்கும் பிடிச்ச விஷயம் சந்தோஷம் . ஆனா அது எதுல இரு க்குனு தான் நம்மள்ல பாதி பேருக்கு தெரியறது இல்ல . எனக்கென்னமோ நமக்கு புடிச்ச விஷயத்தை பன்னாலே சந்தாஷம் கெடைக்கும்னு  தோணுது. அந்த லிஸ்ட் கீழே

1. என்னதான் சம்பாதிச்சாலும்  செல்வா பாக்கெட்ல இருந்து பணம் சுடுறது எனக்கு பிடிக்கும். அதுக்கு திட்டு வாங்குறது புடிக்கும் .

2. நானும் என் பொண்ணு ம்  சேர்ந்து பக்கத்து தெருல இருக்குற சூப்பர்  மார்க்கெட்டுக்கு போய்  அருண் ஐஸ்கிரீம்  செல்வாக்கு தெரியாம சாப்பிட பிடிக்கும் .

3. நானும் என் பொண்ணு ம் வெள்ளிகிழைமை இரவு யூடூப்பில எங்க ரெண்டு பேருக்கு பிடிச்ச சாங்ஸ் , சானெல்ஸ்  டிவி ல கன்னெக்ட் பண்ணி பாக்க புடிக்கும் .

4. நான் செய் றதுலயே  என்னக்கு பிடிச்சது மீன் குழம்பு தான் . பிரியாணி போர்  அடிச்சுருச்சு .

5.இருட்டா  இருக்குற அதிகாலைல  ஜன்னல் பாத்துட்டே சமைக்க புடிக்கும் .

6. காலேஜ் பஸ்ல போகும்போது  ஹெட்போன்ல எனக்கு புடிச்ச சாங்ஸ் கேக்க புடிக்கும்.


7. காலைல என்னோட காலேஜ் பஸ் காலேஜுக்குள்ள  போகும்போது புடிக்கும்.

8.  கிளாஸ் எடுக்க  புடிக்கும் .

9. ஸ்டுடண்ட்ஸ் கிட்ட ப்ராஜெக்ட் டிஸ்கஷன் எனக்கு ரொம்ப புடிக்கும்


10. நண்பர்களுடன் சேர்ந்து சாப்புட்ர  லன்ச்  ஹவர்  புடிக்கும். அதுல எப்பவுமே ஸ்போர்ட்டிவா  இருக்குற எங்க குரூப்லயே சீனியர் 50 வயது உள்ள விசா மாம் எனக்கு ரொம்ப புடிக்கும் .11.. பழைய நண்பர்கள்  கிட்ட பேச புடிக்கும் . பிரவீனா , வாணி அனிதா , கவிதா மாம் அப்பறோம்  யு.எஸ். ல இருந்து எப்ப வந்தாலும் கால் பண்ற ஸ்ரீவி , வித்யா  காயத்ரி புடிக்கும் . என்னோட அண்ணா பல்கலைக்கழக  நண்பர்களுக்கு ஒரு குரூப் இருக்கு . அதுல மெசேஜ் பாத்தா புடிக்கும் . அவங்ககிட்ட பேசுனா ரொம்ப  லைட்டா  இருக்கும். ஆனா  டைம் தான் இப்போ கெடைக்குறது இல்ல .


12. என் அப்பார்ட்மெண்ட் நண்பர்களுடன்  அரட்டை அடிச்சு சிரிச்சு சிரிச்ச வர வயிறு வலி புடிக்கும் .


இப்படி எத்தனையோ சின்ன சின்ன விஷயங்கள் நெறய  புடிக்கும் .  நீங்களும் உங்களுக்கு என்ன புடிக்கும்னு யோசிச்சு  சந்தோஷமா இருங்க


படித்தமைக்கு நன்றி .


சுபலலிதா1 comment:

a said...

madam, can you teach me multivariate analysis in applied probability and statistics ?

Post a Comment