Friday, December 14, 2018

பரீட்சை அட்ராஸிடீஸ்
டைட்டில பாத்தா எங்கயோ கேள்வி பட்டா மாதிரி இருக்குல்ல. எஸ் நக்கலைட்ஸ்  யு  டியூப்  சேனல்  பாக்றவங்க கேள்வி பட்டுருப்பீங்க .  சேனல் ப்ரோமோஷன் லாம் இல்ல . அதுல நம்பிக்கையும் இல்ல . சரி விஷயத்துக்கு வருவோம். சமீப காலமா என் மனச ரொம்ப பாதிச்ச சம்பவத்தை பத்தி தான் இங்க சொல்லப்போறேன் .  இதயம் பலகீனமானவங்க, 18 வயதுக்கு கீழே உள்ளவங்க மற்றும் ப்ரெக்னன்ட்  லேடீஸ் இந்த பதிவை படிக்க வேணாம் . ! அந்த அளவுக்கு பயங்கரமான விஷயம் இல்ல!  ஒரு வேல என் மனசு அந்த அளவுக்கு பாதிக்க பட்டதால அப்டி எழுதிட்டேன் . சரி இப்பவாது விஷயத்துக்கு வருவோம் .

இந்த காலத்து பசங்க கிட்ட இருக்கிற பிளஸ் என்னனா நம்மள விட அவங்க புத்திசாலி எல்லாரும் நல்லா படிப்பாங்க . அவங்ககிட்ட இருக்குற மைனஸ் என்னனா நம்மள விட அவங்க புத்திசாலி எல்லாரும் நல்லா படிப்பாங்க. என்ன  டைப்பிங் மிஸ்டேக்குனு பாக்குறீங்களா இல்ல அவங்க ப்ளஸ்தான் அவங்க மைனஸும். கொஞ்சம் மந்தமா படிக்குறவங்க  கடுமையா உழைப்பாங்க . நம்ம நல்ல மார்க் எடுக்கணுமேன்னு ஒரு பயம் அவங்க கிட்ட இருக்கும். (எல்லாம் சொந்த அனுபவம் தான் :)) ஆனா இந்த புத்திசாலிங்களுக்கு ஒரு மெதப்பு . இதால  படிப்பு பத்தின ஸீரியஸ்னஸ் அவங்களுக்கு இல்ல .
பத்தாததுக்கு ஏகப்பட்ட டீவியேஷன்ஸ்  சுத்தி சுத்தி . டீ.வி , மொபைல்  அது இதுனு .  இதுல இவங்க படிக்குற பார் ஆப்பிள்  பி பார்  பால் கு 1 லட்சம் பீஸ் வேற . சரி ஓகே  படிச்சா போதும்.  என்னதான் கல்வி வியாபாரமா ஆயிட்டாலும் எனக்கு எப்பவுமே கல்வி மேல ஒரு நம்பிக்கை உண்டு. அதும் பெண் குழந்தைகளுக்கு குடுக்கப்படற கல்வி அவங்கள  கண்டிப்பா இந்த சமுதாயத்துல நல்ல மரியாதையான ஒரு வேலை  பாக்கவும் அவங்க குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கவும் உதவும் . இப்பதான் இந்த பதிவுக்கான மெயின் பாயிண்ட் ஞாபகம் வருது .

என் பொண்ணுக்கு பரீட்சை வருதுன்னா அதுக்கு ஒரு வாரம் முன்னாடில இருந்தே  எனக்கு மனசு பீதி அடைய ஆரம்பிக்கும் .  அந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணின்னுடுவா என்ன .   இந்த விஷயத்துல என் அபார்ட்மெண்ட்   ப்ரண்ட்ஸ் எல்லார்க்கும்  சேம்  ப்ளட்டுதான் ! .

பரீட்சை அன்னிக்கு காலேஜ் பஸ்ல வந்தா அஞ்சு மணி ஆயிடும் னு  கேப்  புக் பண்ணி  நாலு மணிக்கு வருவேன். வந்த உடனே  சரி ஏதாச்சும் ஸ்நாக்ஸ் சாப்பிட வச்சுட்டு படிக்க வெப்போம்னு நெனப்போம். அப்பத்தான் அவங்க அம்மா எனக்கு ரொம்ப பசிக்குதுன்னு சொல்லுவாங்க. உலக அம்மாக்களை ஏமாற்றும் ஒரே டைலாக் இது தான் . சரி என்ன வேணும் னு கேட்டா தோசை வேணும் சொல்லுவாங்க . பொதுவா அவங்க மத்த நாள்ல ஸ்நாக்ஸ் தான் சாப்பிடுவாங்க  ஆனா பரீட்சை னா  மட்டும் இப்படி ! சரி ஒரு தோசை சாப்புடுவாங்கனு  பாத்தா எனக்கு நெய் போட்டு வேணும்பாங்க . சரி ரெண்டு சாப்புடுவாங்கனு  நெனச்சா அப்பத்தான் உலக அம்மாக்களை ஏமாத்தும் செகண்ட் லைலாக் சொல்லுவாங்க . உன் சட் னி  சூப்பர்  இன்னொன்னு  வேணும் ! அடிப்பாவி இதே சட்னி  தான அன்னிக்கு குடுத்தேன் நல்லா இல்லேனு சொன்னியேனு  கேட்டா  சரி போ  நான் பசியை தாங்கிக்குறேன் அப்டிங்குற மூணாவது டைலாக் அடிப்பாங்க. போய்  தொலை னு மூணு தோசை குடுப்பேன் . சரி இப்பாவது படிக்கலாமா னு கேட்டா  எப்படி சாப்பிட்ட உடனே படிக்கிறது .கொஞ்சம் நேரம் டோரே மான்  பாக்குறேன் அப்பிடின்னு சொல்லுவாங்க . சரி அதுக்குள்ளே வீட்டுல இருக்குற ம த்த  வேலைய  முடிச்சுடுலாம்னு போனா மணி ஆறு ! 


இப்ப படிச்சு தான ஆகணும் . எப்பவும் அந்த பாடத்தை எந்த அளவுக்கு அவ புரிஞ்சுருக்கானு தெறிஞ்சுட்டு தான் அடுத்து  கேள்வி பதிலுக்கு போவேன் . இல்லனா ஒரு வாட்டி  அத சொல்லி குடுத்துட்டு  அப்பறோம் படிக்க வைப்பேன் . படிச்சதுக்கு அப்புறம் அவங்களுக்கு கேள்வி  எழுதி குடுக்கணும் அவங்க பதில் எழுதுவாங்க . அது என்னமோ கேள்விதான் பெருசா இருக்கு பதில் சின்னதா இருக்கு. நம்ம கை வலிக்க கேள்வி எழுதறபாத்து அவங்களுக்கு ஒரே குஷி வேற. செம்ம கடுப்புல இருக்கும் போது  சொல்லுவாங்க .இன்னொரு வாட்டி  படிச்சுக்குறேனு. சரி னு சொல்லுவோம் . ரொம்ப நேரம் சும்மாவே படிக்குற மாதிரி இருக்கும் . நமக்கு செம்ம டென்சன் ஆகும் . அப்பத்தான் இவ்ளோ நேரம் சுவீட் மம்மி யா இருந்த நாம ஆங்கிரி மம்மியா மாறுவோம்அதே நேரத்தில  தான் அவங்க அப்பா என்ட்ரி கொடுப்பாரு . உடனே ஸீன்  சேஞ்சு  இவ்ளோ நேரம் நம்மல  நக்கல் பண்ணிட்டு இருந்தவங்க அழ ஆரம்பிப்பாங்க . படிக்கலைனா வுடு  அப்டினு அவங்கப்பா சொல்லுவார் . சரி படிக்க வேணாம். ஒனக்கு தெரிஞ்சதை எழுதுனு சொல்லுவேன் . அதையும் பண்ண மாட்டாங்க . மிஸ் திட்டுவாங்க  . நான் நல்ல  மார்க் எடுக்கணும் அப்டி இப்டினு ஏக போக டைலாக் அடிப்பாங்க . . காலேஜ்ல 70 பசங்களுக்கு சந்தோசமா பாடம்  எடுக்க முடிஞ்ச எனக்கு ஒரே ஒரு பொண்ண வச்சிக்கிட்டு நான் படுற அவஸ்த்தை இருக்கே. சப்பா  முடியலப்பா .
அப்பறோம் ஒரு நாள் மார்க் வரும் அதலாம் நல்ல மார்க் எடுப்பாங்க எப்பவுமே 25 கு 20 க்கு மேல எடுத்துடுவாங்க . அப்போ அவங்க அப்பா சொல்லுவார் சூப்பர் குட்டி நீ என் பொண்ணுடா குட்டி !

நாம அப்பவும் இதையெல்லாம் மனசுல ஏத்திகாம காது கேக்காத மாதிரி கிச்சன்ல தோசை சுட்டுகிட்டு  இருப்போம். எதோ நல்லா இருந்த சரி !நம்மளால முடிஞ்சது அவ்ளோதான் !


ஆனா நம்ம மனசோட ரியாக்ஷன்தான் இது ! 

உங்க டைம ரொம்ப வேஸ்ட்டு பண்ணிடனோ ?

படித்தமைக்கு நன்றி

சுபலலிதா2 comments:

Post a Comment