Friday, July 21, 2017

குழந்தைகள் ....




இப்பதான்  ஒரு விஷயம் புரியுது . ரெண்டு வருஷமா தமிழ்ல எழுதல . வெரி பேட் .  சரி என்ன எழுதறதுன்னு  யோசிக்கும்போது குழந்தைகளை பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணேன் .

வாழ்க்கை ரொம்ப சீரியஸா போய்ட்டிருக்கும்போது கொஞ்சம் சிரிங்க பாஸ்னு   நம்மள தெச  திருப்புறது குழந்தைங்கதான். அண்மையில  அப்டி குழந்தைங்ககிட்ட நான் ரசிச்ச சில விஷயங்களை இங்க பதிவு செய்றேன்

எங்க காலேஜுக்கு ஒரு நாள் ஒரு சக ஆசிரியையோட பையன்  வந்துருந்தான். அவனுக்கு ஒரு நாலு வயசு இருக்கும். அவங்களுக்கு க்ளாஸ் இருந்ததால என்ன கொஞ்ச நேரம் பாத்துக்க சொல்லி போனாங்க. சரி நான் அவன்கிட்ட  பேச்சு குடுத்தேன். அவனுக்கு அண்மையிலதான் ஒரு தங்கச்சி பாப்பா பொறந்து இருந்தது. அவன்கிட்ட கேட்டேன் , "டேய் தம்பி ஒன் தங்கச்சி பாப்பா ஒனக்கு புடுச்சிருக்கா ". அவன் சொன்னான்," எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு  ஆண்டி ". நீ அவளை நல்லா  பத்திரமா பாத்துப்பியானு  கேட்டேன் . அதுக்கு  அவன் , "நான் ரொம்ப நல்லா பாத்துப்பேன் . கிள்ளவே  மாட்டேன் "  அப்டினு  சொன்னான். அப்பவே  எனக்கு புரிஞ்சுது இந்த பயபுள்ள தங்கச்சி பாப்பாவை கிள்ளி இருக்கும்னு. நான் கேட்டேன் , "டேய் தம்பி  நீ  உன் தங்கச்சி பாப்பாவை கிள்ளுன  தான ?"அதுக்கு அவன் சொன்னான், " உங்களுக்கு அப்போ நான் கிள்ளுன  சத்தம் கேட்டுச்சானு ".  அன்னிக்கு  நாள் புல்லா ஒரே சிரிப்பு தான் .


எங்க அபார்ட்மெண்ட்ல  ஏகப்பட்ட குழந்தைங்க. சாயந்தரம் ஆறு மணிக்கு ஒரே கோலாகலாமா  இருக்கும். என்ன வேல இருந்தாலும் என் பொண்ண   சாயந்தரம் நான் கீழ விளையாட கூட்டிப் போயே  ஆகணும் .  சமீப காலமா எங்க அபார்ட்மெண்ட்ல 4-5 வயசு இருக்குற குழந்தைங்க சைக்கிள் சைடு வீல்  எடுத்து தானாவே சைக்கிள் ஓட்ட  கத்துட்ருக்காங்க.  ஒரு வழியா ஒரு  பேட்ச்  ஓட்ட கத்துக்குச்சு. அதுல  ஒரு கொழந்த  செக்யூரிடி  சைக்கிளை பாத்துட்டு , "அங்கிள் நீங்களும்  சைட் வீல்  எடுத்துட் டீங்களா , எப்போ எடுத்தீங்க னு " கேட்டுச்சு . இத கேட்டதும் பயங்கர சிரிப்பு .

இந்த மாதிரி வெகுளியா கொழந்தங்களால மட்டும் தான் இருக்க

 முடியும். முடிஞ்ச வரைக்கும் அவங்கள மாதிரியே சில விஷயங்கள்ல யோசிக்க கத்துக்கணும்னு  ஆசை.

ஆனா ஒரு சில நேரத்துல அவங்க ரொம்ப சீரியஸாவும் திங்க் பண்ணுவாங்க. குழப்பமா இருக்கும்போது சில நேரம் அவங்களே தெளிவான சிந்தனையை நமக்கு தராங்க. இந்த சம்மர் வகேஷன்ல என் பொண்ண காலைல நானே   ஸ்கூல் வேன்ல அனுப்புறது   அப்பறோம் சாந்தரம் நானே ஸ்கூல் வேன்ல இருந்து கூப்டுக்குறது எனக்கு ரொம்ப புடுச்சி இருந்தது. பேசாம வேலைய விட்டுட்டு வீட்டை இன்னும் கொஞ்சம் நல்லா  பாத்துக்கலாமான்னு யோசிச்சேன். என் பொண்ணு கிட்ட  இத பத்தி சொன்னேன், அதுக்கு  அந்த பய புள்ள சொல்லுது. "நான் மட்டும் ஸ்கூல் போய்  கஷ்டப்படணும்   நீ ஜாலியா வீட்ல இருக்கணும்னு  நெனைக்கிறியான்னு  கேக்குது".  கொடும . ஆனா ஒரு விஷயம்  சொல்லியே ஆகணும் .  நான் வேலைக்கு போகறத்துக்கு  முழு ஒத்துழைப்பு குடுத்து  அவ புரிஞ்சுக்கலைனா ரொம்ப கஷ்டம்.

எங்க குடும்பத்துல  இன்னும் ரெண்டு குழந்தைங்க இருக்காங்க.   என் சிஸ்டர் இன்லா வோட இரண்டு பொண்ணுங்க.  அவங்க பண்ற  லீலைகளை ஒரு நாவலாவே  எழுதலாம்.  இன்னொரு பதிவுல அவங்கள பத்தியும்  எழுதறேன்.

படித்ததுக்கு நன்றி

பி.ஸ் : எழுத்துப்  பிழைகளை மன்னிக்கவும் 

2 comments:

ராஜி said...

குழந்தைகளால்தான் நம்ம உலகம் அழகாகுது

சுபலலிதா said...

சரியா சொன்னீங்க ராஜி . வருகைக்கு நன்றி :)

Post a Comment