Saturday, February 17, 2018

டிரைவிங் அனுபவங்கள்போன செமெஸ்டர்  விடுமுறையப்போ  டிரைவிங் கத்துக்கணும்னு தோணுச்சு. என்னால எது பண்ண முடியும் எது பண்ண முடியாது அப்டிங்குறத செல்வா கணிச்சு வச்சிச்சுருப்பாரு. அது
மோஸ்டலி  கரெக்ட்டாதான் இருக்கும். சில சமயம் ஏதாது அவரு தப்பா  கணிச்சுருந்தா நான் அத சொல்லி கன்வின்ஸ் பண்ணுவேன்.  அப்டி அவரு என்னால முடியாதுன்னு  யோசிச்ச விஷயம்தான் டிரைவிங். அதுக்கு காரணம் இருக்கு. கல்யாணம் ஆன புதுசுல எங்கப்பா செல்வாவ எனக்கு வண்டி ஓட்ட சொல்லி குடுக்க சொன்னாரு . எனக்கு சுமாரா சைக்கிள் ஓட்ட தெறியும். ஆனா டூ  வீலர் ஓட்ட தெரியாது. செல்வாவும்  சொல்லிக்குடுத்தாரு. பிரேக் புடிக்க சொன்னா  பதட்டத்துல ஆக்சிலரேட்டர்  குடுத்துட்டேன்.  அன்னிக்கு  செல்வா, " இனிமே நீ டிரைவிங் ட்ரை  பண்ண வேண்டாம்னு" சொல்லிட்டாரு. சரி நானும் விட்டுட்டேன். சமீத்துல  என்னமோ தோணிச்சு. ஏன் ஓட்ட கத்துக்கக்கூடாதுன்னு .  சரி செல்வாக்கிட்ட சொன்னேன், அவரு  போர் வீலர் வேணா கத்துக்கோ  டூ  வீலர்  வேணாம்னு  சொல்லிட்டாரு . பின்ன ? நம்ம குடுத்த டெரர் அப்டில? :)

எங்க பிளாட்ல  ப்ரண்ட்ஸ்ட விசாரிச்சதுல க்ரீன் டிரைவிங் ஸ்கூல் தான் பெஸ்டுன்னு சொன்னாங்க. சரி செல்வாவும் எல்.எல்.ஆர் . போட்டு  முதல் க்ளாஸ்ல விடும்போது மிஸ்டர் பச்சை கிட்ட , (அவர் தான் சொல்லிக்குடுக்குறவரு)  , "கொஞ்சம் சட்டுனு புரிஞ்சிக்க மாட்டாங்க  பாத்து பத்திரமா சொல்லிகுடுங்கன்னு " சொல்லிட்டு போயிட்டாரு . கொஞ்சம் தூரம் ஓட்டுனுதுக்கப்றம் பச்சை சார்  சொன்னாரு. இவ்வளவு நல்லா ஓட்டுறீங்க
 மேடம் .ஒங்கள போயி உங்க வீட்டுகார்  அப்டி சொல்லிட்டாரே , அவர் முன்னாடி நாம ஒரு எட்டு போட்டு காட்டறோம்னு சொன்னாரு. நம்ம ஹிஸ்டரி  பச்சை சாருக்கு  தெரியாதுல்ல? . போக போக நம்ம "டக்கு"  எப்படினு புரிஞ்சுப்பாருனு விட்டுட்டேன்.

பச்சை சார் பத்தி சொல்லியே ஆகணும். அவர் நல்ல டீச்சர். ஆக்சுவலா  அவர் அரசு பேருந்து ஓட்டுநர் . பகுதி நேரமா செய்றார் . அவர்  பையனும்  பொண்ணும்  கூட டிரைவிங்  கத்து குடுப்பாங்க . ரொம்ப மோட்டிவேட் பண்ணுவாரு. பல தரப்பட்டவங்க  வருவாங்க. எல்லாருக்கும் அவங்களுக்கு ஏத்தா மாதிரி சொல்லி தருவார். அவர் அவரோட  ஸ்கூலுக்கு  அவர் பேர்  பச்சை அப்டிங்குறத    க்ரீன் டிரைவிங் ஸ்கூல்னு  வச்சிருந்தது எனக்கு ரொம்ப இனோவெட்டிவா  தோணிச்சு.   ஒரு நாள் ஒரு டர்னிங் வரும்போது நான் மிஸ் பண்ணிட்டேன். அங்க ஒரு சின்ன மலை இருக்கும்.  அவர் சொன்னாரு "மேடம் ஜஸ்டு மிஸ்.இந்நேரம்  நாம மலை ஏறிருப்போம் ". தட் ஆஸம் மொமண்ட்  அவருக்கு செல்வா என்ன பத்தி குடுத்த ஹிண்டு ஞாபகம்  வந்திருக்கணும். ஆனா டென்ஷன வெளியில காமிக்காம சிரிச்சிட்டே  சொல்லி தருவார்.

தினமும் வீட்டுக்கு வந்து நான் ஓட்டுனது பத்தி செல்வா கிட்டயும் என் பொண்ணு கிட்டயும் பேசுவேன். ஒரு நாள் செல்வா திடீர்னு கார ஸ்டாப் பண்ணிட்டு கொஞ்ச தூரம் நீ ஒட்டு அப்டினாரு. நானும் ஓட்ட ட்ரை பண்ணேன் . வண்டி ஸ்டார்ட் பண்ண முடியல  ஹாப்  க்ளட்ச்  புடிக்க வரல .  நம்ம வீட்டு ஆளுங்க சும்மா இருப்பாங்களா ? அதுவும் என் பொண்ணு இருக்கே  நம்மள டேமேஜ்  பண்றதுனா  முன்னாடி நிக்கும். என்னமோ அப்டி ஓட்டுன  அவ்ளோ தூரம்  ஓட்டுனனு  சொன்ன . ஸ்டார்ட் பண்ண கூட தெரியல அப்டினு கிண்டல் பண்ணாங்க.  நம்ம சமாளிப்போம்ல . இந்த கார்  வேற மாதிரி இருக்கு. நீங்க ரெண்டு  பேரும்  இருக்குறதுனால  எங்க  தப்பா ஒட்டி ஏதாது  ஆயிடுமோன்னு  டென்ஷனா  இருக்கு அப்டினு சாக்கு போக்கு  சொல்லி சமாளிச்சேன். அதுக்கப்புறமும் ஒரு நாள் ஓட்ட சொன்னாரு. கொஞ்சம் பதட்டப்பட்டேன். ஆனா ஒட்டிட்டேன்

லைசன்ஸ் எடுக்குற நாள் வந்த்துச்சு. ரொம்ப பயமா இருந்திச்சு.  ஆர். டி . ஓ ஆபிசர்  வர்ற சமயத்துல பச்சை  சார் பையன்  சொன்னாரு," மேடம் நான்  போய்  ஆபீசுல பணம் கட்டணும் . நீங்க சூர்யா ஸ்கூல் கார் எடுத்துக்கோங்க"  அப்டினு சொல்லிட்டாரு . அட பாவிங்களா . கடைசி நிமிசத்துல இப்டி கார மாத்துறீங்களேன்னு  நெனச்சேன் . அந்த கார் எனக்கென்னமோ சரியா வரல . ஒரு ரவுண்ட்  பிராக்டீஸ்  குடுத்தாரு அந்த ஸ்கூல் ட்ரைனர் . அந்த கார் ஹாண்ட்  பிரேக்  எனக்கு ரிலீஸ் பண்ண வரல. நான் ட்ரை பண்ணிட்டு இருக்கும்போது  ஆர்.டி. ஓ  ஆபிசர்  கார்ல ஏறிட்டாரு.  ஸ்டார்ட் பண்ணுங்கனு  சொன்னாரு . எனக்கு ஹாண்ட்  பிரேக்  ரிலீஸ் பண்ண வரல .   சரி இதுக்கு மேல வெயிட் பண்ண கூடாதுன்னு  அவர்கிட்டயே சொல்லிட்டேன் . அவர் ரிலீஸ் பண்ணி குடுத்தாரு.  ஸ்டார்ட் பண்ணா ஹாப்  கிளட்ச் புடிச்சு ஸ்டார்ட் பண்ண  முடியல.
 உடனே நான் டென்சன் ஆவாரத  பாத்துட்டு  பொறுமையா ஸ்டார்ட் பண்ணுங்க "அப்டினாரு. ஸ்டார்ட்  பண்ணிட்டேன் .  கியர் ஒன் அப்டினாரு  போட்டுட்டேன் . அப்பறோம் டூ  த்ரீ  போட சொன்னாரு  போட்டு ஸ்டாப்  பண்ண சொன்னாரு . பண்ணியாச்சு.  ஹய்யா நான் பாஸ் ஆயிட்டேன்.

டெஸ்டு க்ரவுண்டுல  இருந்து  திரும்ப ஆர்.டி .ஓ  ஆபீஸ்  போற வழியில  அந்த சூர்யா டிரைவிங் ஸ்கூல்  ட்ரைனர்  சொன்னாரு, " மேடம்  கேட்டீங்களே ஒரு கேள்வி , ஆர்.டி .ஓ ஆபிசர் கிட்டயே   ஹாண்ட்  பிரேக் எப்படி எடுக்குறதுன்னு ? நான்  மெரண்டுட்டேன்  போங்க",  அப்டினு  சொன்னாரு  ".  ஆனா அவர் சொன்னதுக்கப்றம்தான் தோணிச்சு. நாமளும் கொஞ்சம் ஓவரா  போயிட்டோமோ ? சரி என்ன பண்றது . கேட்டாச்சு . ஒட்டியாச்சு .லைசன்ஸும்  வாங்கியாச்சு . இப்போ யோசிக்கிறதுல்ல பிரயோஜனம்  இல்ல.

கோய்ன்ஸிடென்ட்டலா  யு டியூப்ல  இந்த  விடீயோவை நான் பாத்தேன். இந்த கல்யாணம்  கண்டிஷன்ஸ் அப்ளை அப்டிங்குற  சீரீஸ்  எனக்கும் எம் பொண்ணுக்கும் ரொம்ப புடிக்கும்.  உங்களுக்கும்   புடிச்சா  பாருங்க
 https://www.youtube.com/watch?v=i2AWgeqSuy4.

படித்தமைக்கு  நன்றி . மீண்டும் சிந்திப்போம் .


2 comments:

Avargal Unmaigal said...

படிக்க சுவராஸ்மாக இருந்தன உங்கள் டிரைவிங்க் அனுபவங்கள். இப்ப கார் ஒட்டுறீங்களா இல்லை எப்படி ஒட்டுவது என்பதை மறந்துட்டீங்களா?

சுபலலிதா said...

நன்றி. இப்போ இல்ல :)

Post a Comment