Sunday, June 16, 2013

என் இனிய சொதப்பல்கள் - பகுதி- ?

அதென்ன பகுதி -? அப்டின்னு நெனைக்குறீங்களா ? எதோ கொஞ்சம் சொதப்பி இருந்த கவுண்ட் கரெக்டா தெரியும் .ஏக போகமா சொதப்பி இருகோமா . அதான் அந்த கேள்வி குறி . சரி ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வருவோம். இந்த ஆண்டின் முதல் பதிவு (கொஞ்சம் லேட் தான் இல்ல ?). ரொம்ப வருஷமா எழுதனும்னு நெனச்சுட்டு இருந்த ஒரு பதிவு. கடந்த காலத்த அப்பிடியே மனக்கண்  முன்னால கொண்டுவந்தா சட்டுன்னு
செம்ம பிக்சர் க்லாரிட்டியோட ஞாபகத்துக்கு முந்திட்டு வரது பள்ளி நாட்கள்தான்.  இந்த பதிவும் பள்ளி நாட்கள்ல நடந்த ஒரு சின்ன நிகழ்வப்பத்திதான்.

அப்போ நான் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். ஒரு நாள் என்னோட வகுப்பறைக்கு ஒரு சர்குலர் வந்துச்சு . அதுல இந்த தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்குற ஒரு மாணவி பள்ளி தலைமை ஆயசிரியையை  சந்திக்கணும் அப்பிடினு இருந்துச்சு. அப்போ  லஞ்சு டைம்னு நெனைக்குறேன். சரி ஏதாது  வம்பான வெவகாரமா இருக்கும்னு  அப்போதைய வகுப்பு மாணவர்   தலைவி செல்வி சுமித்ரா  என்ன விஷயம்னு கூட சொல்லாம ஹெச் எம் ஒன்ன கூப்டாங்கன்னு சொன்னா .  சுமித்ராக்கு என் மேல என்ன காண்டோ தெரியல. சரி நானும் ஹெச் எம்ம  போய் பாத்தேன் . அங்க என்ன மாதிரியே நெறைய பேர் ஆல்ரெடி இருந்தாங்க. விஷயம் என்னன்னு அவங்ககிட்ட கேட்டுப்பாத்தேன். அங்கயும் வொய் ப்ளட் சேம்   ப்ளட்  கதைதான். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு எங்க எல்லாரையும் கெடா வேட்டபோற மாதிரி இன்னொரு பில்டிங்குக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கப் போனா நெறைய அங்கிள்ஸ் காதுல ஹெட் செட்டோட ஒக்கந்துருந்தாக . இதென்னடா  வம்பா போச்சுன்னு மனசுக்குள்ள பீதி கெளம்ப  முழிச்ச எங்க எல்லாரையும் பாத்து, அங்க இருந்த ஒரு அங்கிள் , "நாங்க வானொலி நிலையத்ல இருந்து வரோம் . நீங்க எல்லாம் ஒரு சின்ன பேட்டி குடுக்கணும்னு சொன்னாரு". அப்போ என் மனசு பூரா நெறஞ்சு இருந்தது என் சக மாணவி சுமித்ரா தான். இப்பிடி நம்மள கோர்த்து விட்டுட்டாளேன்னு ஒரு அங்கலாய்ப்பு . ஏற்கனவே பீதில இருந்த எனக்கு இன்னொரு பெரிய பீதி காத்துட்டு இருந்தது . அந்த ரேடியோ அங்கிள் ,"நீங்க எல்லாரும் உங்க பள்ளி நூலகத்த பத்திதான் எனக்கு பேட்டி கொடுக்கப்போறீ ங்கன்னு சொன்னாரு". என்னது நம்ம பள்ளிகூடத்துல நூலகமா ? அது எங்க இருக்குனு யோசிச்சிட்டு இருந்தப்ப தான் யாரோ பக்கத்துல்ல இருந்தப் பொண்ணு சொல்லிச்சி நம்ம இப்போ ஒக்காந்துட்டு இருக்குற எடம்தான் நம்ம ஸ்கூல் லை ப்ரேரின்னு . லைப்ரேரியாஅப்போ புக்ஸ் எங்க? எனக்கு ஒரே கொழப்பமா இருந்துச்சு .அப்போ அந்த அங்கிள் எல்லாருக்கும் ஆல் தி பெஸ்ட் நல்லா பேசுங்கன்னு சொன்னது எனக்கு மட்டும் நல்லா சொதப்புங்கன்னு சொன்ன மாதிறியே கேட்டுச்சு. எனக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா ? நீங்க எந்த மாதிரி புக்ஸ் லைப்ரரில படிப்பீங்க ?. லைப்ரரி எங்க இருக்குன்னே இன்னைக்குதான் கண்டு புடுச்சிருக்கோம் .அதுக்குள்ல எங்க படிக்குறது?கொஞ்சம் எங்களுக்கும் டைம் கொடுக்கணும்ல . நான் கொஞ்சம் தயங்கினது அந்த அங்கிளுக்கு புருஞ்சிருக்கும் போல .சும்மா எதாச்சும் சொல்லுமா . நல்ல மனுஷன் . நானும்,  எனக்கு கவிதைலாம் புடிக்கும்னு சொன்னேன். உடனே அவரு புது கவிதையா இல்ல மரபுக் கவிதையானு கேட்டாரு . இப்பதான இவர நல்லவர் னு நெனச்சோம் .அதுக்குள்ள ஏன் இவரு பேர கேடுதுக்குறார்னு நெனசுக்குட்டேன் .உடனே நானு ,"ரெண்டும் படிப்பேன்னு  "ஒரு பொதுவான பொய்ய சொல்லி சமாளிச்சேன். ஆனா அந்த அங்கிள் நேஜாமாலுமே நல்லவர்தான். அந்த ஒரு கேள்வி தான் கேட்டாரு. இந்த மாதிரி எல்லார்ட்டயும் ஒரு கேள்வி கேட்டு முடிச்சு நாங்க அங்க இருந்து கெளம்பிட்டோம். அப்புறம் அந்த பேட் டி ரெண்டு நாள் கழிச்சு ஒலிபரப்பு ஆகும்னு  ஹெச் எம் மைக்குல அனௌன்ஸ் பண்ணாங்க . கிளாஸ்ல எல்லாருக்கும் ஒரே குஷி . கொஞ்சம் சந்தோஷமா இருந்தாலும் உள்ளுக்குள்ள என்னமோ ஒரு டென்ஷன் இருந்துச்சு. வீட்டுக்கு வந்து சொன்னப்போ அப்பா அம்மா தம்பிங்க எல்லாரும் சந்தொஷப்பட்டாங்க .அன்னிக்கு ராத்திரி ரொம்ப நேரம் வீட்ல எல்லாரும் ஒக்காந்து சந்தோஷமா பேசிட்டு இருந்தோம்

மறு நாள் காலைல அப்பா பாட்டி சீரியஸ்னு திருநெல்வேலிக்கு கெளம்பிட்டார் . நம்ம டைம் சூப்பரா வொர்க்கௌட் ஆக ஆரம்பிச்சுருச்சு .பாட்டி டென்ஷன் ஒரு பக்கம் ரேடியோல  பேட் டி கேக்கனும்ங்  டென்ஷன் இன்னொரு பக்கமா இருந்துச்சு. அப்போதான் பாட்டி இறந்த தகவல் வந்துச்சு. சரி ரேடியோ பேட்டி அம்பேல்னு அந்த பீலிங்க  மூட்ட கட்டிட்டு நானும் எங்க ஊருக்கு போய் ட்டேன் . இந்த ரேடியோ விஷயம் பத்தி என் பெரியம்மா பொண்ணு கிட்ட சொன்னேன். உடனே அவ  சொன்னா, "ஒன்னும் கவலைப்படாத . அந்த நிகழ்ச்சிய நீ இங்க கூட கேக்கலாம்னு என்ன சமாதானபப்டுத்துனா ". சென்னை ரேடியோ ஸ்டேஷன் வேற நெல்லை ஸ்டேஷன் வேறன்ற டெக்னாலஜி லாம் எங்க ரெண்டு பேருக்கும் தெரியல. எங்க ஊர் செம்ம கிராமம் . ரு  சில வீட்லதான் ரேடியோவே இருக்கும் . நானும் என் பெரியம்மா பொண்ணும் ரேடியோ இருக்குற வீட்ட கண்டு புடிச்சி ரேடியோ கேட்டோம் . ஒன்னும் நடந்த பாடு இல்ல . சரி நாளைக்கு ஒலிபரப்புவாங்கனு,  தொடர்ந்து ஒரு அஞ்சு நாளைக்கு அந்த வீட்டுக்கு நடையா நடந்தோம் . அப்புறம் என்ன ? மாத்தம்தான் மிச்சம். பெரியவங்ககிட்ட   ஒழுங்கா விஷயத்த சொல்லி இருந்தா அட்லீஸ்ட்டு   வெட்டியா நடந்ததாவது தவிர்த்து இருந்திருக்கலாம். நம்ம டைம் அப்டி


சரி  ஒரு வழியா சென்னை வந்து ஸ்கூலுக்கு போனேன் . அப்போ என் வகுப்பு ஆசிரியை திரு. வசந்தகுமாரி மேடம் என்ன கூப்ட்டு ,"நான் நீ ரேடியோல பேசினத கேட்டன்னு சொன்னாங்க ". வெந்த புண்ணுக்கு மருந்து போட்ட மாறி இருந்துச்சு . அப்புறமா நான் யோசிச்சப்பதான் எனக்கு ஒன்னு வெளங்குச்சு . மேடம் பேசுனத கேட்ட ன் னு சொன்னாங்க .நல்லா பெசுனனா இல்ல சொதப்புனானு சொல்லலையே . அவங்கள்ட்ட போய் கேக்கவும் பயம் . வேற யாரும் கேக்கவும் இல்ல . ஏன் நானே கேக்கல பின்ன எப்டி தெரிஞ்சுக்குறது . அது போகட்டும் அந்த லைப்ரேரில ஏன் புக்ஸ் இல்ல ?இன்னைக்கு வரைக்கும் அந்த கேள்விகள்  என் மனசுல ஒரு புதிராவே இருக்கு. பீலிங்க்ஸ் பீலிங்க்ஸ். நாங்களும் பீலிங்க்ஸ் எண்டிங் கொடுப்போம்ல . இன்னுமா படிக்குறீங்க . நீங்க நியாயத்துக்கு நல்லவங்க போங்க . இவ்ளோ தூரம் படிச்சு இருக்கீங்க . அதோட விடுவோமா . இன்னும்  இருக்கு . படிங்க . இந்த பதிவுல எவ்வளவோ எழுத்து  பிழை இருந்தும் கடைசி வரைக்கும் படிச்சீங்க பாருங்க . உங்க தமிழ் ஆர்வம் எனக்கு ரொம்ப புடுச்சி இருக்குங்க . சாரி லைட்டா கலாய்ச்சுட்டனா. ரொம்ப நன்றி இந்த பதிவ படிச்சதுக்கு (கலாய்ச்சாலும் நன்றி உணர்ச்சி உள்ளவங்க நாங்க ). அடுத்த பதிவில் சிந்திப்போம்

-

Monday, December 31, 2012

வட போச்சே !!!




2012 இன் இரண்டாம் பதிவுகடைசி பதிவும் கூடஇந்த வருட அனுபவங்களை ஒரு பதிவாக எழுதனும்னு  ஆசைஆசைய நிறைவேற்ற இப்போதைக்கு முடியலைனாலும் ஒரு சின்ன அனுபவத்தயாவது எழுதி இந்த வருஷத்த முடிக்கலாமேன்னு இந்த கூகுள் டைப்பிங்கோட போராடிக்கிட்டு இருக்கேன் . போராடினு டைப் பண்ணா போரடினு டைப் ஆவுதுபோராடினு டைப் பண்றதே ஒரு பெரிய போராட்டமாவுல இருக்குசரி எப்பதாமா நீ விஷயத்துக்கு வருவன்னு நீங்க மனசுல நெ னைக்குறது எனக்கு புரியுதுமனமிருந்தா அடுத்த பாராவ படிங்க . 

ஒரு நாள் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வீட்ல இருந்து கெளம்பினேன். வீட்டுக்கு பக்கத்தல ஆட்டோ நின்னுச்சு. எவ்வளவு ஆகும்னு கேட்டேன்.150 ரூபா ஆகும்னார். சரி எதுக்கு காசு செலவு பண்ணனும்னு பஸ்ல போகலாம்னு முடிவு பண்ணேன். ஆனா பஸ் ஸ்டாண்டுக்கு எப்பிடியும் ஆட்டோலதான் போகணும். அதுக்கு 35 ரூபா. பஸ்ல போனா 35+8= 43. 150-43= 107 ரூபா சேமிக்கலாம்னு ஆடோவுல ஏறி பஸ் ஸ்டாண்ட் போனேன். 21 L பஸ்ல ஏறி ஒக்காந்தேன் . மணி காலை 8.15 ஆச்சு . பஸ் கெளம்புன பாடு இல்ல. 9 மணிக்கு பல் கலைக்கழகத்துல கையெழுத்து போடணும். சரி 8.30 வரைக்கும் பாக்கலாம்னு இருந்தேன். மணி 8. 30 ஆச்சு. இதுக்கு மேல காக்க முடியாதுன்னு ஆட்டோவுல போக முடிவு செஞ்சேன். 200 ரூபா கேட்டாரு. தல கிறுகிறுன்னு சுத்த ஆரம்பிச்சுருச்சு. இன்னொரு ஆட்டோவ கேட்டுபாத்தேன். 210 ரூபான்னு சொன்னாரு. கண்ண கட்றகுதுக்குள்ள 200 ரூபா கேட்ட ஆட்டோவுல ஏறினேன் . ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்போது 21 L பஸ்சும் ஸ்டார்ட் ஆச்சு. சரி பஸ் ச்டாபிங் ச்டாபிங்கா நின்னு போகும். ஆட்டோவுல போனா விர்ருன்னு போயிரலாம்னு மனச தேத்திக்கிட்டேன். நான் நெனச்ச மாதிரி 21 L பஸ் ச்டாபிங் ச்டாபிங்கா நின்னுச்சு. இங்கதான் ஸ்டோரில ஒரு டுவிஸ்ட்டு. நம்ம ஆட்டோ ஓட்டுனர் என்ன பன்னாரு . அந்த பஸ்ச ஓவர்டேக் பண்ணாம அதுக்கு பின்னாடியே போனாரு. சரி ச்டாபிங்ல ஓவர்டேக் பண்ணுவார்னு பாத்தா இவரும் ச்டாபிங் ச்டாபிங்கா நின்னு நின்னு போனாரு. சப்பா !!! வந்த டென்சன வெளிகாட்டாம அந்த பஸ்ல இருந்துதான் எறங்கி ஆட்டோவுல ஏறினேன்ற விஷயத்த சொன்னேன். அப்பயும் ஒன்னும் பிரயோஜனப்படல. மனுஷன் சரி நிதானம்ல. ஆட்டோவுல இருந்து எறங்குபோது பாத்தா 21 L பஸ்சும் அப்பத்தான் அண்ணா பல்கலைக்கழக ச்டாபிங்ல இருந்து கெளம்புச்சு. என்ன ஒரு பத்து மீட்டர் தூரம் நடக்க வேண்டி இருக்கல .அம்புட்டுதேன். ஆனா அதுக்கு நான் 192 ரூபா (200-8=192) அதிகமா குடுத்திருகேன்னு நெனைக்கும் போது மனசு லைட்டா கலங்குது. ஒழுங்கு மரியாதையா வீட்டு பக்கத்லையே ஆட்டோ ஏறி இருந்தா 150 ரூபாவோட போயிருக்கும். 35+ 200 =235 ரூபா தண்டம். சரி 9 மணிக்கு கையெழுத்தாவது போட்டேனா? அதுவும் இல்ல . சில நேரத்ல ஓவர் சிக்கனமா யோசிச்சா இப்பிடி லம்ப்பா ஆப்பு வருது . என்ன பண்றது. விதி வலியது . 



இந்த பதிவின் மூலம் தாங்கள் சொல்ல விரும்புவது ? அப்டின்னு நீங்க நெனச்சீங்கன்னா  எப்பவும் போல எதுவும் நான் சொல்ல வரல. இந்த வருஷத்துல இன்னொரு பதிவு எழுதனும்னு  நெனச்சேன் . எழுதிட்டேன் . அவ்ளோதான் . இவ்ளோ தூரம் படிச்ச உங்க மன தயிரியத்த  மதிக்கிறேன் . அதுக்கு தங்களுக்கு என்னோட நன்றிகள் மற்றும் உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . ஏதோ என்னால முடிஞ்சது .





Thursday, August 25, 2011

மூக்கு கண்ணாடி ஆசைகள் ....



நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் வலைப்பூவுல எழுதறேன் ...அதுக்கு எனக்கு நானே ஒரு குட் சொல்லிக்குறேன்...
அத முடிச்சிட்டு எழுதலாம், இத முடிச்சிட்டு எழுதலாம்னு கடைசில எதையும் முடிக்க முடியல . சரி எழுதவாவது செய்வோம்னு ஆரம்பிச்சாச்சு.இந்த மொக்கைய ஆல்ரெடி செல்வாகிட்ட போட்டாச்சு.. சரி மத்தவங்ககிட்டயும் பகிரலாமேன்னு இத ஆரம்பிக்கிறேன்...

சின்ன வயசுல அதென்னமோ அந்த மூக்கு கண்ணாடி மேல ஒரு விருப்பம். மூக்கு கண்ணாடி மாட்டி இருக்றவங்க எல்லாரும் அழகா இருக்காங்கனு ஒரு நெனப்பு. நம்மளால கண்ணாடி போட முடியலயேன்னு ஒரு வருத்தம் வேற . சரி நம்ம தான் கண்ணாடி போடல . நம்ம அப்பா அம்மா கூட போட மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம் .

அப்போ ரெண்டாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்னு நெனைக்குறேன். அப்பா கண் டாக்டர பாக்கப் போறதா சொல்லிக்கிட்டு இருந்தாரு . அன்னிக்கெல்லாம் ஒரே குஷி . நம்ம அப்பாவும் கண்ணாடி போடப் போறாருன்னு ஒரு குதூகலம்.கண்ணாடி போட்ட அப்பாவ பாக்க தெருவிலயே காத்துகிட்டு இருந்தேன். பக்கத்துக்கு வீட்டு பிரண்ட்ஸ் கிட்ட ஒரே பெரும வேற. ஆனா அப்பா கண்ணாடி போடாம நடந்து வரத பாத்து பொசுக்குனு ஆயுடுச்சு. ஏம்பா கண்ணாடி போடலன்னு ஒரே அழுக. ஒரு நாள் ,ஒரு வழியா அப்பாவும் கண்ணாடி போட்டாரு.ஆனா அப்பா மத்த அப்பா மாதிரி எப்பவும் கண்ணாடி போடாம படிக்கும்போது மட்டும் போடறது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.அவர் போடாத நேரத்துல அந்த கண்ணாடிய போட்டு பாத்து அந்த மன கஷ்டத்த சந்தோஷமா மாத்திக்குவேன்.

சின்ன வயசுல இருந்து நமக்கு எப்போ வயசாகும்,கண்ணாடி போடலாம்னு ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்திட்டே இருக்கும் .இதலாம் ஏதோ சின்ன வயசுல நடந்துச்சு . சோ மன்னிசிரலாம்னு வச்சுகோங்க .
பி .இ. படிக்கும்போதுகூட நான் அடங்கல. கண்ணு வலிக்குது சரியா தூர இருக்கிறது தெரியல டாக்டர்ட கூட்டிட்டு போங்கன்னு ஒரே ராவடி.டாக்டரும் தூரத்தல இருக்ற எழுத்து தெரியுதான்னு டெஸ்ட் பண்ணாரு.அதுல பாசும் ஆயாச்சு.அப்றோம் ஏம்மா இங்க வந்தேன்னு டாக்டர் கேட்டாரு.இல்ல இத விட தூரத்துல இருக்கிறது தெரியலன்னு சொன்னேன். அதுக்கு டாக்டரு, ஒனக்கு மட்டும் இல்ல அது யாருக்குமே தெரியாது, போயிட்டுவாமான்னு சொல்லிட்டாரு.ஒரே ஏமாத்தமா போச்சு.அது அந்த டாக்டருக்கு புரிஞ்சுருக்கும் போல. 0.25 பவர்ல கண்ணாடி வேணா போட்டுக்கோன்னு சொல்லிட்டாரு.நானும் கொஞ்ச நாள் போட்டுக்கிட்டு திரிஞ்சேன் .சீ இந்த பழம் புளிக்கும்னு அப்றோம் போடறது இல்ல .

அப்றோம் வேற என்ன? மொக்க முடிஞ்சது. அடுத்த மொக்கைப் பதிவில் சந்திப்போம்.. படிச்சதுக்கு மிக்க நன்றி :)