Monday, December 31, 2012

வட போச்சே !!!
2012 இன் இரண்டாம் பதிவுகடைசி பதிவும் கூடஇந்த வருட அனுபவங்களை ஒரு பதிவாக எழுதனும்னு  ஆசைஆசைய நிறைவேற்ற இப்போதைக்கு முடியலைனாலும் ஒரு சின்ன அனுபவத்தயாவது எழுதி இந்த வருஷத்த முடிக்கலாமேன்னு இந்த கூகுள் டைப்பிங்கோட போராடிக்கிட்டு இருக்கேன் . போராடினு டைப் பண்ணா போரடினு டைப் ஆவுதுபோராடினு டைப் பண்றதே ஒரு பெரிய போராட்டமாவுல இருக்குசரி எப்பதாமா நீ விஷயத்துக்கு வருவன்னு நீங்க மனசுல நெ னைக்குறது எனக்கு புரியுதுமனமிருந்தா அடுத்த பாராவ படிங்க . 

ஒரு நாள் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வீட்ல இருந்து கெளம்பினேன். வீட்டுக்கு பக்கத்தல ஆட்டோ நின்னுச்சு. எவ்வளவு ஆகும்னு கேட்டேன்.150 ரூபா ஆகும்னார். சரி எதுக்கு காசு செலவு பண்ணனும்னு பஸ்ல போகலாம்னு முடிவு பண்ணேன். ஆனா பஸ் ஸ்டாண்டுக்கு எப்பிடியும் ஆட்டோலதான் போகணும். அதுக்கு 35 ரூபா. பஸ்ல போனா 35+8= 43. 150-43= 107 ரூபா சேமிக்கலாம்னு ஆடோவுல ஏறி பஸ் ஸ்டாண்ட் போனேன். 21 L பஸ்ல ஏறி ஒக்காந்தேன் . மணி காலை 8.15 ஆச்சு . பஸ் கெளம்புன பாடு இல்ல. 9 மணிக்கு பல் கலைக்கழகத்துல கையெழுத்து போடணும். சரி 8.30 வரைக்கும் பாக்கலாம்னு இருந்தேன். மணி 8. 30 ஆச்சு. இதுக்கு மேல காக்க முடியாதுன்னு ஆட்டோவுல போக முடிவு செஞ்சேன். 200 ரூபா கேட்டாரு. தல கிறுகிறுன்னு சுத்த ஆரம்பிச்சுருச்சு. இன்னொரு ஆட்டோவ கேட்டுபாத்தேன். 210 ரூபான்னு சொன்னாரு. கண்ண கட்றகுதுக்குள்ள 200 ரூபா கேட்ட ஆட்டோவுல ஏறினேன் . ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்போது 21 L பஸ்சும் ஸ்டார்ட் ஆச்சு. சரி பஸ் ச்டாபிங் ச்டாபிங்கா நின்னு போகும். ஆட்டோவுல போனா விர்ருன்னு போயிரலாம்னு மனச தேத்திக்கிட்டேன். நான் நெனச்ச மாதிரி 21 L பஸ் ச்டாபிங் ச்டாபிங்கா நின்னுச்சு. இங்கதான் ஸ்டோரில ஒரு டுவிஸ்ட்டு. நம்ம ஆட்டோ ஓட்டுனர் என்ன பன்னாரு . அந்த பஸ்ச ஓவர்டேக் பண்ணாம அதுக்கு பின்னாடியே போனாரு. சரி ச்டாபிங்ல ஓவர்டேக் பண்ணுவார்னு பாத்தா இவரும் ச்டாபிங் ச்டாபிங்கா நின்னு நின்னு போனாரு. சப்பா !!! வந்த டென்சன வெளிகாட்டாம அந்த பஸ்ல இருந்துதான் எறங்கி ஆட்டோவுல ஏறினேன்ற விஷயத்த சொன்னேன். அப்பயும் ஒன்னும் பிரயோஜனப்படல. மனுஷன் சரி நிதானம்ல. ஆட்டோவுல இருந்து எறங்குபோது பாத்தா 21 L பஸ்சும் அப்பத்தான் அண்ணா பல்கலைக்கழக ச்டாபிங்ல இருந்து கெளம்புச்சு. என்ன ஒரு பத்து மீட்டர் தூரம் நடக்க வேண்டி இருக்கல .அம்புட்டுதேன். ஆனா அதுக்கு நான் 192 ரூபா (200-8=192) அதிகமா குடுத்திருகேன்னு நெனைக்கும் போது மனசு லைட்டா கலங்குது. ஒழுங்கு மரியாதையா வீட்டு பக்கத்லையே ஆட்டோ ஏறி இருந்தா 150 ரூபாவோட போயிருக்கும். 35+ 200 =235 ரூபா தண்டம். சரி 9 மணிக்கு கையெழுத்தாவது போட்டேனா? அதுவும் இல்ல . சில நேரத்ல ஓவர் சிக்கனமா யோசிச்சா இப்பிடி லம்ப்பா ஆப்பு வருது . என்ன பண்றது. விதி வலியது . இந்த பதிவின் மூலம் தாங்கள் சொல்ல விரும்புவது ? அப்டின்னு நீங்க நெனச்சீங்கன்னா  எப்பவும் போல எதுவும் நான் சொல்ல வரல. இந்த வருஷத்துல இன்னொரு பதிவு எழுதனும்னு  நெனச்சேன் . எழுதிட்டேன் . அவ்ளோதான் . இவ்ளோ தூரம் படிச்ச உங்க மன தயிரியத்த  மதிக்கிறேன் . அதுக்கு தங்களுக்கு என்னோட நன்றிகள் மற்றும் உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் . ஏதோ என்னால முடிஞ்சது .

11 comments:

ramapriyamr said...

Very nice subha!!! laughed a lot!!!! u can become a writer subha.............

சுபலலிதா said...

thanks rama :)

Avargal Unmaigal said...

சிரிக்க வைத்த பதிவு....புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சுபலலிதா said...

@ avargal unmailgal :தங்கள் பெயரை உங்கள் வலைப்பூவிலிருந்து அறிய முடியவில்லை . கருத்திற்கும் புத்தாண்டு வாழ்த்திற்கும் மிக்க நன்றி . தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள்

Rajalakshmi said...

good de. Nanum intha mathiri niraya thadava mattitu irunthurukaen. hmm athellam niyabagam varuthu itha padichavudanae

சுபலலிதா said...

@ raji: thanks for ur continuous comments di:)

JP said...

It's all in the Game....

சுபலலிதா said...

@ pon prakash: thanks for visiting and commenting on my blog.

Rafeeq ul Islam said...

lol

Rafeeq ul Islam said...

vada poche...

சுபலலிதா said...

@rafeeq: thanks for the visit and comments:)

Post a Comment