Thursday, February 10, 2011

மொக்கை பதிவு ஒன்றுஹய்யா தமிழுக்கு மட்டுமே தனி வலைப்பூ தொடங்கிட்டேன் :)
இப்பிடி ஏதாது செஞ்சாதான் தமிழ்ல நெறைய எழுதலாம் .அது இல்லாம தமிழ் மணம் போன்ற வலைத்தலங்கள்ள பதிவு செய்ய முழுக்க முழுக்க வலைப்பூ தமிழ்ல இருக்க வேண்டி இருக்கு.
மொத மொதல்ல எழுதுறோம்.என்ன எழுதலாம்னு யோசிச்சா பெருசா ஏதும் தோனல.(எப்பவும் போல !)சரி எப்போதும் போல வாழ்க்கையில நடக்ற மொக்க விஷயங்களையே எழுதிடலாம்னு முடிவு பண்ணி அடுத்த பத்தில அத எழுதி இருக்கேன்.முடிஞ்சா படிங்க :)

எனக்கு நண்பர்கள் கொஞ்சம் அதிகம்.ஆனா அத்தன நண்பர்கள் கிட்டயும் தொடர்ந்து காண்டக்ட்ல இருக்க முடியறது இல்ல.இத கூட கம்யூனிகே ஷன் கேப்னு ஆங்கிலத்துல சொல்லுவாங்களே அதான் அதேதான்...ஆனா கொறஞ்ச பட்சம் ஒரு மின்னஞ்சல் வருடத்திற்கு ஒரு முறையாவது (பிறந்த நாள் வாழ்த்துதான் வேறன்ன ?) அனுப்பிச்சுடுவேன். நண்பர்களும் அப்படித்தான். ஆனா சில நண்பர்கர்கள் கிட்ட மாதம் ஒரு முறை அல்லது இரு மாதத்திற்கு ஒரு முறைன்னு தொலை பேசி மூலம் பேசிடுவேன். இதுல சில நண்பர்கள சந்திக்க அல்லது தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ள படுற பாடு இருக்கே.ரொம்ப கஸ்டம்.

என்னோட நெருங்கிய தோழி அனிதாவோட கொழந்தைய பாக்க ரெண்டு வருஷமா அவ கிட்ட போராடுறேன். கொழந்த பள்ளிக்கூடமே போகப் போகுது. அநேகமா கொழந்தையோட கல்யாணத்துக்கு போவேன்னு நெனைக்குறேன்.அனிதாவ சொல்லி குத்தமில்ல.அவளோடசூழ்நிலை அப்பிடி. அவ சொல்ற நேரத்துக்கு நான் போக முடியல. நான் சொல்ற நேரம் அவளுக்கு செட் ஆகல.

இதுக்கு நடுவுல என்னோட இன்னொரு தோழி அபிக்கு கொழந்த பொறந்தது. அதுக்கும் போக முடியல. சரி இப்போ என்னம்மா ஒனக்கு வேணும்னு நீங்க யோசிக்குறது புரியுது. நான் என்ன சொல்ல வரேன்னா நெலம இப்பிடி இருக்க அபிக்கு நெறைய கால்ஸ் என்ன அறியாமையே நான் பண்ணிட்டேன்.அது எப்பிடின்னு நீங்க கேக்கலாம்.அங்கதான் ஒரு ட்விஸ்ட்டு இருக்கு.(இத எங்க நண்பர்கள் பாஷையில "டுச்ட்டு" அப்பிடுன்னு சொல்லுவோம் ) அபியோட பேரு மொதல்ல தொலை பேசில்ல ஸ்டோர் ஆகி இருக்கறதால அப்பிடி ஆகிருச்சு. சரி ஒரு சாரி மெசேஜ் அனுப்பலாம்னு யோசிப்பேன். சரி பரவால்ல அப்பிடியாவது அவ கால் பண்ணட்டும்னு விட்டுட்டேன்.சரி ரொம்ப நாள் இப்பிடி தெரியாம கால் போனதால அபி நம்பர ரெண்டாவது நம்பரா ஸ்டோர் பண்ணிட்டேன். ஏம்மா அது எப்பிடி தெரியாம பல தடவ நீ கால் பண்ணுவன்னு நீங்க கேக்கலாம். நாங்கள்லாம் அப்பிடித்தான். போன் கையில இருந்தா அத சுத்தி சுத்தி வெளையாடி போனுக்கே தல சுத்துற அளவுக்கு பண்ணிருவோம் .

இப்பிடியே நாள் போக அபி ஒரு ரெண்டு மாசம் கழிச்சு கால் பண்ணினா. அவ சொன்னா," சாரி சுபா ரொம்ப நாள் நீ எனக்கு பேச ட்ரை பண்ண ஆனா கொழந்தையோட பிசியா இருந்ததால அட்டென்ட் பண்ண முடியல". நான் வேற என்ன சொல்றது. நான் சொன்னேன்... "நானும் ரொம்ப சாரி அபி.தெரியாம நம்பர் அழுத்திட்டேன்னு சொன்னேன்". அபி சம டென்ஷன் ஆயிருப்பான்னு நெனைக்குறேன்.ஆனா அவ வெளியில காட்டிக்கல.குட் கல்:) ஆனா இன்னிக்கு வரைக்கும் அபியோட கொழந்தையையும் பாக்க முடியல. எனக்கும் நேரம் இல்ல. அவளுக்கும் நேரம் இல்ல..என்ன பண்றது. சரி ஏதோ அப்பிடி இப்பிடின்னு டச்லயாவது இருக்கோமேன்னு சந்தோஷப் பட்டுக்கிட்டேன் .பின்ன ஆறு வருஷ பழக்கமாச்சே. நான் முதுகலை பட்டம் வாங்க என்னோட சேத்து ஒழச்ச ஜீவன்களின் எண்ணிக்கை ஆறு . அதுல இந்த அபி, அனிதா, அப்புறம் வாணி, புனிதா மற்றும் செல்வா குழுவினர் அடக்கம்.இவங்கள்லாம் என்ன ராப்பகலா படிக்க வச்சு பாஸ் பண்ண வச்ச கதைய இன்னொரு பதிவுல எழுதுறேன்.

சரி நீ கடைசில என்னதாம்மா சொல்ல வரன்னு நீங்க யோசிக்கலாம். கடைசில கருத்து சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல இல்லியா.நேரம் கொஞ்சம் கெடச்சுது. சரி ஏதாது எழுதனுமேன்னு எழுதுனேன் அவ்ளோதாங்க.ஆனா ஒண்ணுங்க. பொதுவாத்தான் மொக்க போட்டேன் .அதுல நீங்க வந்து மாட்டுவீங்கன்னு நான் சத்தியமா நெனைக்கல.முடிஞ்சா இன்னொரு மொக்க பதிவுல சந்திப்போம்.

11 comments:

தினேஷ் ராம் said...

//அதுல நீங்க வந்து மாட்டுவீங்கன்னு நான் சத்தியமா நெனைக்கல//

சர் தாங்க.. :-)))

சுபலலிதா said...

@saamrajya priyan: :)

vinthaimanithan said...

//அதுல நீங்க வந்து மாட்டுவீங்கன்னு நான் சத்தியமா நெனைக்கல.முடிஞ்சா இன்னொரு மொக்க பதிவுல சந்திப்போம்.//
ஏற்கனவே இருக்குற ஆளுக்கொரு தனித்தனி ப்ளாக்கு பத்தாதுன்னு நானும் என்னோட ஃப்ரண்டும் சேர்ந்து புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிக்க, அதை தமிழ்மணத்துல சேர்த்துட்டு நம்மள மாதிரி எத்தன சீவராசிங்க வெயிட்டிங் லிஸ்ட்டுல இருக்குன்னு செக் பண்ண, அதுல உங்க ப்ளாக்கும் ஒண்ணுன்னு லிஸ்ட்டு சொல்ல, நானும் அப்பாவியா உள்ள வந்து படிக்க....

ஹப்பப்பப்பா... இப்பவே கண்ண கட்டுதே! :)))

சுபலலிதா said...

@விந்தைமனிதன்: இந்த மாதிரி கொறஞ்ச பட்சம் பத்து பேராவது பீல் பண்ணனும்ங்கறது நம்ம குறிக்கோள்.இப்பத்தான் ரெண்டு பேர பீல் பண்ண வச்சிருக்கேன்.பாப்போம்.இன்னும் எத்தன பேரு மாட்றாங்கன்னு.வருகைக்கு நன்றி:)

மதுரை சரவணன் said...

அட பாவமே! உங்க டச் ரெம்பவே சுவரசியமாக இருக்கு .. . சீக்கிரம் படிச்ச கதையை பிட் எதுவும் சேர்க்காம சொல்லுங்க.. மொக்கப்போடுறதுன்னு முடிவு பண்ணினதுக்கப்புறம் கலங்கக்கூடாது..

சுபலலிதா said...

@ மதுரை சரவணன்:தங்களின் ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

அன்பழகன் said...

NEENGA ENNA MATHIRI PADIKIRENGA

சுபலலிதா said...

@ THA.ANBALAGAN:PhD in Computer Science Engg...

Sakthi said...

adade.. welcome..

சுபலலிதா said...

@sakthi: thanks :)

somubharathi said...

தோழர் வணக்கம் ,
தமிழகத்தில் இருந்து சித்திரை கடைசியில் வர இருக்கும் உப்பங்காற்று காலாண்டு இதழுக்கு படைப்பு கைவசம் இருந்தால் அனுப்பி உதவி செய்யவும்.

தோழமையோடு ...
அன்பழகன் -9487249209
thamuanbalagan@gmail.com
uppangkartru2012@gmail.com

Post a Comment