Tuesday, July 6, 2021

எனது பயணங்களில் ...

 

ஒரு வருடத்திற்கும் மேல ஆயிருக்கு தமிழ் வலைப்பூல பதிவு எழுத.என்ன காரணம் சொன்னாலும் அது பொருத்தமானதா இருக்காதுன்னு நினைக்குறேன். நேரா பதிவிற்கே போயிடுறேன்.இத பத்தி ரொம்ப நாளா எழுதணும்னு நெனச்சிட்டு  இருந்தேன் . என்னோட எஸ்.ஆர்.எம் ல கூட வேலைபார்க்குற தோழி ஹெலன் கூட நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள பத்தி தான். ஹெலனும் நானும் ஒரே அபார்ட்மெண்ட் கூட.

 என்ன மேலோட்டமா பார்க்குறவங்களுக்கு பழக ரொம்ப இனிமையா தோணலாம். (இது சத்தியமா என் கருத்து இல்ல :) மத்தவங்க சொன்னது ). ஆனா அது உண்மை இல்ல . என்கூட ரொம்ப தூரம் பயணிக்கிறது ரொம்ப கஷ்டம். . என்னோட  குடும்பத்தினர் முக்கியமா செல்வா மற்றும் என் மகள், டக்கோலா  (அண்ணா பல்கலைக்கழகம்) நண்பர்கள் ,கல்லூரி நண்பர்கள், மற்ற சில எஸ் ஆர் எம் நண்பர்கள் கிட்ட கேட்டா நெறய சொல்வாங்க. 

 

அந்த லிஸ்டுல ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி சேர்ந்தது ஹெலன் . ரெண்டு பேரும்  சேர்ந்துதான் காலேஜ் போவோம் . எங்க அபார்ட்மெண்ட்  மெயின் ரோட்டுல இருந்து கொஞ்சம் உள்ள இருக்கிறதால ஆட்டோல போய் அதுக்கப்புறம்  கல்லூரி பேருந்தை புடிப்போம். காலேஜ்ல இருந்து திரும்பி வரும்போது நடந்தே வீட்டுக்கு போவோம் .  வர வழில அஞ்சலி பேக்கரி போயி நடந்த கலோரீஸ பேலன்ஸ் பண்ணிடுவோம். அஞ்சலி பேக்கரில ஒரு தாத்தா இருப்பாரு. ஒரு வாட்டி  60 ரூபாய்க்கு பொருட்கள் வாங்குனோம் . 100 ரூபா குடுத்ததுக்கு அவரு 200  ரூபா திருப்பி குடுத்தாரு.  நாங்க ஸாக்  ஆயிட்டோம். ஒவ்வொரு வாட்டியும் இப்படித்தான் . ஓரளவுக்கு அந்த தாத்தா மாதிரிதான் நானும். இன்னமும் எனக்கு இந்த 100 ரூபா நோட்டும் 200 ரூபா ஒரே குழப்பமா இருக்கும் . கடையில பேலன்ஸ் குடுத்தா அத செக் பண்ண மாட்டேன் ஏனா கண்டிப்பா கன்ப்யூஸ் ஆவேன்.

 

நாங்க வழக்கமா போற சூப்பர் மார்க்கெட்ல வேல செயறவங்களுக்கு என்ன பத்தி தெரியும் .அவங்களே கரெக்டா பேலன்ஸ் செக் பண்ணி குடுப்பாங்க. ஒரு வாட்டி புது கடைக்கு போனோம் . அந்த கடையில இருந்த பொண்ணு பேலன்ஸ் செக் பண்ணுங்கக்கானு சொல்லுச்சு . நான், " நீங்களே கரெக்டாதான் குடுத்திருப்பீங்க .நான் செக் பண்ணாதான் பிரச்சனை ஆகும்" னு சொன்னேன் . அவங்களுக்கு புரியல . உங்கள பத்தி புரியிறத்துக்கு முன்னாடி இங்க இருந்து கெளம்பிடுவோம் வாங்கனு ஹெலன் சொன்னாங்க :)

 

ஆட்டோல போறோம்னா எப்பவுமே நான் கட்டணத்தை பத்தி பேச மாட்டேன் .ஆட்டோ காரர் என்கிட்டே எவ்ளோ குடுப்பீங்கன்னு கேப்பாரு . நான், இதோ இவங்க இதுக்கு பதில் சொல்வாங்கன்னு சொல்வேன். ஏனா நெறய முறை, ஆட்டோக்காரர்  மயிண்ட்லயே 60 ரூபா இருக்கும்  அதுதான்  யூசுவல் கட்டணமா இருக்கும்.ஆனா நான் 80 ரூபா ஓகே வானு கேப்பேன் . அதனால எப்பவுமே கட்டணம்லாம் டீல் பண்றது ஹெலன் தான். இதனால என்கிட்டே நெறய காசு இருக்குன்னு நெனைக்க வேணாம் :) :) அப்டி இல்ல . மணி ஹண்ட்லிங்ல  எப்பவுமே புவர் தான். இப்போதான் நெறய மாறி இருக்கேன் . பர்ஸ் தொலைக்கறதெல்லாம் ஒரு காலத்தில எனக்கு ரொம்ப சகஜமான ஒரு விஷயமா இருந்துச்சு .அது மாநகராட்சி பேருந்துல போன காலங்கள். ஒரு 6 வாட்டியாது ஏட்டி எம் கார்டு அப்ளை பண்ணி இருப்பேன்.

 

 

நானும் ஹெலெனும் நெறய ஷாப்பிங் பண்ணுவோம் .என்  மகளும் அவங்க மகளும் ஒரே ஸ்கூல் ஒரே வகுப்பு கூட . அவங்களையும் கூட்டிட்டு போவோம். சமீபத்தில ஒரு துணி கடைல நாங்க ரெண்டு பேரும்  ட்ரெஸ் எடுத்த விதத்த அந்த கடைல ரொம்ப பாராட்டினாங்க. வீட்ல போடறதுக்கு நயிட்டி வாங்குனோம் . அதுக்கு அந்த கடைல இருந்தவங்க என்ன மாதிரி டிசைன் வேணும்னு கேட்டாங்க. வீட்ல போடறதுக்கு எதுக்கு  டிசைனு? எதோ ஒரு டார்க் கலர் குடுங்கன்னு சொன்னோம் .அதுக்கு அவங்க. ப்ளீஸ் இன்னொரு வாட்டி அந்த வார்த்தையை திருப்பி சொல்லுங்களேன்னு சொன்னாங்க. ஏன் எதுக்குனு கேட்டோம் . அப்போதான் எங்களுக்கு தெரிஞ்சுது  நயிட்டி எடுக்க கூட பெண்கள் எவ்ளோ நேரம் செலவழிக்குறாங்கனு .சில பேரு  ஒரு மணி நேரம் பாத்துட்டு எதுவுமே வாங்காம கூட போவாங்களாம் . என்ன கொடும  இது.

 

எனக்கு ஒரு   சிலர்ட்ட மட்டுமே கம்பர்ட்டபிலா இருக்கும். நேரத்துக்கு தகுந்த மாதிரி பேசுறது , உண்மையின்மை இதெல்லாம் என்னால ஏத்துக்க முடியாத விஷயங்கள் . ரொம்ப சென்சிடிவ்ங்கிறதாலயும்  அத காட்டிக்கவும் தெரியாததால நண்பர்கள் சூஸ் பண்றதுல ரொம்பவே கவனமா இருக்கேன் இப்போல்லாம். ஹெலன் அந்த வகைல நெஜமாவே எனக்கு மிகப் பெரிய பலம். அவங்க மூலமா சுப்ரஜா அப்படிங்கிற இன்னொரு தோழியும் கெடைச்சாங்க. என்கூட வேலை செய்றாங்க . ரொம்ப இன்டர்ஸ்டிரிங் கேரக்டர்.  ஆனா அவங்க ஹெலெனலாம் வேற டிபார்ட்மென்ட் . வாழ்க்கையில ஒரு குறிக்கோள நோக்கி போறவங்கள எனக்கு ரொம்ப புடிக்கும். குறிப்பா பெண்கள் :)  அதே சமயம் நேர் வழில மத்தவங்களுக்கு எந்த பாதகமும் இல்லாம இருக்கிறவங்க எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும்.

 

இப்போ நான் எழுதப்போற லைனுக்கு  கண்டிப்பா ஹெலன் டென்ஷன் ஆவாங்க . நெறய சாரி தேங்க்யூ சொல்வேன் .எப்பவுமே என்ன கிண்டல்  பண்ணுவாங்க  ஆனா இத சொல்லியே ஆகணும் .என்ன மாதிரி ஒரு கேரக்டரோட பயணிக்குறது எவ்ளோ கஷ்டம்னு எனக்கு நல்லா தெரியும் . இருந்தும் இன்னமும் கூட  பயணிப்பதற்கு மிக்க நன்றி  ஹெலன் :) :) :)

 

படித்த உங்களுக்கும் மிக்க நன்றி :)

சுபலலிதா