Tuesday, December 31, 2013

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டு  உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைய என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். 

Monday, October 28, 2013

ரயில் பயணங்களில்- part 1

 இந்த பதிவ கிட்டதட்டடைப் பண்ணி முடிக்கும்போது இந்த யாகூ தட்டச்சு சொதப்பிருச்சு. கூகுள் தட்டசுக்கு என்ன ஆச்சுன்னு தெறியல.  அதுல டைப் பண்ண முடியல. பாப்போம் இந்த வாட்டி சொதப்பாம முடிக்குரனானு. இப்படி இன்னைக்கு எழுதியே  தீரணும்னு ு நான் நெனைக்குறதுக்கு காரணம் இன்னைக்கு காலைல ரயில்வே ஸ்டேஷன்ல பாத்த சம்பவம். காலைல தாம்பரம் ஸ்டேஷன்ல எட்டு முப்பது ட்ரைன எப்பவும் போல மிஸ் பண்ணிட்டேன் . அப்போ என்னாச்சு ஒரு அம்மா தன்னோட பத்து வயசு கொழந்தய முதல்ல ரயில்ல ஏத்திட்டு அவங்க ஏற முயற்சி பண்ணாங்க ஆனா முடியல. அதுக்குள்ள ரயில் வேகமா கெளம்பிருச்சு. கொழந்த அழ ஆரம்பிச்சுருச்சு. அந்த அம்மா அதிர்ச்சில அப்டியே நின்னுட்டாங்க. அப்போ அந்த ட்ரைன மிஸ் பண்ண ஒருத்தர் வேகமா ஓடி ட்ரைன்ல ஏறி அலேக்கா கொழந்தய தூக்கி பின்ன சூப்பரா ஜம்ப் பண்ணி கொழந்தய அவங்க அம்மாட்ட குடுத்தாரு. சூப்பர்ல. வேகமா போற ரயில்ல ஏறக்கூடாதுன்னு மிஸ் பண்ண ஒருத்தர் ஒரு கொழந்தைக்காக ஏறி  அந்த ரயில மறுபடியும் மிஸ் பண்ணி......ச  சூப்பர்.  அந்த கொழந்த அழூம்போது எல்லாருமே ஒரு நிமிஷம்  ஸ்தம்பிச்சு நின்னப்ப டக்குனு களத்துல எறங்குற தைரியம்  அவர் ஒருத்தற்குத்தான் இருந்தது. இப்பிடி மனுஷங்களாலதான் மழ பெய்யுது போல. படிச்சதுக்கு நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம். 

Sunday, June 16, 2013

என் இனிய சொதப்பல்கள் - பகுதி- ?

அதென்ன பகுதி -? அப்டின்னு நெனைக்குறீங்களா ? எதோ கொஞ்சம் சொதப்பி இருந்த கவுண்ட் கரெக்டா தெரியும் .ஏக போகமா சொதப்பி இருகோமா . அதான் அந்த கேள்வி குறி . சரி ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வருவோம். இந்த ஆண்டின் முதல் பதிவு (கொஞ்சம் லேட் தான் இல்ல ?). ரொம்ப வருஷமா எழுதனும்னு நெனச்சுட்டு இருந்த ஒரு பதிவு. கடந்த காலத்த அப்பிடியே மனக்கண்  முன்னால கொண்டுவந்தா சட்டுன்னு
செம்ம பிக்சர் க்லாரிட்டியோட ஞாபகத்துக்கு முந்திட்டு வரது பள்ளி நாட்கள்தான்.  இந்த பதிவும் பள்ளி நாட்கள்ல நடந்த ஒரு சின்ன நிகழ்வப்பத்திதான்.

அப்போ நான் ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். ஒரு நாள் என்னோட வகுப்பறைக்கு ஒரு சர்குலர் வந்துச்சு . அதுல இந்த தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்குற ஒரு மாணவி பள்ளி தலைமை ஆயசிரியையை  சந்திக்கணும் அப்பிடினு இருந்துச்சு. அப்போ  லஞ்சு டைம்னு நெனைக்குறேன். சரி ஏதாது  வம்பான வெவகாரமா இருக்கும்னு  அப்போதைய வகுப்பு மாணவர்   தலைவி செல்வி சுமித்ரா  என்ன விஷயம்னு கூட சொல்லாம ஹெச் எம் ஒன்ன கூப்டாங்கன்னு சொன்னா .  சுமித்ராக்கு என் மேல என்ன காண்டோ தெரியல. சரி நானும் ஹெச் எம்ம  போய் பாத்தேன் . அங்க என்ன மாதிரியே நெறைய பேர் ஆல்ரெடி இருந்தாங்க. விஷயம் என்னன்னு அவங்ககிட்ட கேட்டுப்பாத்தேன். அங்கயும் வொய் ப்ளட் சேம்   ப்ளட்  கதைதான். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு எங்க எல்லாரையும் கெடா வேட்டபோற மாதிரி இன்னொரு பில்டிங்குக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கப் போனா நெறைய அங்கிள்ஸ் காதுல ஹெட் செட்டோட ஒக்கந்துருந்தாக . இதென்னடா  வம்பா போச்சுன்னு மனசுக்குள்ள பீதி கெளம்ப  முழிச்ச எங்க எல்லாரையும் பாத்து, அங்க இருந்த ஒரு அங்கிள் , "நாங்க வானொலி நிலையத்ல இருந்து வரோம் . நீங்க எல்லாம் ஒரு சின்ன பேட்டி குடுக்கணும்னு சொன்னாரு". அப்போ என் மனசு பூரா நெறஞ்சு இருந்தது என் சக மாணவி சுமித்ரா தான். இப்பிடி நம்மள கோர்த்து விட்டுட்டாளேன்னு ஒரு அங்கலாய்ப்பு . ஏற்கனவே பீதில இருந்த எனக்கு இன்னொரு பெரிய பீதி காத்துட்டு இருந்தது . அந்த ரேடியோ அங்கிள் ,"நீங்க எல்லாரும் உங்க பள்ளி நூலகத்த பத்திதான் எனக்கு பேட்டி கொடுக்கப்போறீ ங்கன்னு சொன்னாரு". என்னது நம்ம பள்ளிகூடத்துல நூலகமா ? அது எங்க இருக்குனு யோசிச்சிட்டு இருந்தப்ப தான் யாரோ பக்கத்துல்ல இருந்தப் பொண்ணு சொல்லிச்சி நம்ம இப்போ ஒக்காந்துட்டு இருக்குற எடம்தான் நம்ம ஸ்கூல் லை ப்ரேரின்னு . லைப்ரேரியாஅப்போ புக்ஸ் எங்க? எனக்கு ஒரே கொழப்பமா இருந்துச்சு .அப்போ அந்த அங்கிள் எல்லாருக்கும் ஆல் தி பெஸ்ட் நல்லா பேசுங்கன்னு சொன்னது எனக்கு மட்டும் நல்லா சொதப்புங்கன்னு சொன்ன மாதிறியே கேட்டுச்சு. எனக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா ? நீங்க எந்த மாதிரி புக்ஸ் லைப்ரரில படிப்பீங்க ?. லைப்ரரி எங்க இருக்குன்னே இன்னைக்குதான் கண்டு புடுச்சிருக்கோம் .அதுக்குள்ல எங்க படிக்குறது?கொஞ்சம் எங்களுக்கும் டைம் கொடுக்கணும்ல . நான் கொஞ்சம் தயங்கினது அந்த அங்கிளுக்கு புருஞ்சிருக்கும் போல .சும்மா எதாச்சும் சொல்லுமா . நல்ல மனுஷன் . நானும்,  எனக்கு கவிதைலாம் புடிக்கும்னு சொன்னேன். உடனே அவரு புது கவிதையா இல்ல மரபுக் கவிதையானு கேட்டாரு . இப்பதான இவர நல்லவர் னு நெனச்சோம் .அதுக்குள்ள ஏன் இவரு பேர கேடுதுக்குறார்னு நெனசுக்குட்டேன் .உடனே நானு ,"ரெண்டும் படிப்பேன்னு  "ஒரு பொதுவான பொய்ய சொல்லி சமாளிச்சேன். ஆனா அந்த அங்கிள் நேஜாமாலுமே நல்லவர்தான். அந்த ஒரு கேள்வி தான் கேட்டாரு. இந்த மாதிரி எல்லார்ட்டயும் ஒரு கேள்வி கேட்டு முடிச்சு நாங்க அங்க இருந்து கெளம்பிட்டோம். அப்புறம் அந்த பேட் டி ரெண்டு நாள் கழிச்சு ஒலிபரப்பு ஆகும்னு  ஹெச் எம் மைக்குல அனௌன்ஸ் பண்ணாங்க . கிளாஸ்ல எல்லாருக்கும் ஒரே குஷி . கொஞ்சம் சந்தோஷமா இருந்தாலும் உள்ளுக்குள்ள என்னமோ ஒரு டென்ஷன் இருந்துச்சு. வீட்டுக்கு வந்து சொன்னப்போ அப்பா அம்மா தம்பிங்க எல்லாரும் சந்தொஷப்பட்டாங்க .அன்னிக்கு ராத்திரி ரொம்ப நேரம் வீட்ல எல்லாரும் ஒக்காந்து சந்தோஷமா பேசிட்டு இருந்தோம்

மறு நாள் காலைல அப்பா பாட்டி சீரியஸ்னு திருநெல்வேலிக்கு கெளம்பிட்டார் . நம்ம டைம் சூப்பரா வொர்க்கௌட் ஆக ஆரம்பிச்சுருச்சு .பாட்டி டென்ஷன் ஒரு பக்கம் ரேடியோல  பேட் டி கேக்கனும்ங்  டென்ஷன் இன்னொரு பக்கமா இருந்துச்சு. அப்போதான் பாட்டி இறந்த தகவல் வந்துச்சு. சரி ரேடியோ பேட்டி அம்பேல்னு அந்த பீலிங்க  மூட்ட கட்டிட்டு நானும் எங்க ஊருக்கு போய் ட்டேன் . இந்த ரேடியோ விஷயம் பத்தி என் பெரியம்மா பொண்ணு கிட்ட சொன்னேன். உடனே அவ  சொன்னா, "ஒன்னும் கவலைப்படாத . அந்த நிகழ்ச்சிய நீ இங்க கூட கேக்கலாம்னு என்ன சமாதானபப்டுத்துனா ". சென்னை ரேடியோ ஸ்டேஷன் வேற நெல்லை ஸ்டேஷன் வேறன்ற டெக்னாலஜி லாம் எங்க ரெண்டு பேருக்கும் தெரியல. எங்க ஊர் செம்ம கிராமம் . ரு  சில வீட்லதான் ரேடியோவே இருக்கும் . நானும் என் பெரியம்மா பொண்ணும் ரேடியோ இருக்குற வீட்ட கண்டு புடிச்சி ரேடியோ கேட்டோம் . ஒன்னும் நடந்த பாடு இல்ல . சரி நாளைக்கு ஒலிபரப்புவாங்கனு,  தொடர்ந்து ஒரு அஞ்சு நாளைக்கு அந்த வீட்டுக்கு நடையா நடந்தோம் . அப்புறம் என்ன ? மாத்தம்தான் மிச்சம். பெரியவங்ககிட்ட   ஒழுங்கா விஷயத்த சொல்லி இருந்தா அட்லீஸ்ட்டு   வெட்டியா நடந்ததாவது தவிர்த்து இருந்திருக்கலாம். நம்ம டைம் அப்டி


சரி  ஒரு வழியா சென்னை வந்து ஸ்கூலுக்கு போனேன் . அப்போ என் வகுப்பு ஆசிரியை திரு. வசந்தகுமாரி மேடம் என்ன கூப்ட்டு ,"நான் நீ ரேடியோல பேசினத கேட்டன்னு சொன்னாங்க ". வெந்த புண்ணுக்கு மருந்து போட்ட மாறி இருந்துச்சு . அப்புறமா நான் யோசிச்சப்பதான் எனக்கு ஒன்னு வெளங்குச்சு . மேடம் பேசுனத கேட்ட ன் னு சொன்னாங்க .நல்லா பெசுனனா இல்ல சொதப்புனானு சொல்லலையே . அவங்கள்ட்ட போய் கேக்கவும் பயம் . வேற யாரும் கேக்கவும் இல்ல . ஏன் நானே கேக்கல பின்ன எப்டி தெரிஞ்சுக்குறது . அது போகட்டும் அந்த லைப்ரேரில ஏன் புக்ஸ் இல்ல ?இன்னைக்கு வரைக்கும் அந்த கேள்விகள்  என் மனசுல ஒரு புதிராவே இருக்கு. பீலிங்க்ஸ் பீலிங்க்ஸ். நாங்களும் பீலிங்க்ஸ் எண்டிங் கொடுப்போம்ல . இன்னுமா படிக்குறீங்க . நீங்க நியாயத்துக்கு நல்லவங்க போங்க . இவ்ளோ தூரம் படிச்சு இருக்கீங்க . அதோட விடுவோமா . இன்னும்  இருக்கு . படிங்க . இந்த பதிவுல எவ்வளவோ எழுத்து  பிழை இருந்தும் கடைசி வரைக்கும் படிச்சீங்க பாருங்க . உங்க தமிழ் ஆர்வம் எனக்கு ரொம்ப புடுச்சி இருக்குங்க . சாரி லைட்டா கலாய்ச்சுட்டனா. ரொம்ப நன்றி இந்த பதிவ படிச்சதுக்கு (கலாய்ச்சாலும் நன்றி உணர்ச்சி உள்ளவங்க நாங்க ). அடுத்த பதிவில் சிந்திப்போம்

-